அசுப கிரகங்கள் பலன் தரும் சூட்சமம

அசுப கிரகங்கள் பலன் தரும் சூட்சமம்

வணக்கம். ஒரு மனிதன் செயப்படும் விதம் அவனின் குணநலன் பொருத்து அமையும். அது போலவே, ஒவ்வொரு கிரகமும் செயல்படும் என்பதே விதி. இதில் முக்கிய பணியாற்றுவது கிரகங்களின் காரகத்துவம் எனும் செயற்பண்புகள் (அ) இயற்கை குணங்கள். கிரகங்களின் இயற்கை குணங்களை வைத்தே "சுபர்" மற்றும் "அசுபர்" என பிரித்தனர் நம் முன்னோர்கள்,
ஒரு கிரகம் தரும் பாவ ஆதிபத்திய பலன்களும், அதில் அமரும் கிரகத்தின் இயற்கை குணங்களை பொறுத்தே அமையும். ஒரு அசுப கிரகம் என்பது நல்ல குணத்தை தன்னுள் வைத்திருப்பது இல்லை. பின் அவர்கள் எவ்வாறு சுப ஆதிபத்திய அதிபதியகவோ அல்லது அதில் அமர்ந்தோ இருந்தால் எவ்வாறு நல்ல பலன்களை தரும் என்று எதிர்பார்ப்பீர்கள். சுபாவத்தில் கெட்டவனாக இரு[ப்பவன் எவ்வாறு நல்ல செயல் செய்யமுடியும். உதாரணமாக, ஒரு வங்கியை கொள்ளையடிக்கும் ஒரு கைதி, எவ்வாறு வங்கியின் மேலதிகாரி ஆகமுடியும். ஒருவேளை சந்தர்ப்பவசத்தில், அவன் மேலதிகாரியாக வந்தாலும், திறம்பட செய்வார்கள் என்பது சாத்தியமில்லை. இந்த விதி நல்லவர்களுக்கு அப்படியே தலைகீழ்.
ஒரு அசுப கிரகத்தின் காரகத்துவம் பாதிக்கப்படும் போது, அவை பாதிக்கும் கிரகத்தின் காரகத்துவம் பொருத்து பதிக்கப்படும் கிரகத்தின் காரகத்துவம் மாறுபடும்.
ஒரு கிரகத்தின் காரகத்துவம் எப்போது பாதிக்கப்படும்:
1. அமரும் ராசி பொருத்தும்
2. அமரும் நட்சத்திரம் பொருத்தும்
3. சேரும் கிரகம் பொருத்தும் (குறிப்பிட்ட பகையில்) மட்டும்,
4.. பார்க்கும் கிரக காரகதுவதை பொருத்தும்,

மேலே கூறிய நான்கில் எந்த அமைப்பு பலமோ அதுவே கிரக காரகத்துவதை அதிகம் பாதிக்கும்.
உதாரணமாக, செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம், அவர் நீர் கிரகமான மீனத்தில் அமர அவரின் அதீத வேகம் கட்டுக்குள் வந்து விவேகமாக மாறும். எனவே தான் செவ்வாய் மீனத்தில் அமரும் போது, செவ்வாய் தோசம் தருவதில்லை.
பலன் தரும் சூட்சுமம்
=====================
ஒரு சுப ஆதிபத்திய அதிபதியாகவோ அல்லது அதில் அமரும் அசுப கிரகம் காரக பலம் பெற்றால், அந்த சுப ஆதிபத்திய பலன்கள் தாமதப்படும் அல்லது கிடைக்காது என்பதே சூட்சுமம்.
உதாரணமாக, துலா லக்னம் இதன் பஞ்சம அதிபதி சனி. இவர் இயற்கை பாவ கிரகம். இவர் பூர்வ புண்ணிய அத்தியாக வந்து வலுபெற்றாலோ அல்லது ஆட்சி பெற்றாலோ, நிச்சயம் அந்த பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கும். அத்தோடு, அவரோடு ராகு, கேது மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்கள் சேர்ந்தால், சனியின் காரக பலம் கூடி, அவரின் அசுப தன்மை அதிகரிக்கும். இதனால் குழந்தை பேறு, அதிஷ்டம், முன்னோர் செல்வம் என்ற ஐந்தாம் வீட்டின் பலன்கள் கிடைப்பதில் அல்லது அதன் மூலம் சனியின் சுபாவ அசுப காரகதுவமான "தாமதம்", "உபத்திரவம்" "அவமானம்" அல்லது "தடை" அதிகரிக்கும். அது போலவே நான்காம் வீட்டின் காரகத்துவம் பாதிக்கும்.
இதுவே சனி, சுப கிரக சேர்க்கை அல்லது சாரம் பெறின் சனியின் அசுப காரகத்துவம், குறைந்து, நன்மை செய்வார்..
முடிவு
======
ஒவ்வொரு கிரகத்தின் அதிபதிய பலன், சுப மற்றும் அசுப கிரக காரகத்துவம் பொறுத்தே வெளிப்படும்.
அசுப கிரக காரக பலம் கெட்டால், அவர் பெற்ற ஆதிபத்திய பலம் அதிகம் கிடைக்கும்.
அசுப கிரக காரக பலம் அதிகரித்தால், அவர் பெற்ற ஆதிபத்திய பலம் குறைவாக கிடைக்கும். (அ) கிடைக்காது.
சுப கிரக காரக பலம் அதிகரித்தால், அவர் பெற்ற ஆதிபத்திய பலம் அதிகம் கிடைக்கும்.
சுப கிரக காரக பலம் குறைந்தால், அவர் பெற்ற ஆதிபத்திய பலன் குறைவாக கிடைக்கும்..

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-