திருமணம் 1

திருமணம்
மேஷம் :
இவர்களுக்கு அமையும் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடலாம் இவர்களின் பலவீனம் செக்ஸ் ஆகும். எதிர்காலத் திட்டம் பெரியதாக எதுவுமில்லாத சுயநலமில்லாத எண்ணம் உள்ளவார்கள்.
குடும்பப் பொறுப்புக்களை திறம்பட செய்வார்கள். கணவன் ( அ ) மனைவி காரியங்களில் குறுக்கீடுகளை விரும்புகின்றவராக இருக்க மாட்டார்.இருவருக்கும் வேறுமைகள் இருக்கும். கௌரவமாகவே இருக்கும். சுக போகங்களை விரும்புவார்கள்.
தங்களது உணச்சிகளை உடனே தனித்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உடையவார்கள் பகல் பாலுறவை விருபுவார்கள்.ரகசியங்களை மறைக்க தெரியதவார்கள். இவர்களின் வாழ்வில் நிகழ்ந்த விசயங்களை கொட்டி அவிழ்த்து விடுவார்கள்.உணர்ச்சி வசப்படுவார்கள். அன்பு செலுத்துவதிலும் அதிகாரம் செலுத்துவதிலும் இருப்பார்கள். இவர்களின் கோபம் நிரந்தரமானது அல்ல.
இவர்களை இவர்களின் மனைவி ( அ ) கணவன் எளிதில் வசியப்படுத்திவிடுவார்கள்.
இந்த லக்கினத்தில் பிறந்த ஆண்கள் மனைவிக்கு அடங்கிப் போகின்றவர்களாகவே இருப்பார்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் சூரியனுக்கு சொல்லப்பட்ட களத்திரதோஷம் விலகிவிடும். திருமணம் அமையும். தாமதமாகும் குழந்தைகள்,கணவன் ( அ ) மனைவி உடல் நலனில் பதிப்பு இருக்கும்.சுகம் ஒரளவே.புத்திர பாக்கியம் தாமதமகும்.உயர்ந்த நிலையில் உள்ளவர்களாலும் தொல்லைகளுக்கு ஆளாவர்கள்.தீய நடத்தை ஏற்படும்.
ஏழில் சந்திரன் இருப்பது நன்மை.வளர்பிரைச் சந்தினானால் சிறப்பைபைத் தரும். சில சமையம் உங்களை எமற்றி விடுவார்கள்.சபலம், நல்ல கணவன் /மனைவி அமையும்.அதிக காமம் உள்ளவார்கள். ஆண்களுக்கு பெண்கள் வலிய வந்து சேருவார்கள்.
ஏழில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.உறவில் அமையும், பிறர் பல தொடர்பு ஏற்ப்படும். வீட்டில் அளவோடுதான் அமைதி கிட்டும். சண்டைக்காரி, சிலருக்கு துணைவரை இழந்து மறுமணம் நடக்கும்.
சமளிக்கும் மனபக்குவம் தேவை.
ஏழில் புதன் இருந்தால் நீங்ககள் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது யாழ் மீட்டத் தெரியாதவளை கலைவாணி என்று வர்ணிப்பது போல் வாழ்க்கைத் துணை அமையும். துணைவரை திருப்திபடுத்த முடியாதவார்கள்.பொதுவாக இவர்கள் பிரிவில் உறவை வளர்ப்பர்.அந்நிய நபருடன் உறவு கொள்வார்கள். துணைவர்களை எப்பேதும் சந்தோஷமாகவும் இருக்க விரும்புவார்கள்.
ஏழில் குரு இருந்தால் கால தாமத திருமணம் நல்ல மனைவி என்றளவில் நல்ல கணவன் என்றளவில் இருப்பர். மஞ்சம் விரிக்க மட்டார்கள்.
பள்ளியறைக்கு அடிக்கடி அழைக்காதிர்கள்.
ஏழில் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகுள்லவர்கள் அமைவர்கள். ஜகதலப் பிரதாபன்.பல பெண்களை வசியம் செய்து மயக்கிடுவார்கள்.இதானால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.காம உணர்ச்சி அதிகம்,ஒராளவு நன்மை கிட்டும்.திருமண தாமதம் ஆகும்.
சுக்கிரன் 5-9-3-11 ல் இருப்பது நலம் தருவார்.
ஏழாம் அதிபதி சுக்கிரன் 6-8-ல் இருந்தால் பல இன்னால்கள் அனுபவிப்பார்கள்.
சுக்கிரனுடன் 6-8-ஆம் அதிபதிகள் இணைந்திருந்தால் அல்லது பார்க்கப்பட்டலும் கணவன், மனைவி நோய்வாய்ப்படுவார்கள்.
ஏழிற்சுக் கிரனே மேவிற் கூன்றரு விபசாரத்தைக்
கூர்களத் திரமே வாய்க்கும்
இன்னத் தகரி லுதித்திட வும்மேழி டத்திலே கங்க
னிருந்திடவும்
இழிவானவர் விழிசெய்திட வழியன்றியே யெழிலாளுறு
மென்னுஞ் சுகபோக வீனனென்றார்
மேசம் லக்கினத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் லக்கினத்தில் இருக்க. இவரை சுபர் பார்க்கமால் இருந்தால், பாவிகள் பார்த்தால் தவறான வழியில் பெண்களை சுசுகம் கண்பார்கள். நோய் பதித்து உடல் மேலிந்திருப்பார்கள்
ஏழில் சனி இருந்ந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அமையும். அறிந்த தொறிந்தவர்கள் அமைவார்கள். திருமணத்திற்குப்பின் இனிய இல்லறம் அமையும். பாதகதிபதி பலம் பொருவது நலம் தருவதில்லை. உடல் நலம் பாதிப்பும். திருமணம் வாழ்வில் திருப்திகரமான பலன் அமையாது. பிறரை பயப்படும்படியான செயல்கள் உள்ளவர். சனி திசையில் பலபாதிப்பும்.பிரிவிணையும்.சொத்துக்கள் இழப்பும் ஏற்படும்.
கதிர்மகன் ஏழில் களந்திட விருந்தால்
கன்னிகை களத்திரமிரண்டாம்
ஏழில் ராகு இருந்தால் கற்பனையே வாழ்கையாக இருக்க வேண்டுமென்று நினைபார்கள்.பெண்களால் அவமானமும் பொருள் இழப்பும்.அசைப்பட்டது கிடைக்காது. துலா ராசியில் ராகு இருப்பது நன்மையிரது.
ஏழில் கேது இருந்தால் தெய்வ நம்பிக்கையுள்ள. மீறிய காமத்தால் பிறர் தொடர்பு ஏற்ப்படும்.முழுமையான இல்லற இன்பத்தை பெறமுடியாது.தாழ்ந்த குலத்துப் பெண் மனந்து கொள்ளும் வய்ப்புள்ளாது.இவர்களுக்கு மருந்து மாயம் மந்திரங்களால் பதிக்கப்படுவர்கள்.

