செவ்வாய் தோசமா ..?இல்லை.!! *************************************** செவ்வாய் தேசம் நம் தமிழ்நாடு ***************************************

செவ்வாய் தோசமா ..?இல்லை.!!
***************************************
செவ்வாய் தேசம் நம் தமிழ்நாடு
***************************************

ஒரு காலத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் ஆணையே திருமணம் செய்ய வேண்டும்.அப்பதான் திருமண
வாழ்க்கை சிறப்பற அமையும்
என்ற நிலை இருந்தது.

அப்படி செய்யாமல் செவ்வாய்
தோஷம் இருக்கும் ஆண் பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம்
இல்லாத பெண் ஆணை இணைக்காவிட்டால் ஆண் பெண் இருவரில் யாருக்காவது மரணம்
நிச்சயம் என்று கூறிய காலம்
கடந்து விட்டது.

ஏனென்றால் செவ்வாய் 2,4,7,8,12
இல் இருந்தால் செவ்வாய் தோசம்
என்று கூறி வந்தோம்.

ஆனால் இன்று

1) மேஷம் விருச்சகத்தில் செவ்வாய் ஆட்சி வீடு தோஷம்
இல்லை.

2) கடகத்தில் செவ்வாய் நீசம்
தோஷம் இல்லை.

3)மகரத்தில் செவ்வாய் உச்சம்
தோஷம் இல்லை.

4) சிம்மம் கும்பத்தில் செவ்வாய்
தோஷம் இல்லை.

5) உபய ராசியான மிதுனம் கன்னி
தனுசு மீனத்தில் செவ்வாய் தோஷம் இல்லை

6)ரிஷபம் துலாமிலும் செவ்வாய்
இல்லை ஏன்னா செவ்வாய் இல்லையேல் சுக்கிரன் இல்லை
சுக்கிரன் இல்லையேல் செவ்வாய்
இல்லை என்ற காரணத்தால்.

7) செவ்வாயை குரு பார்க்க அல்லது சேர தோஷம் இல்லை.

8)செவ்வாய் உடன் சனி ராகு கேது
சேர தோஷம் போயே போச்சு

அட போங்கப்பா...
இன்னும் கொஞ்ச நாள்ல
செவ்வாய் கோளுக்கே குடிபோக
போறோம்.தோஷமாவது ஒண்ணாவது என்கின்ற நிலையில் இருக்கிறோம்.

அட இது மட்டும் இல்லீங்க
இன்னும் பல விதி விலக்குகள்
இருக்கு.பாவகரீதியான
செவ்வாய் தோஷ விலக்கு.
அத பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்.

இப்படி செவ்வாய் தோஷத்திற்கு
பல விதி விலக்குகள் தரப்பட்டு
செவ்வாய் தோஷம் இன்று பரிகாரசெவ்வாயாக மாறிய நிலையில் நாம் இருக்கிறோம்.

இந்தியா செவ்வாய் கிரகத்திற்கே
மங்கள்யானை அனுப்பி விட்ட
மத்தாய்ப்பில் செவ்வாய் தோஷம்
பரிகார செவ்வாய் ஆக மாறிவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது.

எப்படியோ நன்மை நடந்தால் சரி மக்கள் செவ்வாய் தோஷம் பற்றிய மரணபீதியில்
இருந்து இன்று விடுபட்டுள்ளனர்
அதுவரை மிக்க சந்தோஷம் தான்.

அது சரிங்க நீங்க இப்ப செவ்வாய்
தோஷம் இருக்குதுன்னு சொல்ல வர்றீங்களா?செவ்வாய் தோஷம்
இல்லைன்னு சொல்ல வர்றீங்களா? அப்படீன்னு நீங்க
எங்கிட்ட கேட்க வர்றது புரியுதுங்க.

சரிங்க விஷயத்திற்கு வருவோம்.

பூமிகாரகன் செவ்வாய் .அன்று
நமது தமிழக மக்களின் முக்கிய தொழில் விவசாயம்.

