ஜோதிட விதிகள் :

ஜோதிட விதிகள் : தத்துவார்த்தமான / ஆராய்ச்சி மனம் படைத்த புத்திசாலிகளின் ஆளுமைக்கான ஜோதிட விதிகளைப் பார்ப்போமா !!!!!!

முந்தைய பதிவில் உள்ள தத்துவார்த்தமான / ஆராய்ச்சி மனம் படைத்த புத்திசாலிகளின் ஆளுமைகளிலிருந்து நாம் கேது குணநலன் களையும் , புத்திசாலித்தனம் எனும்போது அது புதன் குணநலன்களையும் பார்க்கமுடிகிறது. இதன் மூலம் இவர்கள் எண்ணங்களில் கேதுவும், செயல்பாடுகளில் புதனும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் எனப்புரிகிறது
மேலும் ஜோதிட ரீதியாக லக்னம் என்பது ஒரு ஜாதகருக்கு உள்முகமாக ( Internal ) செயல்படும். ராசி என்பது ஒரு ஜாதகருக்கு வெளிமுகமாக ( External ) செயல்படும் அடுத்ததாக கேது புத்திபாவகமான ஐந்தாம் பாவகத்திற்கும் , புதன் செயல்பாடு பாவகமான பத்தாம் பாவகத்திற்கும் செயல்படுகிறார் என்பதை ஜாதகரது இயல்பு மூலம் நாம் அறியலாம்.

கீழ்க்காணும் விதிகளுக்கு முன்னதாக புத்திசாலித்தனம் எனும்போது ஐந்தாம் அதிபதி வலிமை என்பது தான் மிக மிக முக்கியமானது என்று வலியுறுத்தப்படுகிறது. ஆகையால் ஐந்தாம் அதிபதி ஆட்சி / உச்சம் / வர்கோத்தம் பெற்று கேந்திரத்தில் அமரவேண்டும். லக்னாதிபதி மற்றும் ராசியதிபதி வலிமை என்பது அவ்வளவு முக்கியமானது இல்லை என்றாலும் லக்னாதிபதி மற்றும் ராசியதிபதி கெடாமல் இருக்க வேண்டும்(நீசம் , 6,8,12 ம் பாவகங்களில் மறைவது)
.
1) லக்னத்திற்கு கேது தொடர்பு மற்றும் ராசிக்கு புதன் தொடர்பு
2) ஐந்தாம் பாவகத்திற்கு கேது தொடர்பு மற்றும் பத்தாம் பாவகத்திற்கு புதன் தொடர்பு
3) லக்னாதிபதிக்கு கேது தொடர்பு மற்றும் ராசியதிபதிக்கு புதன் தொடர்பு
4) ஐந்தாம் பாவகாதிபதிக்கு கேது தொடர்பு மற்றும் பத்தாம் பாவக அதிபதிக்கு புதன் தொடர்பு
5) கேது மற்றும் புதன் ஒன்றுக்கொன்று தொடர்பு
6) கேது மற்றும் புதன் இரண்டு கோள்களும் நீசம் பெறாமல், லக்னம் / ராசிக்கு ஆறு, எட்டு , பன்னிரண்டாம் பாவகங்களில் மறையாமல் இருக்கவேண்டும்.
மேலே கொடுக்கப் பட்டுள்ள விதிகளில் ஒரு விதி ஒத்து வந்தாலே அந்த ஜாதகர் :தத்துவார்த்தமான / ஆராய்ச்சி மனம் படைத்த புத்திசாலிகளின் இயல்பு கொண்டவர் எனவும் மூன்று அதற்கு மேல் விதிகள் ஒத்து வருபவர்கள் அதிக அளவு தத்துவார்த்தமான / ஆராய்ச்சி மனம் படைத்த புத்திசாலிகளின் இயல்பு கொண்டவர்கள் என முடிவு செய்யலாமே !!!
குறிப்பு : இங்கு தொடர்பு என்பது கோள்களின் இணைவு , பார்வை மற்றும் நட்சத்திர சாரம் என எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இந்த விதிகள் மற்ற புத்திசாலிக்கான வடிவமைப்பில் தான் இருக்கும் கோள்கள் இங்கு கேது மற்றும் புதன் என மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். இதை ஏன் தருகிறேன் என்றால் புதிதாக உள்ளவர் களுக்கும், அனுபவம் குறைந்த ஜோதிடர்களுக்கு சிரமம் இல்லாமல் இருப்பதற்காக ஒவ்வொரு ஆளுமைகளுக்கும், அந்தந்த கோள்களை மாற்றித் தருகிறேன்.

பொதுவாகவே கேது மறை பொருள் குறித்து ஆராயும் ஆர்வம் உள்ளவர் அக்கோளுடன் புத்திசாலிக்கோளான புதனுக்குரிய சுயநலமும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும், இவர்கள் எதையாவது நோண்டி நோங்கு எடுத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் ஜோதிட அடிப்படையின் படி இவ்விரு கோள்களும் ஒன்றுக்கொன்று பகை என்பதால் அந்த ஆராய்ச்சி தனக்கோ / சமுதாயத்திற்கோ பயனளிக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். அதனால் ஒரே விஷயத்தை எடுத்துக் கொண்டு சுயநலமின்றி, பொதுநலம் குறித்து ஆராய்வது / உழைப்பது எனச் செய்தால் இவர்கள் சமுதாயத்திற்கு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பல துறைகளில் புதுமைகளை படைப்பார்கள் எனச் சொல்லலாமே !!!!!!

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-