ரிஷபம் லக்கினத்திற்கு திருமண வாழ்வ

ரிஷபம் இந்த லக்கினத்தில் ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப பொறுப்புக்களை முழுமையாக மனைவி
( அ) கணவனிடம் ஒப்படைக்கத் தவறினால் வீணா பிரச்சினைகளை தரும்.
உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால் உணர்ச்சியின் உச்சத்திற்கே செல்வார்கள். அவசரப்படாமட்டார்கள்.கிணற்று நீரை வெள்ளமா அடித்துச் செல்லும் என்ற அழுத்தமான உணர்வாளர்கள். தன்னை இழக்காமலும் இழந்தால்
அதில் என்ன லாபம் என எண்ணுவார்கள்.கணவன், மனைவியை கட்டுபடுத்துவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். தன்னுடைய பலவீனங்களை வாழ்கைத்துயாளரிடம் வெளிப்படுத்த்தாமல் பலத்தை மட்டும் கட்டுவார்கள்.இவர்கள் செக்ஸ்தான் வாழ்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்த்துதான் வாழ்க என்பதில் அர்வம் உள்ளவார்கள். இவகளின் அன்பு நிரந்தரமானது.வைராக்கியமும்,கோபமும் நிரந்தரமானது.
பெண்களிடம் கூறியவைகள் சரியாக பரிணமித்து இருக்கும்.குடும் விளக்காகத் திகழ்வர்கள். இவர்கள் வாழ்கையில் பிரிவு எனஒன்று வந்தால் அது நிரந்தரமானவைதான்.மன்னிப்புக்கள் பெறமுடியாது.
புதன், செவ்வாய், சுக்கிரன் 6-8-12-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகி திருமணவாழ்வை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.
சூரியன் சுக்கிரன் இணைந்திருந்தாலும், சுக்கிரன் சனி இணைந்திருந்தாலும் மாமனார், மாமன் குடும்பத்துடன் அன்புடன், பிரியத்துடனும் இருப்பார்கள்.

ஏழில் சூரியன் இருந்தால் இல்லற சுகம் பாதிக்காது நெருப்பைப் போன்ற குணம் உடைய மனைவி, கணவன் அமைவர்கள்.திருமணம் காலதாமதமாகும்.

பகர்முதி உதிக்க ஏழில் பானுவும் மதியும் நிற்க
திகழ்களத் திரவி ளேதத் தினில்அவ மான னாவான் !
லக்கினத்திற்கு ஏழில் சூரியனும், சந்திரனும் இருந்தால் கணவன் /மனைவி இருவருக்கும் தகராறு ஏற்படும். இதனால் அவமானம் கிட்டும்.

ஏழில் சந்திரன்
ஏகுபுல் லுதிப்ப ஏழில் இந்துறில் அனேக தாரம்
ஏழில் சந்திரன் இருக்க பல மனைவிகள் அமையும்

ஏழில் சந்திரன் இருந்தால் மனைவி சுகவீனமாக இருபாள். சிலருக்கு திருமணம் நடக்காமலும் போகலாம். அல்லது மறுமணம் நடக்கும்.
பெண்களுக்கு திருமண வாழ்வில் திருப்தி இருக்காது. சோககீதங்கள் எப்போதும் தாலட்டும். துறவுச் சிந்தனையில் மனம் ஈடுபடும்.கணவன் போதை பழக்கங்களுக்கு ஆளாகலாம் அல்லது மனரீதியான பாதிப்புகள் ஏற்ப்படும்.