இன்று நமது மக்களின் முக்கிய
தொழில் ரியல் எஸ்டேட்.
அட பாவிகளா? பூமி காரகன்
செவ்வாயையே கூரு போட்டு
விற்க ஆரம்பித்து இன்று விவசாயத் தொழிலிலேயே
மண்ணை அள்ளி போட்டுட்டிங்க

அடிக்கடி சொல்லுவிங்களே
ஒரு பழமொழி செவ்வாய் வெறுவாய்னு உங்க வாயில
விழுந்து இன்னைக்கு வெறுவாயாவே போச்சு போங்க.

இன்னும் கொஞ்ச நாளுல மனுஷ
சோத்துக்கு பதிலா மண்ணைதான்
திங்க போறானு நினைக்கிறேன்.
அததான் கூறு போட்டு வித்து திண்ணுகிட்டு இருக்கிங்களே.

இப்ப சொல்லுங்க செவ்வாய்
தோஷம் இருக்காணு.

விவசாயம் எப்ப அழிவை நோக்கி போய் கொண்டு உள்ளதோ
அப்பவோ நம்ம தமிழ் நாட்டுல
செவ்வாய் தோஷமும் போயிருச்சுங்க...

அப்பாடா இப்பதான் நிம்மதினு தான சொல்றீங்க.

இல்லைங்க உங்க நிம்மதியெல்லாம் போச்சுன்னு
சொல்றேன்.

அன்றைய காலகட்டத்தில்
செவ்வாய் தோஷம் இருந்தது
என்றாலும் மக்கள் நிம்மதியா
கூட்டு குடும்பமா சந்தோஷமா
ஒற்றுமையா வாழ்ந்தாங்க...

இன்று தலைகீழா மாறி போச்சுதான..?

திருமணம் செய்த ஒரே மாதத்தில்
மணமகள் மணமகனை விவாகரத்து செய்தார்.இப்படி தான இன்றைக்கு அதிக விவாகரத்து வழக்கு போய்கிட்டு
இருக்கு.

எப்படிங்க இப்படி ஆச்சுன்னு தான கேட்கறிங்க

நீங்க தான் நாடி விதிப்படி செவ்வாய் கணவரை குறிக்கும்
கிரகம்னு சொல்றிங்க.அது உண்மை தான..

அதான் செவ்வாயே இல்லாம
போச்சேங்க...புரியலிங்களா?

எப்ப நீங்க செவ்வாய் தோஷம்னு இல்லைன்னு ஆச்சோ.

அப்பயே தமிழ் நாட்டுல கல்யாணம் செய்யற அத்தனை கணவருக்கும் உண்டான மரியாதையே போச்சு போங்க.

செவ்வாய்கே( கணவருக்கே)
உண்டான வீர தீர பராக்கிர அதிகாரம் அத்தனையும் இன்று
இழந்து இன்றைய தமிழக ஆண்கள் திருமணம் செய்ய
பெண் கிடைக்காமலும்,
அப்படியே திருமணம் செய்தாலும் மனைவியை பிரிந்து விவாகரத்து
வழக்குகாக நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருக்கும் அவல
நிலை உருவாகி விட்டதே.

அதுக்கெல்லாம் காரணம் என்று
செவ்வாய் பரிகார செவ்வாயாக
மாறி செவ்வாய் தோஷம் இல்லாமல் போனதோ அன்றே
தாலிகட்டிய கணவன் வாழவெட்டியானாக ஆகிவிட்டான்.

அன்றைக்கு ஒருவருடைய லக்னத்திற்கு பத்தில் செவ்வாய்
இருந்தால் விவசாயம்.இன்று
இன்ஜினியரிங். காலம் மாறியது
திருமணவாழ்வும் விவசாயம் போல் கருகுகிறது.

ஆகவே பொது ஜனங்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்

அவரவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள்,
செவ்வாய் நல்ல நிலையில் வலிமையாக இருப்பவர்கள் தான்
சிறப்பான திருமணவாழ்க்கை
வாழ்கிறார்கள்.

செவ்வாய் தோஷமே இல்லாதவர்கள் தான் அனுபவத்தில் திருமண வாழ்வில்
பல துன்பங்களை சந்திக்கிறார்கள்.அட கல்யணமே
ஆகமாட்டிங்குதுன்னா பாருங்க..

