Posts

Showing posts with the label ஜோதிட தகவல்

ஜோதிட தகவல் :

ஜோதிட தகவல் :- திருமணம் தள்ளிப்போனால் 7ம் பாவமும் சுக்கிரனும் லக்கினேசனும் குருவும் பாதிக்கப்பட்டு இருக்கும்,  சரியான தொழில் அமையவில்லை என்றால் 10ம் பாவஅதிபதியும் சனியும் பாதிக்கப்பட்டு இருக்கும் , இதுபோல் ஒவ்வொரு செயலும் கிரக பாவ காரகங்களால் இயக்கப்படும்,  லக்கினேசனுக்கும் 10க்குடையவனுக்கும் சம்பந்தம் ஏற்பட ஜாதகர் சொந்தமாக தொழில் தொடங்குவார். லக்கினேசனுக்கும் 7க்குடையவனுக்கும் சம்பந்தம் ஏற்பட கணவன் மனைவி அன்யோன்யமாக இருப்பார்கள்  லக்கினேசனுக்கும் 10க்குடையவனுக்கும் சம்பந்தம் ஏற்பட தொழிலை விரும்பத்தோடு செய்வார், லக்கினேசன் 5க்குடையவன் சம்பந்தம் பெற ஜாதகருக்கு ஏதாவது பதவி கிடைக்கும்  லக்கினேசன் 7க்குடையவன் சம்பந்தம் பெற ஜாதகருக்கு நண்பர்கள் அதிகம், லக்கினேசன் 6க்குடையவன் சம்பந்ததம் பெற ஜாதகருக்கு போட்டி அதிகம்  லக்கினேசன் 9க்குடையவன் சம்பந்தம் பெற தெய்வ அனுக்கிரகம் ஜாதகருக்கு கிடைக்கும்  லக்கினேசன் 11க்குடையன் சம்பந்தம் பெற ஜாதகர் சேமிப்பதில் குறியாக இருப்பார்  லக்கினேசன் ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் ஜாதகர் சுயமுயுற்சியால் முன்னேற்றம் காண்பார்,