ஏழில் செவ்வாய் இருந்தால் துணைவர்கள் தன்னிலும் தைரியம் உள்ளவர்கள்.ஜாதகரை கண்டிப்புடன் நல்வழிபடுத்துபவர்கள். இவர்களின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
செவ்வாய் 1-2-9-10-11-ல் இருந்தால் வேறு வகையில் பாதிப்பின்றி இருந்தால். துணைவரின் மூலம் பொருளாதார ரீதியாகஆதாயம் அடைய வாய்ப்பும் கிடைக்கும்.
மீனாட்சி ராஜ்யம்தான்,மகிழ்ச்சியாக அமையும்.
பெண்களுக்கு இந்த அமைப்பு இருந்தால் சுதந்திரமாக செயல்படமுடியாது.செவ்வாய் தோஷமாகாது. ஆனால் பிறச்சினைகளை அதிகப்படுத்தும்.

செவ்வாயும், சூரியனும் இணைந்திருந்தால் திருமண வாழ்வு நலமுடன் இருக்கும். இல்லற சுகம் அவ்வப் போது கிடைக்கும்

செவ்வாயும், சந்திரனும் இணைந்திருந்தால் கோபத்தில் நாட்டமும், இளையவர்களின் தொடர்பு ஏற்படும்.

லக்கினாதிபதி சுக்கிரனும், செவ்வாயும் இணைந்திருந்தால் காதலில் தோல்வி ஏற்படும். வேறொருவரை திருமணம் செய்ய நேரிடும்.

செவ்வாயும், புதனும் இணைந்திருந்தால் திருமணவாழ்வில் ஊமை காயங்களாக துண்பத்தை தரும்.

செவ்வாயும், சனியும் இணைந்திருந்தால் கணவன் /மனைவிக்கு அறுவை சிகிச்சை ஏற்படும். இதனால் இல்லற சுகம் பாதிக்கும்.போராட்டங்கள் அவ்வப்போது போர்க் கொடித் துக்கி அமைதியை கெடுக்கும்.

வேகமாம் செவ்வாய் நிற்கின் விபசார களத்திர மாதே !
ஏழில் செவ்வாய் இருந்தால் தீய நடத்தையுடைய மனைவி அமைவாள்.

ஏழில் புதன் இருந்தால் திருமணம் காலதாதாமதமாகும். நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றகா இருக்கும். அப்படித்தான் கணவன் மனைவி அமைவார்கள். கசப்புணர்வு அதிகம். அவ்வப்போது சந்தோஷம் வந்து போகும். இவர்களிடம் நலம் விசரரித்தால் நாளுக்கொரு பதில் தருவார்கள்.ஒருநாள் இன்பம். மறுநாள் துன்பம் என்பார்கள்.இப்படியும் ஒரு இனிய இல்லறம்.
லக்கினத்திற்கு 1-2-4-5-6-ல் புதன் இருந்தால் உறவில் திருமணம் அமையும்.

ஏழில் குரு இருந்தால் இவர்கள் திரமணவாழ்வில் அதிகம் விருப்பம் இராது திருமணவாழ்வை பற்றியா கற்பனை ஏதுவும் இராது.பொன் பொருள் பற்றிய சிந்தனையுள்ளவார்கள்.
பெண்களுக்கு திருமணம் காலதாமதாகும் .பெயரளாவில் வாழ்வர்கள்.கழுத்தை மட்டும் நீட்டினாள் போதும்.என எண்ணுவார்கள்.

ஏழில் சுக்கிரன் இருந்தால் கணவன்,மனைவியின் பாசத்திற்குரியவர்கள். ஆண்களுக்கு பிற பெண்கள்
தொடர்பிருக்கும்.சிறந்த கற்பனைவதிகள்,அதித உணர்வு உள்ளவர்கள். இல்லறம் இனிமையாகும்.

ஆகுநல் இடபம் தோன்ற அதற்கேழிற் சுங்கன்
நிற்கில்
வாகுள தாரம் நாசம் மகிழ்களத் திரவீ னம்தான்
ரிஷபம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழில் சுக்கிரன் இருந்தால் மனைவிக்கு ஆயுள் குறைவு

லக்கினத்திற்கு எட்டில் சுக்கிரன்.செவ்வாய் இருந்தால் திருமண வாழ்வு போராட்டமாக அமையும்.

ஏழில் சனி இருந்தால் சிறப்பான அமைப்பகும். தன்னை விட எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள். அமைவார்கள். திருமணத்திற்ககு பின் வாழ்வில் வளமுடன் பெருகிக்காணப்படும். இவர்களின் இல்லறம் இனிமையாகும்.
சனிக்கு தீய கிரகம் தொடர்பிருந்தால் மறுமணம் ஏற்பப்படும்.
லக்கினத்திற்கு 8-ல் அல்லது 11-ல் சனி இருந்தால் உறவில் திருமணம் அமையும்.

