புதாத்ய யோகம்

புதாத்ய யோகம்
மேஷம் : -
லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 3-6-ஆம் அதிபதியாகி ஆதிபத்திய விசேடமற்று இருந்தாலும் 3-6-ல் இருக்கும்போது தன் சுயபலத்தின் அடைபயில்
நற்பலன்களைத்தருவர் .
1-3-5- ல் அல்லது 6 ஆம் இடங்களில் யோகம்.அமையப் பெறுவது நல்லது.
1ல் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். யோகம் சிறப்படையும். 5-ல் அமைந்தால் சிறப்படையும்.
3-ல், 6-ல் புதன் ஆட்சி பலம் பெறுகிறார். ஜாதகர் /ஜாதகி சுய முயற்சியில் பணக்காரர் ஆவார்கள் சுக வாழ்வு அமையும் .
அஸ்தங்கம் பெறாமலிருக்க வேண்டும். புத ஆதித்திய யோகபலனை அடைவர்கள்.
மேஷ லக்கினத்திற்கு 4-8-ல் புதன் பலம் குறைந்து காணப்படும். 8-ல் சூரியன் பலம் குறையும்.5-ஆம் அதிபதி 8-ல் நலம் தருவதில்லை.
ராகு,கேது,சனி, இணைவு,பார்வை இருந்தால் நலம் தருவதில்லை .
ரிசபம் : -
லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 4-ஆம், புதன் 2-5-ஆம் அதிபதி ஆகிறார். இதனால் 2+4, 2+5, 4+5- ஆகிய அதிபர்களின் சேர்க்கையாகிறது. இந்த சேர்கையால் தனயோகம், மாகயோகம், வித்யா யோகம் அமையும்.
சூரியன், புதன் இணைந்து 2-5-4-7-10-ல் இருந்தால் நற்பலன்களின் அளவு கூடும். 11-ல் இருந்தால் நீச்சபங்கம் பெற்றால் சிறப்பைத்தரும். அந்தந்த இடத்து ஆதிபத்திய விசேடங்களை பொறுவர்கள்.
10 ல் சனி வீட்டில் சூரியன் நலம் தராது.
மிதுனம் : -
1-4+3-ஆம் அதிபதி இணைவு நலம் தரும் .3-ல் பல சுக போக வாழ்வு அமையும்.
1-4-ல், 10-ல் இருப்பது நலம் தரும்.
கடகம் : -
இந்த யோகம் ஏற்படுமானால் சிறப்பைத் தரும். சூரியனும், புதனும் 2-3-10-ல் அமைந்தால்
சிறப்பன யோகம் தரும்.திறமைசாலிகள், சிந்தனையுள்ளவர்ககள் .சங்கீதத்தில் வல்லவர்கள், வழக்கறிஞர், அரசியல்வாதி, உயர் பதவி கிட்டும்.

சிம்மம் : -
இந்த யோகம் அமைந்தால் சூரியன் லக்கினாதிபதி, புதன் 2-11-ஆம் இணைந்தால் சிறப்பான பலன்கள் ஜாதகர்கு அமையும்.
4-ல் அமையும் போது வித்யாபலம் கூடும். 10-ல் அமையும் போது உயர்ந்த பதவி அமையும். 9-ல் அமைந்தால் உயர்ந்த பதவி அந்தஸ்து அடைவர்கள்.
8-ல் அமைந்தால் சிறப்படையாது.
கன்னி : -
லக்கினக்காரர்களுக்குப் புதன் லக்ன, கரும ஸ்தானாதிபதி சூரியன் விரயாதிபதியும். இருவரும் இருப்பின் விசேடமான நற்பலன்கள்
குறையும். 4-ல், 7-ல், 10-ல் அமைவது சிறப்பைத் தருவர்கள். 8-ல் அமைவது நலம் தருவதில்லை.
