புத்திரஸ்தானம் எனும் ஐந்தாம் பாவம்:-
புத்திரஸ்தானம் எனும் ஐந்தாம் பாவம்:- ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் சூரியன் நின்றால் புத்திர தோஷம் இல்லை. சந்திரன் நின்றால் புத்திர தோஷம் இல்லை. செவ்வாய் நின்றால் தோஷம் இல்லை . புதன் நின்றால் தோஷம் இல்லை. குரு நின்றால் தோஷம் இல்லை. சுக்கிரன் நின்றால் தோஷம். சனி நின்றால் தோஷம். ராகு நின்றால் தோஷம். கேது நின்றால் தோஷம் இல்லை. இதில் ஐந்துக்குடையவன் ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் புத்திர பாக்கியம் உண்டு. ஐந்துக்குடையவன் பகை நீசம் பெற்றால் புத்திர தோஷம் ஆகும்.நீசம் பகை பெற்றாலும் நட்பு கிரகத்தின் சாரத்தில் நின்றால் புத்திர பாக்கியம் உண்டு. நீசம் பகை பெற்று 6.8.12ல் நின்றால் புத்திர தோஷம். 6.8.12ல் நின்று ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் புத்திர பாக்கியம் உண்டு.6.8.12ல் நின்று நட்பு கிரகத்தின் சாரத்தில் நின்றால் பத்திர பாக்கியம் உண்டு. குரு ஐந்தாம் பாவத்தில் நின்றால் காரகோ பாவ நாஸ்தி என்ற விதி உண்டு.அது ஐந்தாமிடத்தில் அமர்ந்த குரு ஆட்சி உச்சம் நட்பு பெற்றால் பாவ நாஸ்தி இல்லை. நீசம் பகை பெற்றால் பாவ நாஸ்தி ஆகும்.