ஏழில் ராகு இருந்தால் தன்னிச்சைப்படி நாடப்பார்கள். தங்களின் காரத்துவப் பபலன இழப்பார்கள். இரண்டு திருமணம் நடக்கும்.அழுத்த மனமுடையவார்கள்.

ஏழில் கேது இருந்தால் நம்பத்தகாத பெண்களின் விவகாரங்களில் இடுபடுவார். கணவன் மனைவி கருத்து வேறுபாடு ஏற்பப்படும். வாழ்வில் விரக்தி ஆன்மீக உணர்வும் உறவில் திருப்தி இல்லா நிலை ஏற்ப்படும்.
மிதுன லக்கினத்தாருக்கு திருமணவாழ்வு

மிதுனம் பிறந்தவர்கள் இல்லற சிந்னையில் இரட்டைடை சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள்.இவர்களை மனைவி அல்லது கணவன் புரிந்துகொள்வது எளிதாயினும். இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும் யாரும் சரியாகப் புறிந்து கொள்ளவில்லை என்று எண்ணுவர்கள்.இவர்களின் உணர்ச்சிகும், கோபத்திறகும் அர்த்தமே இருக்காது.
இவர்களின் மனைவி அல்லது கணவன் பரிதாப நிலைக்குரியவர்கள்.
இவர்களின் குடும்பம்.,செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை இவர்களில் பலர் வயது வித்தியாசம் பாரமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள்.அல்லது வாழ்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை இல்லதாவர்கள்.மனோ கற்பனையில் சுகம் காணுவதில் மாக சமர்த்தியசலிகள். குறிப்பிட்ட வயதுக்குபின் செகஸ் அர்வம் குரையும்.
இவர்கள் ஓர் லட்சிய எண்ணமில்லாமல் நடத்துவர்கள். தன் வாழ்கைத் துணைவர்களின் உணர்ச்ச்சிகளை ஒர் நொடியில் தகர்த்த்து எறிவவர்ள். மரியாதைக்கொடுத்து மரியாதையைப் பெற்றால் இவர்கள் எந்த நாளும் மரியாதைக்குறியவர்கள் தான் ஆனால் அது எத்தனை பேர் வாழ்வில் சாத்தியமாகிறது.
இவர்கள் சந்தேகத்திற்குரியவர்கள். ஆனால் நிரபாரதிகள் இதை இவரின் வாழ்க்கைத் துணைவர்கள் உணரப் போவதுமிலை. இவர்களால் உணர்த்தவும் முடியாது.
இல்லற வாழ்கையில் ஒளிரும் விளக்கின் அடிப்பதியை போன்றவர்கள்.
திருமண விஷயத்தில் மிகவும் அனுசரித்தும். தங்கள் சுயமான கருத்துக்களை விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர்கள். காதல் திருமணம். மதம் மாறிச் செய்து கொள்ளல் நடைபெற வய்புள்ளது. பெரியோர்களின் சம்மதத்தை பெற்று விடக்கூடியவர்கள் இருப்பர்கள்.
தாராள மனம். வெகுளித்தனம் கொண்டவர்கள். வாழ்வில் ஏதேனுமோர் குறைபாடு தொடரும்.
இந்த லக்கினத்தவர்கள் துணைவரை வாழா வெட்டியாக்கிடுவர்கள்.எல்லாம் இருந்தும் கெட்ட நிலைக்கு ஆளாகிக்கிவிடும். கவணமுடன் இருப்பது அவசியம். உறவில் பகை ஏற்படும்.இருவருக்கும் கருத்து வேறுபடு ஏற்படும்.
எட்டில் செவ்வாயும், குருவும், சுக்கிரனும் இணைந்திருந்தால் இவர்கள் திருமணம் செய்யமால் இருப்பது வாழ்வில் நிம்மதி தரும்.

சந்திரனும், சுக்கிரனும் பாவிகளுடன் இணைந்திருந்தாலும் 6 - 8 - 12 -ல் இருந்தால் திருமண வாழ்வில் விருப்பம் இல்லமால் இருப்பார்கள்.

இரண்டில் சந்திரனும், அல்லது பத்தில் குரு இருந்தால் ஜாதகர் /ஜாதகி பிறரை சிறிதும் விரும்பாதவர்கள்.
பத்தில் சுக்கிரன் அல்லது நான்கில் சனி இருக்க குருவும் புதனும் இணைந்திருக்க அல்லது குருவை செவ்வாய் பார்தால் ஜாதகர் /ஜாதகிக்கு திருமணமான பிறகே யோகபலனை பெறுவர்கள்.
ஏழில் சூரியன் இருந்தால் மனைவியின் கண்களில் கோபம் இருக்கும்.இளமைக்கால இனிய கனவுகளை மறந்து. நிஜ வாழ்க்கையில் கவசம் அனிந்து போராடப் பழகிக்கொள்ளவேண்டும்.