துலாம் : -
லக்னக்காரர்களுக்குப் புதன் 9-12-ஆம் அதிபதி, சூரியன் 11 ஆம் அதிபதியாகவும், அதேநேரத்தில் பாதகாதியாகவும் ஆகிறார். பாதகாதிபதியுன் கூடியிக்கும் புதன் எவ்வித நன்மையை ஜாதகருக்கு உண்டு பண்ண முடியும்? என்றாலும் 9-11-ஆம் வீட்டுக்குடையவர்கள் ஒன்று கூடி இருந்தால் இந்த நிலையைக் கவனிக்கும்போது இச்சேர்க்கையால் ஒரளவு நற்பலன்கள் கிட்டும் வாய்ப்புள்ளது. இச்சேர்க்கை 7-9-11-ஆம் இடங்களில் அமையப்பெறுவது நல்லது 4-ல் சூரியன் இருந்தால் பலம் குறையும் நற்பலன் கிட்டாது. 8-ல் புதன் சூரியன் இணைந்து இருந்தால் நற்பலன்கள் ஏற்படாது.
3-6-10-ல் அமைந்தால் ஆதித்ய யோகம் அமைந்தால் நன்மைகள் அதிகம் ஏற்ப்படும். வெற்றியும், சிறந்த அந்தஸ்தும் கிட்டும்.
விருச்சிகம் : -
லக்கினத்திற்கு புதன் 8-11 ஆம் வீடுகளுக்கு அதிபதி அவர், சூரியன் 10-ஆம் அதிபதி அவர் 6-10-11-ல் அமைந்தால் யோகம் சிறப்படையும்.சிறந்த வியாபாரியாகவும். சுய தொழிலில் சிறப்பும். அனைவரால் புகழப்படுவர்கள். சிறந்த ஆராய்ச்சியாளர்கள்.
தனுசு :-
லக்கினத்திற்கு புதன் 7-10-ஆம் அதிபதி, சூரியன் 9-ஆம் அதிபதி இவ்விருவரின் இணைவு ராஜயோகத்தை தருவர்கள்.
புதனுக்கு கேந்திராதிபதித்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் உள்ளதால் 5-9-10-ல் இருந்தால் சிறப்பன யோகம் தரும்.கல்வி, புகழ், அரசியல், லாபங்களும்.பூர்வீக வகையில் நன்மையும் கிட்டும்.
மகரம் : -
லக்கினத்திற்கு புதன் 6-9-ஆம் அதிபதி, சூரியன் எட்டாம் அதிபதி 6-8-11-ல் இருந்தால் சிறப்பன பலனைத்தரும். விபரீத ராஜயோகம் அமையும் .தொழிலில் மேன்மையும், அரசியில் பதவியும்.செல்வாக்கும், சட்டத்துறையில் மதிப்பும் கிடைக்கும்.
கும்பம் : -
லக்கினத்திற்கு புதன் 5-8 -ஆம் அதிபதி, சூரியன் 7-ஆம் அதிபதி 3-6-10-ல் இருந்தாலும் சிறப்பன யோகம் தரும்.அரசியலில் பெரிய பதவி, செல்வாக்கும், சட்டசபைத் தலைவர்கள், நீதிபதி பதவி கிட்டும்.
மீனம் : -
லக்கினத்திற்கு புதன் 4-7-ஆம் அதிபதி, கேந்திராதிபத்திய தோஷம், பாதகதிபத்திய தோஷம் பாதிப்பை தருவர்.சூரியனுக்கு 6-ஆம் அதிபதி இணைந்துதிருந்தால் 2-4-6-10-ல் இருந்தால் சிறப்புடன் அமையும்.உயர்ந்த அந்தஸ்தும், பதவி கிட்டும்.
சூரியன் புதன் இவர்களை பார்க்கும் கிரகங்களின் நிலை, ஆதிபத்திய விசேடம் ஆகியவற்றைக் கொண்டு பலனைச் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
புதன் பலம் குறைந்திருப்பவர்கள், நுண்ணறிவுத் திறன் குறையப் பெற்றிருப்பவர்கள், மனக்குழப்பம், அடைவர்கள், நுரையீரல், சிறுநீரகம், நரம்புத்தளர்ச்சி, ஜீரண உறுப்புகளின் கோளாறு, உடல் நலம் பாதிக்கும்.
சூரிய பலம் குறைந்திருப்பவர்கள் ஆன்மபலத்தை இழப்பார்கள். இதயம் தொடர்பான நோய்கள் ஏற்ப்படும். நிர்வாகத்திரன் குரையும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-