மனைவி என்னும் மனையாட்சி

மனைவி என்னும் மனையாட்சி
++++++++++++++++++++++++
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.ஒருவருக்கு நல்ல மனதிற்கு பிடித்த மனைவி அமைவதும் அமையாமல் இருப்பதும் பூர்வ ஜென்ம புண்ணியம் ஆகும்.ஒருவருக்கு தாய்க்கு பின் தாரம் என்று சொல்லக்கூடிய தாரம் சரியாக அமையவில்லை எனில் அது அவனது விதிப்பயனே ஒழிய அது வேறு எந்த ஒரு காரணமுமில்லை.இதனால் மனமுடையாமல் இருப்பதற்கான பதிவு.
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தை பொறுத்தவரை லக்கனத்திற்கும்,ராசிக்கும் இரண்டாமிடத்திலும்,ஏழாமிடத்திலும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் இல்லாமல் இருத்தலே நலம்.எல்லாவற்றிற்கும மேலாக "ஏழாமிடம் சுத்தமாக இருந்தால் எல்லோருக்கும் நல்லவர்/நல்லவள்.
லக்கனாதிபதி மற்றும் ஏழாமதிபதி இரண்டும் ஆட்சி பெற்று சமசப்தமாக பார்த்துக்கொள்ளும் ராசிக்கட்டத்தை பொறுத்தவரை கிரகயுத்தம் ஏற்பட்டு நீ பெரியவரா ,நான் பெரியவரா என்னும் ஒருவித ஈகோ ஏற்பட்டு அவர்களுடைய வாழ்க்கை குழந்தைகளை பெற்றிருந்தாலும்,நல்ல வசதி வாய்ப்புகளை பெற்றிருப்பினும் மன ரீதியாக அன்யோன்யம் ஏற்படாமல் அவர்களது வாழ்க்கை அமையும்.சுப கிரகங்களின் பார்வை சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் இரண்டாமிடத்தில் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களை பெற்றிருந்தால் கல்வியில் சிறந்து விளங்கினாலும்,தனம் ஈட்டும் திறமையை தந்தாலும் அந்த இரண்டாமிடம் சாதகரின் கணவனுக்கோ/மனைவிக்கோ எட்டாமிடமாக இருப்பதால் அந்த தசாபுத்தி காலங்களில் அவர்களுடைய துணைவர்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும்.
மேஷம்
********
இந்த ராசியை பொறுத்தவரை 2,7 க்கு உடையவர் சுக்கிரன் ஆகும்.
மேஷ ராசி சர ராசி என்பதால் சுக்கிரன் மாரகாதிபதி ஆவார்.
மேலும் சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி பெற்று இருப்பின் கேந்திராதிபத்திய தோஷமும் பெற்று திகழ்வார்.எனவே சுக்கிரன் ஏழில் ஆட்சி பெற்று இல்லாமல் இருத்தல் நலம்.அப்படியே இருந்தாலும் லக்கனாதிபதி ஆட்சி பெற்று இருப்பின் மனமொத்த மனைவி அமைவது கடினம்.
இந்த ராசி காரர்களுக்கும் ,மீன ராசி காரர்களும் திருமணம் செய்துகொள்ளும் அவர்களுக்கிடையேயும் அன்யோன்யம் உள்ள தம்பதிகளாக இருப்பது கடினம்.
மீன ராசி-குரு ஆதிபத்தியம்-அமைதியானகுணம்-மென்மையானவர்கள்
மேஷ ராசி-செவ்வாய் ஆதிபத்தியம்-போர்குணம்-வீம்பு,வீராப்புக்காரர்கள்
எனவே இவ்விரு வேறுபட்ட குண அமைப்பு கொண்டவர்களை திருமண பந்தத்தில் இணைக்கின்றபோது என்னதான் குழந்தை குட்டிகள்,வசதி வாய்ப்புகளை பெற்றிருந்தாலும் அவர்களது இல்வாழ்க்கை தாமரை இலை மீது தண்ணீர்போல்தான் குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கும்.