ஏழில் சந்திரன் இருந்தால் தினம் தினம் சுகமோ சுகம். அன்புள்ளவர்கள்.பிடிவாதம் இருக்கும். சற்று உடல் நலம் பதிக்கும்.
இரண்டில் சந்திரன் இருந்தால் உறவில் திருமணம் நடக்கும்.
சந்திரனும், சுக்கிரனும் இணைந்திருந்தாலும், பரிவர்தனை பெற்றிருந்தாலும் உறவில் திருமணம் நடக்கும்.

ஏழில் செவ்வாய் இருந்தால் மனைவியோடு, கணவனோடு வாழ்த காலம் அப்பப்பா போதுமடாசாமி என்பார்கள்.நியாயப்பூர்வமான ஆசைகளையும்.மரியாதையையும். சொற்களையும் திருமணத்தின் போதே அடமனம் வைத்து விடவேண்டும்.
ஆறுக்குடைய செவ்வாயும் குருவும் எவ்விடத்தில் இருந்தாலும் பிரிவினை ஏற்படும்.

ஏழில் புதன் இருந்தால் நல்லதுதான்.ஆனால் எல்லாவற்றிற்கும் இவர்கள் வாத்தியாரை நடவேண்டும். ஏன் என்றால் திருமணத்திற்க்கு பிறகு இவர் புத்திக்கூர்மை மழுங்கிப்போனது என்று நெருக்கமான நண்பர்களும் தோழிகளும் கேட்பார்கள்.

ஏழில் குரு இருந்தால் திருமணமே செய்யாமலிருந்தால் நல்லது ஆண் பெண் இருவருக்குமே, இவர்களின் திருமணவாழ்கையின் இன்பம் வானத்து நிலவைப்போல இவர்களின் தாதாகத்தை நீரால் மட்டுமே தணிக்கமுடியும்.
ஏழுக்குடைய குரு நீச்சமானால் இனிய இல்லறம் அமையும்.
12-ல் குரு இருந்தால் சுப வாழ்க்கைதான்.

குரு ஆட்சி பலம் பெற்றால் இலறம் என்பது இப்பிறவியில் கர்ம வினை அனுபவிப்பார்கள்.திருமணவாழ்கை சோபிக்காது. குரு வக்ரமாக இருந்தாலும் பாதிக்கும்.
சூரியன் குரு இணைந்திருந்தால் இனிய இல்லறம்.(குரு அஸ்தமனம் அடையமால் இருப்பது அவசியம்.)
குருவும், சந்திரனும் இணைந்திருந்தால் இளமையில் வாழ்க்கை இன்பம் தரும்.பின் நாளில் பிரம்மச் சரியம் அடைவர்கள்.
ஆறுக்குடைய செவ்வாயும் குருவும் இணைந்திருந்தால் பிரிவினை ஏற்படும்.
குருவும், சுக்கிரனும் இணைந்து கேந்திரம், அல்லது கோணங்களில் இருந்து பாவிகள் தொடர்பு, பார்வையிருந்தால் கணவன் /மனைவி இருவரும் நடத்தை தவறியவர்கள்.
சனி குரு இணைந்திருந்தால் வாழ்கையில் தொடர்ந்து நிம்மதியின்றி வாழ்வர்கள்.

ஏழில் சுக்கிரன் இருந்தால் கோடையும், வசந்தமும்
ஆண்டுதோறும் மாறி மாறி வருவதைப்போல் இவர்களின் வாழ்வில் இன்பம் துண்பம் ஏற்படும்.

பாரில்யாழ் உதய மாக
வெள்ளி பெலத்திடில் வெகுக ளத்ரம்
நாரிகள் திருட னாக நவின்றனர் கணித நூலோர்
மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பலமுடன் இருந்தால் பல மனைவிகள் அமையும். பிற பெண்களின் தொடர்பிருக்கும்.

ஏழில் சனி இருந்தால் அதிக தொல்லையில்லை ஒரலவு நிம்மதி கிடைக்கும்.
ஏழில், பத்தில் சனியிருந்தால் உறவில் திருமணம் அமையும்.

ஏழில் ராகு இருந்தால் பொறாமை குணம் உள்ளவர்கள். உறவினர்பகைமை ஏற்படும். அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.

ஏழில் கேது இருந்தால் உறவுகளை விட்டு விலகி இருப்பார்கள்.தாமத்திருமணம் நடக்கும். இல்லறத்தில் சுசும் குறைவு

