குஜபகவானின் ஜோதிட சூட்சுமங்கள்:-
குஜபகவானின் ஜோதிட சூட்சுமங்கள்.
_____________________________
கால புருஷ தத்துவத்திற்கு முதல் வீட்டிற்கும் , எட்டாம் வீட்டிற்கும் , அதிபதியாக வரும் செவ்வாய் பகவான், இயற்கையில் அனைவரின் ஜாதக அமைப்பிற்கும் உயிர் , ஆயுள், தனது வாழ்க்கை துணையின் மூலம் அதிர்ஷ்டம் பெரும் அமைப்பு , உடல் ஆரோக்கியம் , வீரம் , குடியிருக்கும் வீட்டின் தன்மை , ஜாதகரின் குண இயல்பு , ஒழுக்கம் , போராட்ட குணம் அதனால் வரும் நன்மை , திடீர் மக்கள் செல்வாக்கு , மன உறுதி , வாழ்க்கையில் வரும் திடீர் முன்னேற்றம் , அயராத உழைப்பு திறன் , தொழில் நுட்ப ஆற்றல் , தொழில் துறையில் சிறந்து விளங்கும் ஆற்றல் , சிறந்த நிர்வாக திறமை , மற்றவர்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தை தரும் அமைப்பு , போன்ற விஷயங்களை 100 சதவிகிதம் விருத்தி செய்து தரும் அமைப்பை பெற்றவர் ஆகிறார் .
செவ்வாய் பகவான் நல்ல நிலையில் ஒரு ஜாதக அமைப்பில் அமரும்பொழுது மேற்கண்ட பலன்களை விருத்தி செய்து தருவதில் செவ்வாய் பகவானுக்கு நிகர் அவரே ! இருப்பினும் அதிக நன்மையான பலன்களை, செவ்வாய் பகவானால் நன்மை அனுபவிக்கும் சில அமைப்பை பற்றி, இந்த பதிவில் காணாலாம்.
எந்த லக்கினம் என்றாலும் , செவ்வாய் பகவான் தனது வீடுகளான மேஷம் , விருச்சக பாவகங்களுக்கு , 2 , 5 , 6 , 8 , 9 , 12 வீடுகளில் அமர்ந்தால் மட்டுமே , மேஷம், விருச்சக ராசிகள் எந்த பாவக அமைப்பை பெறுகிறதோ அந்த பாவக வழயில் இருந்து ஜாதகர் தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வருகிறது , மேலும் அந்த பாவகங்கள் சர ராசியாகவோ , பாதக அமைப்பை பெரும் பொழுது மட்டுமே ஜாதகர் அந்த வகையில் இருந்து தீமையான பலனை அனுபவிக்க வேண்டி வருகிறது .
எடுத்து காட்டாக :
ஒரு மேஷ இலக்கின ஜாதகருக்கு , செவ்வாய் லக்கினத்தில் இருந்து 2 ல் அமரும்பொழுது தனம் ,குடும்பம் ,வாக்கு என்ற அமைப்பில் தீமையான பலனையும் , 5 ல் அமரும்பொழுது பூர்விகம் , குழந்தை பாக்கியம் ,பரதேஷ ஜீவனம் என்ற அமைப்பில் தீமையான பலனையும் , 6 ல் கடன் , உடல் நோய்,மன நோய் , உடல் உபாதை, சிறு இழப்பு என்ற அமைப்பில் தீமையான பலனையும், 8 ல் திடீர் பேரிழப்பு , விபத்து , எதிர்பாராத இழப்புகள் , தற்கொலை செய்துகொள்ளும் மன நிலை, என்ற அமைப்பில் தீமையான பலனையும் .
9 ல் பொதுகாரியங்களில் கெட்ட பெயர் , மரியாதை இன்மை , பொது மக்களால் பாதிப்பு , சமுதாயத்தில் பெயருக்கு களங்கம் என்ற அமைப்பில் தீமையான பலனையும், 12 விரக்தி மன நிலை , மன போராட்டம் , உணர்ச்சி வசப்படுவதால் இழப்பு , தூக்கம் இன்மை , சரியான வயதில் எவற்றையும் அனுபவிக்கும் யோகம் அற்ற நிலை அனைத்திலும் தாமதம் என்ற அமைப்பில் தீமையான பலனையும் ஜாதகர் அனுபவிக்க வேண்டி வரும் , அதிலும் குறிப்பாக இந்த லக்கினத்திற்கு 5 ம் பாவகத்திலும் , 8 ம் பாவகத்திலும் செவ்வாய் அமரும் பொழுது பலன்கள் கொஞ்சம் கடுமையானாதாகவே இருக்கிறது , லக்கினாதிபதி என்றாலும் ஜாதகருக்கு இந்த பாவக அமைப்பில் இருந்து 100 சதவிகிதம் தீமையான பலன்களை தருகிறார் . மற்ற பாவகங்களில் அமரும் செவ்வாய் ஜாதகருக்கு மிக சிறப்பான யோக பலன்களை தருவதில் தவறுவதில்லை .
மேற்கண்ட முறையில் மற்ற இலக்கின அமைப்பில் செவ்வாய் பகவானால் பாதிக்கப்படும் ஜாதக அமைப்பை பெற்றவர்கள் , வளர்பிறை செவ்வாய் கிழமை அன்று மாலை 4 மணிக்கு பழனி மலைக்கு சென்று பால தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேகம் செய்து , 6 மணிக்கு மேல் ராஜ அலங்கார தரிசனம் செய்து வரும் அனைவருக்கும் செவ்வாய் பகவானால் வரும் கடுமையான பாதிப்புகள் நிச்சயம் குறையும் , மேலும் போகர் ஜீவ சன்னதியில் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது ஜாதகருக்கு , செவ்வாய் பகவான் சகல வளங்களையும் நலன்களையும் நிச்சயம் வாரி வழங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . மேலும் எவ்வித செவ்வாய் பாதிப்புகளில் இருந்து ஜாதகரை விரைவில் மீட்டெடுத்து பரிபூரண நல வாழ்க்கையை ஜாதகருக்கு வழங்குகிறது இந்த திருத்தலம் .
மேலும் தனது பாவகத்திர்க்கு எட்டில் சர ராசியில் செவ்வாய் அமர்ந்தால் மட்டுமே , ஜாதகர் விபத்தில் சிக்க வேண்டி வருகிறது , அதுவும் சம்பந்த பட்ட எட்டாம் வீட்டின் பலனை , நடப்பு திசை, புத்தி, அந்தரம் ,சூட்சமம் நடத்தினால் மட்டுமே .
Comments
Post a Comment