ரிஷப ராசி
+++++++++
இந்த ராசி காரர்களுக்கு லக்கனத்தில் சுக்கிரன் ஏழில் செவ்வாய் இல்லாமல் இருத்தல் நலம்.இதேபோல் இருப்பின் அவர்கள் நிச்சயமாக மனைவியிடம் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி இருக்க பழகிக்கொண்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

உபய ராசிகாரர்கள்
++++++++++++++++++
(மீனம்,மிதுனம்,கன்னி,தனுசு)
இந்நான்கு ராசி காரர்களுக்கும் ஏழாமிடத்தில் ஆட்சி உச்சம்பெற்ற கிரகங்கள இருப்பின் அவை பாதகாதிபதியாகவும்,மாரகாதிபதியாகவும் மற்றும் கேந்திராதிபதியாகவும் வருவதால் இவர்களுக்கு லக்கனாதிபதியும் ஆட்சி பெற்று லக்கனத்திலே இருப்பின் மனமொத்த மனைவி அமைவது கடினம்.
மீனராசி-ஏழாமிட அதிபதி புதன் ஆட்சி,உச்சம்
தனுசு-ஏழாமிட அதிபதி -புதன் ஆட்சி
மிதுனம்,கன்னி-ஏழாமிட அதிபதி-குரு.
கடகம் மற்றும் சிம்ம ராசி
+++++++++++++++++++
கடக ராசிக்கு-சனி 7,8 க்குடைய அதிபதி
சிம்ம ராசிக்கு-6,7-க்கு உடைய அதிபதி சனி
இவ்விரு ராசிகளுக்கும் சனி ஆட்சி பெற்று இருந்தால் 6,8 என்ற மற்றொரு ஆதிபத்தியம் பெற்றிருப்பதால் நல்ல மனைவி ஆட்சி பெறாமல் இருத்தல் நலம்.
மேலும் சிம்மராசி அதிபதி சூரியனை ,அதன் பகைவரான ஏழாமிட சனி பார்த்தால் நல்ல மனைவி அமைவது சுத்தமாக கடினம் விதிப்பயனை என்ன செய்வது.
துலாம் ராசி
--------------------------
சர ராசிக்கு 2,7 க்கு உடையவர்கள் மாராகாதிபதி இவர்களுக்கும் மேற்கூறிய விதிப்படி செவ்வாய் ஆட்சி பெற்று லக்கனாதிபதியும் ஆட்சி பெற்றால் அதே நிலைதான்.
விருட்சக ராசி
+++++++++++++
1 க்குடையவர் செவ்வாய்,7-க்குடைய சுக்கிரன் ஆட்சி பெற்று பார்த்துக்கொள்வதால் கிரகயுத்தம் மற்றும் கேந்திரதோஷம் ஏற்பட்டு விடும்.
மகர ராசி
+++++++++++
சர ராசியாக இருப்பினும் சனி ,சந்திரன் ஆட்சி பெற்று பாரத்துக்கொள்வது நல்லதல்ல.
கும்ப ராசி
+++++++
லக்கனாதிபதியும்(சனி),ஏழாம் அதிபதியும்(சூரியன்) ஆட்சி பெற்று பார்த்துக்கொள்வது நல்லதல்ல.மேலும் சூரியனுக்கு சனி பகை கிரகம்.மனமொத்த மனையாள் அமைவது கடினம்.
உளவியல் தீர்வு
+++++++++++++++++
மேற்கண்ட அமைப்பை பெற்றவர்கள் அதிலிருந்து விடுபட
1) மனைவி/கணவர்களிடம் எதிர்பார்ப்பை குறைத்துககொள்ளுங்கள்
2)தீர்க்க முடியாத பிரச்சினையாக இருப்பதப்பதால் ஒருவரையொருவர் குறை கூறுவதை தவிருங்கள்.
3) குழந்தைகளின் நலனுக்காக நேரத்தை செலவிடுங்கள்.
4)தியானம் ,யோகா செய்தல், நல்ல புத்தகங்களை படிக்க நேரம் ஒதுக்குங்கள்..
5) நல்ல துணை அமையாததிற்கு விதிப்பயனே காரணம் என்பதை உணர்தல்."தீதும் நன்றும் பிறர்தரவாரா""
6)ஊழ்வினை வந்து உறுத்தும் என்பதற்கினங்க இது கர்ம வினைப்பயன் காரணம் என உணரல்.
7) இல்லற வாழ்வில் இருந்துகொண்டே பற்றற்ற வாழ்வினை மேற்கொள்ளல்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-