தமிழ் மாதங்களும்,தெய்வங்களும்;
தமிழ் மாதங்களும்,தெய்வங்களும்;
*****************************************************
சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குள் நுழையும் நேரமே ''சங்கராந்தி''எனப்படும்.''சங்க்ரம்''என்றால் ''கலப்பு'',அந்த'என்றால் இணையுமிடம் அல்லது முடிவுக்காலம் எனப்படும்.1 2 தமிழ் மாதங்களில் சித்திரை,ஆடி,ஐப்பசி,தை ஆகிய நான்கு மாதங்கள் பிரம்மாவுக்கு உரியதாகும்.வைகாசி,ஆவணி,கார்த்திகை,மாசி ஆகிய நான்கு மாதங்கள் விஷ்ணுக்குரியவை.
ஆனி,புரட்டாசி,மார்கழி,பங்குனி ஆகிய நான்கும் சிவனுக்குரியவை.
சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரமானது ''ஷடசீ தி''புண்ணிய காலமாகும்.''ஷடாங்கன்''என்றால் சிவனைக்குறிக்கும்.
விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரமானது ''விஷ்ணுபதி புண்ணிய காலம்''எனப்படும்.
பிரம்மாவுக்குரிய மாதங்களில் சித்திரையும்,ஐப்பசியும் பிறக்கும் காலம் ''விஷு''புண்ணியக் காலம் எனப்படும்.''விஷாவகன்''என்பது பிரம்மாவைக் குறிக்கும்.ஆடி மாதப்பிறப்பு ''தட்சிணாயன புண்ணிய காலம்''எனவும்.தை மாதப்பிறப்பு ''உத்தராயண புண்ணிய காலம்''எனவும் அழைக்கப்படும்.சூரியன் தெற்கு நோக்கி பயணிப்பது தட்சிணாயன காலம்,வடக்கு நோக்கி பயணிப்பது உத்தராயண காலம் ஆகும்.
Comments
Post a Comment