எந்த லக்னத்திற்க்கு என்ன நோய்கள் வரும்

இன்று எந்த லக்னத்திற்க்கு என்ன நோய்கள் வரும் என்பதை சொல்லுகிறேன்.மேஷலக்னத்திற்க்கு அஜீரணம் அடிக்கடி வரும். இது நிரந்தரமாக இருக்காது.ரிஷப லக்னம் இவர்களுக்கு அடி வயிற்றில் பிரச்சனைகள் வரும் அது நாளுக்கு நாள் வளர்ச்சி அடையும். மிதுன லக்னம் இவர்களுக்கு மர்ம உறுப்பில் பிரச்சனைகள் வரும். அது நிரந்தரமாக இருக்கும். கடக லக்னம் இவர்களுக்கு மூலம் வர்க்க சம்பந்தமான நோய் வரும்.இரத்தம் சிலநாட்கள் வரும், பின் நின்றுவிடும். ஆனால் அறுவை சிகிச்சை மூலம் தான் குணமாகும். சிம்ம லக்னம் இவர்களுக்கு இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி முதல் தொடை வரை வலி வேதனைகள் வரும். கன்னி லக்னம் இவர்களுக்கு கால்மூட்டு எலும்பு முதல் கால்பாத்திற்க்கு மேல் வலி வேதனைகள் வரும்
துலா லக்னம் இவர்களுக்கு ரகசிய நோய்கள், கால் பாதம் இவற்றில் வலி வேதனைகள் வரும். விருச்சிக லக்னம் இவர்களுக்கு தலைவலி, தலைகணம்,போன்றவைகள் வரும் இது நாளுக்கு நாள் அதிகமாகும்.தனசு லக்னம் இவர்களுக்கு சர்க்கரை நோய்,பெண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் இது ஓரே நிலையானதாக இருக்கும்.மகர லக்னம் உள்ளவர்களுக்கு நரம்பு சம்பந்தமான, உணர்வு புலன்களில் பிரச்சினைகள் வரும்.கும்ப லக்னம் உள்ளவர்களுக்கு பொதுவாக நீர் சம்பந்தமான, சளி,இருதய துடிப்பு,நுரையீரல், ஆகியவற்றில் பிரச்சனைகள் வரும். இவர்கள் இளமை முதல் முதுமை வரை மருத்துவர் ஆலோசனை பெறுவது நலம்.மீன லக்னம் உள்ளவர்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய்கள், கர்ப்பப்பை நோய்கள் வரும். இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும், சிம்மத்தில் கேது இருந்து கேது சாரத்தில் இருந்தால் ஆண்களுக்கு வயிற்றில் கேன்சர் பெண்களுக்கு கருப்பையில் கேன்சர் வரும். இது காலதேவன் இட்டவிதி்.ஓம் நமசிவய.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-