இப்ப உங்களுக்கு எல்லாம் ஒரு
உண்மையை சொல்கிறேன்.

அது ஏன் தமிழ்நாட்டுக்கு மட்டும்
செவ்வாய் தோஷம்.

வடமாநிலத்துக்கு எல்லாம்
செவ்வாய் தோஷம் இல்லை
அங்க எல்லாம் செவ்வாய்கிழமையை மங்கள நாள்னு சொல்லி செவ்வாய்
கிழமைல தான் திருமணம் மற்றும் பல சுபநிகழ்வுகளை செய்கிறார்கள்.

காரணம் காலப்புருஷ தத்துவபடி
வடக்கு திசையை குறிக்கும்
கடக ராசியில் செவ்வாய் நீச்சம்
பெறுவதால்.,வட
மாநிலத்தவர்களுக்கு செவ்வாய்
தோஷம் பார்ப்பது இல்லை.
அதனால் அவர்கள் செவ்வாயின்
சக்தியை பெற செவ்வாய் கிழமையில் சுபநிகழ்வுகளை செய்கிறார்கள்.

காலபுருஷ தத்துவபடி தெற்கு
திசையை குறிக்கும் மகர ராசியில்
செவ்வாய் உச்சம் பெறுவதால்
தென்நாடான நம் தமிழ்நாட்டில்
செவ்வாய் தோஷம் என்று கூறி
செவ்வாய் கிழமையை குருட்டு
நாள் என்று கூறி சுபநிகழ்வுகளை
செய்வது இல்லைஅதனால் நாம்
செவ்வாயை தோஷமா பார்க்கிறோம்.

அது தோஷம் இல்லை

கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய
மூத்தகுடி நம் தமிழ்குடி.

என்ற வாக்கயபடி

தென் திசையான பழனிமலையில்
குடிகொண்டிருக்கும் நம் தமிழ்
கடவுள் முருகபெருமானை
வணங்கி,தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் அனைவரும்
செவ்வாய்யை தோஷம் என்று
கூறாதீர்கள்.

செவ்வாயை நம் தமிழ் தேசம்
என்று கூறுங்கள்...
தமிழ் தேசம் என்று கூறுங்கள்
என்று கூறி கட்டுரையை
நிறைவு செய்கிறேன்.நன்றி

என் ஆழ்மனதில் உதித்த
சிந்தனையை உங்கள் முன்
வைத்தேன்.ஒருவரின் அனுபவம்
மற்றொருவருக்கு முழுமையாக
வருவது கடினம்.அதில் ஆயிரம் புரிதல்கள் இருக்கும்.அவரவர் அனுபவமே அவரவர்களுக்கு
சிறந்த ஆசான்.

ஆண்களுக்கே உண்டான வீரமுடன் திகழுங்கள் அதனால் தான் நம் தென்மதுரையில் இன்றும் காலையை அடங்கும்
ஜல்லிகட்டை நம் முன்னோர்கள்
வைத்து உள்ளார்கள்.

காளையை குறிக்கும் ராசி ரிஷபம்
சுக்கிரன் வீடு.
செவ்வாய் ஆகிய ஒரு வீரமுடைய ஆண் மகன் சுக்கிரன் ஆகிய
பெண்ணை தன் வீரத்தை காட்டியே திருமணம் செய்து
உள்ளார்கள்.

ஒரு பெண்ணைஅடக்கி ஆளும்
வீரத்திருமகனாக திகழ வேண்டும்
என்பதே.நம் ஜல்லிகட்டு.என்று
ஜல்லிகட்டை நிறுத்த கூறி வழக்கு தொடுத்தார்களோ.அன்று முதல்
விவாகரத்து வழக்கும் அதிகமாகி
விட்டது.

ஆண்மைக்கே (செவ்வாய்)
உண்டான வீரமுடன் திகழுங்கள்

பெண்மைக்கே (சுக்கிரன்)
உண்டான விவேகம் உங்கள் வீடு
தேடிவரும்.விவாகமும் இனிதே
நடந்து இன்புற்றிருக்க எல்லாம்
வல்ல முருகபெருமானை
பிரார்த்தனை செய்கிறேன்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-