திருமணம் நடக்கும் வயது : - 17 - 22 - 27 - 32 - ல் நடக்கும்

கன்னி லக்கினத்திற்கு திருமணவாழ்வ

கன்னி லக்கின ராயில் பிறந்தவர்கள தி்ருமணம் கட்டாயம் / நிபந்தனைகளின் பேரில் முக்கிய காரணத்தால் தெய்வானுகூலத்தால் போன்ற ஏதேனுமொருவகையில் நடைபெறும். கணவன்/மனைவியரிடையே நிரந்தரமான கவலைகள் தொடர்ந்து இருக்கும். ஜாதகர்/ஜாதகி சகிப்புத் தன்மை மற்றும் தியாகவுணர்வு கொண்டவர்களாக இருப்பது நலம் தரும். இல்லற சிந்தனையில் இரட்டைச் சிந்தனையுள்ளவர்கள். இவர்களை இவர்களின் மனைவி/கணவன் புரிந்துககொள்வது எளிதாயினும். இவர்கள் தங்களுக்குள் நம்மை இன்னும் அவர்கள் சரியாக புறிந்து கொள்ளவில்லை என்று எண்ணுவர்கள். இவர்களின் உணர்ச்சிக்கும் கோபத்திற்கும் அர்த்தமே இருக்காது. என இவர்களின் கணவன்/மனைவி புலம்புவர்கள்.இவர்களின் குடும்பம் மற்றும் செக்ஸ் வைராக்கியத்திற்கு உறுதியில்லை இவர்களில் பலர் அவயது வித்தியாசம் பாராமல் உடல் உறவு கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள். வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் கொள்கை இல்லாதவர்கள். மனோ கற்பனையில் சுகம் காண்பதில் வல்லவர்கள். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு இவர்களுக்கு செக்ஸ் உணர்வு குறையும். வாழ்க்கையை ஒர் லட்சிய நோக்கில்லாமல் நடத்துபவர்கள்.தன் மனைவி/கணவனின் உணர்ச்சிகளை ஒரு நொடிப்பொழுதில் தகர்த்து எறிந்துவிட்டு வெளியேறுவர்கள்.
கருத்துக்களை இன்று இந்த இரவு இந்த நேரத்தில் தன் கணவன்/மனைவியோடு பரிமறிக்கொள்ள வேண்டுமென்று அலுவலகத்தில் எண்ணுவர்கள். ஆனால் அன்று நல்ல கருத்துக்களை,இல்லற முன்னேற்றத்திற்கான திட்டங்களை கணவன்/மனைவியிடம் பேசமுடியாத சூல்நிலையை சந்திப்பர்கள்.கொடுப்பினை இல்லாதவர்கள்.

ஏழில் சூரியன் இருந்தால் ஆண்-பெண் இருவருக்கும் சிறப்பாகாது. திருமண தாமத்தை தரும்.தகுதியைவிட. எல்லாவகையிலும் குறைவான வாழ்க்கைத்துணைவர்கள் அமைவர். ஆனால் அவர்களை குறை சொல்வர்கள்.சண்டையும் சச்சரவுமாக இருக்கும்.ஆண்கள் பெண்களுக்கு அடங்கியிருப்பார்கள். துணைவர் நோயாளியாக இருப்பர்கள்.

ஏழில் சந்திரன் இருந்தால் நல்லதுதான்.இவர்களின் வாழ்வில் பல இளநங்கை குறிக்கிடுவார்கள்.அழகிய துணைவர்கள் அமைவர்கள். துணைவர்களின் மீது அதிக ஆசை உள்ளவர்கள். அதித உணர்வு உள்ளவர்கள்.

ஏழில் செவ்வாய் இருந்தால் மீன செவ்வாய் தோஷமில்லை.,அளவுக்கு மீறிய துண்பத்தையும், அவ மரியாதையையும், பிரிவினையைத்தரும். சண்டைடை போடுவர்கள். துணைவர்களுக்கு கண்டம் ஏற்படலாம்.மறுமணம் ஏற்படும். காதலில் ஏமாற்றங்கள் உண்டாககும்.

ஏழில் புதன் இருந்தால் பக்குவாமக வாழப்பழகிக் கொள்ளவேண்டும். விலகிப்போகும் பன்பை அறிந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போகின்றது.காரசாரமில்லாத ஒரு வாழ்க்கைங்களா என்று சப்பு கொட்டிக்கொள்வார்கள்.

ஏழில்குரு இருதால் இவர்கள் விவாகரத்து புத்தகத்தை படிப்பது நல்லது அல்லது ஒரு வழக்கறிஞனை நண்பனாக்கிக் கொள்வது அவசியம். அனைவருக்கும் தன்.பெண்கள் கணவனின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
கன்னி லக்கினத்திற்கு குரு நீச்சம், 8-12-ல் இருப்பின் திருமணவாழ்வு நலமுடன் அமையும்.
குரு ஆட்சி, உச்சம், பெற்றிருந்தால் இல்லறம் சிறப்புடன் அமையாது. 4-ல் இருந்தால் இல்லறம் சிறபுடன் அமையும்.
குருவும், செவ்வாயும் இணைந்தால் திருமணவாழ்வின் மகத்துவம் முழுவதும் ஒரு நொடிப் பொழுது மண்ணேடு மண்ணாகி விடும்.
குருவோடு சுக்கிரன் இனைந்தால் இருளுக்கு பின் ஒளி புயலுக்குப் பின் அமைதி என்றளவில் இல்லறம் அமையும்.
குருவும், சந்திரனும் இணைந்தால் திருமணத்திற்கு பிறகு இளைய பெண்களின் தொடர்பு, ஆண்களின் தொடர்பு ஏற்படும். (மானசீக நட்பாக இருக்கலாம்)
மற்ற கிரகங்களின் இணைந்திருந்தால் சிறப்பை தருவதில்லை. உவர்ப்பும், இனிப்பும் இணைந்ததாக அமையும்.

