சூர்யன் சந்திரன் சுபரா ???பாவரா ???

சூர்யன் சந்திரன் சுபரா ???பாவரா ???
"ஓங்குமட்ட மாதிபதி யோர்தோடஞ் சூர்யற்கு மேங்கு மதி தனக்கு மில்லையே -பாங்கால் வேறு மொருமதத்தில் வீழ்ந்தோடங் கொஞ்சமாய்த் தேறிபாடச் சொல்வதெனத் தேர் "
-----சந்திரகாவியம்
பொருள் ;- அஷ்டமாதிபதி தோஷம் சூர்யனுக்கும் சந்திரனுக்கும் ஏற்படாது
வேறு சில ஆசிரியர்கள் கருத்துப்படி அஸ்டமாதி தோஷம் (அதுவும்கூட )கொஞ்சம் என்றே சொல்லி இருப்பார்கள் ....
விளக்கம் ;-
சூரியனும் சந்திரனும் தலா ஒரு வீட்டிற்கு மட்டுமே ஆதிபத்தியம் கொண்டவர்கள் ...
ஆகையால் இவர்களுக்கு அஸ்டமாதிபதி தோஷம் கொடியது என்று சொல்வதற்கு இல்லை என்பது பெரும்பாலான கருத்து ...
மகரலக்னத்திற்கு அஸ்டமாதிபதி சூர்யனும்
தனுசுலக்னத்திற்கு அஸ்டமாதிபதி சந்திரனும் வருவார்கள் ...
ஆகையால் இவ்விரு லக்னத்திற்க்கு அஸ்டமாதிபதி தோஷம் இருவரும் கொடுப்பார்கள் என்றே சொல்வதற்கு இல்லை ...
இன்னொரு கருத்துப்படி எடுத்து கொண்டாலும் இந்த சூர்ய சந்திரன் அஸ்டமாதிபதி தோஷமே உண்டு என்று சொன்னாலும் கூட இவர்கள் பாவர்கள் சேர்க்கையுடன் அல்லது பாவர்கள் சாரத்தில் அல்லது பாவர்கள் பார்வையில் சிக்குண்டு சென்றால் மட்டுமே ஓரளவுக்கு பாதிப்பு தரும்
சூர்யனுக்கு சந்திரனுக்கு அஸ்டமாதிபதி தோஷம் உண்டா?? இல்லையா ??
என்பதை அவர்கள் உடனான கிரக இணைவுகள் கொண்டே கவனிக்க இயலும் ...
பொத்தம் பொதுவாக "சூர்யனும் சந்திரனும் அஸ்டமாதிபதி ஆகையால் தோஷத்தை கொடுப்பார்கள் "என்று சொல்வது சரியானது அல்ல ....

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-