ஏழில் சுக்கிரன் இருந்தால் அழகிய துணைவர்கள் அமைவர்கள். துணைவர்களால் புகழ் அடைவர்கள். சிற்றின்பப்பிரியர்கள். இவர்களின் திருமணவாழ்விற்குப்பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். பெண்களுக்கு இளவரசியைப்போல் வாழ்வு அமையும்.

ஏழில் சனி இருந்தால் தன்னை உணராத ஒருவரை அதே சமையம் பிரச்சினைகள் தரத ஒருவர் அமைவர்கள். இருண்டு திருமணம் அமையும்.

ஏழில் ராகு இருந்தால் பிர் தொடர்பிருக்கும் பல பிரச்சினை ஏற்ப்படும். அகங்காரம் கொண்டவன் பிறரை மதிக்காதவர்களாக இருப்பார்கள்.வாழ்வில் சந்தோஷம் இல்லாதவர்கள்.
குரு, சுக்கிரன், இணைவு, பார்வை நலம் தரும்.

ஏழில் கேது இருந்தால் சோம்பேறி, கவலையுடையவர்கள்,அலைந்து திரிபவன், நோயுள்ள துணை. இரு தாரம் அமையும். பிரிவினை ஏற்ப்படும்.மருந்து, விஷத்தை உண்பபார்கள்.
குரு, சுக்கிரன் இணைவு, பார்வை நலம் தரும்.
திருமணம் நடக்கும் வயது : -20-25-30-35--ல் திருமணம் நடகும்.
சிம்மம் லக்கினத்திற்கு திருமணவாழ்வு

ஸ்திர லக்னங்களில் இரண்டவது சிம்மம் ராசியாகும் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காமாட்டார்கள். ஆனால் உணர்ச்சியின் உச்சத்திற்கே செல்லும் ஆற்றால் பெற்றவர்கள் அவசரப்படாதவர்கள்.கிணற்று நீரை வெள்ளமா அடித்துச் செல்லும் என்ற அழுத்தமான உணர்வுள்ளவர்கள்.தன்னை இழக்காமலும், இழந்தால் அதில் என்ன லாபம் என்பதில் குறிக்கோள் உடையவர்கள்.இவர்கள் யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் நடந்துகொள்வது சொற்பம் தான் தங்களைப்பற்றிய குறைத்து மதிப்பிட மாதிபிட்டுவிடுவார்கள் என்னும் நோக்கத்தில் உண்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள்.ஆனால் அந்தஸ்தோ (அ) சுய நலவிருப்பமோ பாதிக்கப்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் மிக மிக வெளிப்படையாகவும் யதார்த்தமாகவும் பேசி ஆச்சர்யப்படும் வகையில் நடந்துகொள்வர்கள். இவர்கள் மனைவி, கணவனை கட்டுப்படுத்துவதில் இவர்கள் வெகு சாமார்த்தியசாலிகள். தன்னுடைய ஆரோக்யம், தொழில்,பணம்,புகழ் தவறுகள் போன்றவற்றில் இருக்கும் பவீனங்களை வாழ்கைத்துணைவரிடம் வெளிப்படுத்தாமல் தங்களின் பலத்தை மட்டுமே காட்டுவதில் சாமார்த்தியசாலிகள். ஆனால் இவர்களின் பலத்தை நிரூபித்துக்காட்டும் சாமார்த்தியசாலிகள். இவர்கள் செக்ஸ்தான் வாழ்க்கை என்பதில் காட்டும் அக்கறையைவிட சமூக அந்தஸ்துதான் வாழ்க்கை என்பதிலேயே ஆர்வம் அதிகம் உடையவர்கள்.இவர்களின் அன்பு நிரந்தரமானது. அதைப் போலவே இவர்களின் வைராக்கியமும் கோபமும் நிராந்நதரமானது.பெண்களுக்கு மிக சரியாகவே உள்ளாது. வாழ்வில் பிரிவு நிகழ்தால் அது நிரந்தரமானது எதிர்தரப்பு மன்னிப்பு இருக்காது . புனர்வாழ்வு பெறுவது கடினம் .
நல்ல சுபாவம், தொழிலில் பற்றுள்ளவளாகவும்.தெய்வ பக்தி உள்ளவர்கள். சுகங்ளுடன் வாழ்பவர்கள்.
செவ்வாய் 4-ல் இருக்க, 7-10-11-ல் சுக்கிரன் இருந்தாலும் திருமணமான பிறகே யோக பலன்கள் தரும்.
சூரியன் செவ்வாய் இணைந்தோ அல்லது சூரியன் செவ்வாயைப் பார்த்தோ அமைந்திருந்தால். ஜாதகர் /ஜாதகி மாமனார் மற்றும் மாமன் குடும்பத்துடன் பாசத்துடனும் பிரியத்துடனும் இருப்பர்கள்.
செவ்வாய் 5. அல்லது 8-ல் இருந்தாலும்,
புதன், சுக்கிரன் சனி, இணைந்தோ பரிவர்த்தனை பெற்றிருந்தாலும்.
புதன் 1-2-3-10-11-ல் இவர்களுக்கு உறவில் திருமணம் அமையும்.
புதன், சனி, சுக்கிரன் பாவிகளுடன் 6-8-12-ல் இருப்பின் ஜாதகர் /ஜாதகியர் திருமணத்தை விரும்பாமலும், தனித்திருக்கவே விரும்புவர்கள்.

ஏழாம் அதிபதியுடன் ராகு, கேது இணைந்திருந்தால் அல்லது சனி செவ்வாயால் பார்க்கப் பட்டு சுக்கிரன் பலம் இழந்திருந்தால் ஜாதக /ஜாதகியின் நடத்தையில் உண்மை இருக்காது.

ஏழில் சூரியன் இருந்தால் இல்லறவாழ்கை நன்றாகவே இருக்கும்.ஆனால் பிரச்சினை இல்லாத மாதங்களே இல்லை எனலாம் ஒன்று ரியானால், மற்றொன்று சரியற்ற நிலைதானே.
பெண்களுக்கு :- புகுந்த வீடு கசக்கும்.கணவனின் இனிய சொற்களுலாக வெந்தணலாக சுடும்.ஆத்மபலத்தை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் அனுகு முறையால் நன்மை பொறமுடியும்.

ஏழில் சந்திரனிருந்தால் இல்லறம் பதிக்காது.அதிக காமியாகவும், பல தொடர்பு ஏற்படும். இனிமையாக இருக்க வேண்டுமானால் இனிய சொற்களையும், பக்குவமான வார்த்தைகளையும் உங்கள் இல்லறத்தில் குழல் விளக்குகளாய் பொருந்தி வையுங்கள்.

ஏழில் செவ்வாயிருந்தால் நல்லல்ல திருமணம் தாமம் ஆகும் .நீங்கள் நல்ல உணவு சாப்பிடவேண்டும் .குரலையும், உடலையும் வளமாகவைத்துக் கொள்ள வேண்டும்.சண்டையிட தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏழில் புதன் இருந்தால் இல்லறத்தில் அமைதி நிலவும். குடும்ப சுகம் கிட்டும். மனைவியை திருப்திபடுத்த முடியாது.
இளமையிலேயே திருமணம்.
இவர்கள் தங்களது துணைவர்கள் மறுமணம் செய்வதை அல்லது வேறு ஒருவருடன் தொடர்பு கொள்வதை ஏற்றுக்கொள்வார்கள்.

ஏழில் குரு எட்டாம் அதிபதி இருப்பாது நலம் தராது. திருமனவாழ்வில் மகிழ்சி குறையும்.மனைவியின் அதிகாரம் மேலோங்கும்.
அழகிய துணைவர்கள் அமைவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவர்கள்.
பெண்களுக்கு ! திருமணம் தாமதமாகும். திருமணத்திற்குமுன் சில பழிபாவங்களுகக்கும், சில தீயவர்களின் தீயச் செயலுகக்கும் ஆளாகநேரிடும். இது உழ்வினையே கரணமாகும்.
மணவாழ்விற்குப்பின் பிரிவு,கணவரின் மீது ஈப்பு, ஆதரவு,அன்பு இவை இல்லாமலும் போகலாம்.சிலர் மறுமணம் செய்து கொள்வார்.

ஏழில் சுக்கிரன் இருந்தால் ஏதோ கல்யாணமாம், முதலிரவாம்,சந்தோஷம்,குடும்பமாம் வாழ்க்கையாம் ! என்னையா இது எனக்கும்தான் கல்யாணமாச்சு ....? என புலம்புவாகள்.இதனால் பல தொடர்பு ஏற்படும்.
சுக்கிரனை சனி பார்க்கமால் இருப்பது நலம்.

ஏழில் சனி இருந்தால் நன்மைதான் ! அன்னிய பெண்களிடம் விருப்பம் உள்ளாவர்கள். திருமணத்தால் சுகம் குறைவு,இருதாரம் அமையும்.
சுக்கிரன் சனியைப் பார்ப்பது நலம் தரும்.

அரிக்குஓர் ஏழில் திண்டிறல் சனிஇ ருக்கில்
தெரிவிப சார தாரம்
சிம்ம லக்கினத்திற்கு ஏழில் சனி இருந்தால் பிறரை கூடும் வாழ்கைத்துணைவர்கள் அமைவார்கள்.

ஏழில் ராகு இருந்தால் திருமணம் தாமதமாககும். சில சமையம் குழப்பம் ஏற்ப்படும்.மன அத்தம் உள்ள துணைவர்கள் அமைவார்கள்.
கும்பத்தில் உள்ள ராகு திமையைத் தரும்.

ஏழில் கேது இருந்தால் திருமணம் தாமதமாகும், துணைவருக்கு கெடுதால் ஏற்ப்படும்.மோசமான பெண்களிடம் தொடர்பு கொள்வார்.நோயாளி. காமத்தால் கெட்ட தொடர்பு ஏற்படும்.மனைவி இடுமருந்து வைப்பாள். அல்லது விஷம் கெடுப்பாள்.
(குருவின் நட்சரத்தில் இருந்தால் கெடுபலன் குறையும்)

திருமணம் நடக்கும் வயது : - 19-24-29-34 வயதில் நடக்கும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-