குருவும் சனியும்

குருவும் சனியும
++++++++++++
குருவிற்கு சனியும்,சனிக்கு குருவும் சம கிரகம் என்றாலும் குருவிற்கு நட்பாக உள்ள சூரியன்,சந்திரன்,செவ்வாய் ஆகிய கிரகங்கள் சனிக்கு பகை கிரகங்களாக உள்ளது.
இதேபோல் குருவிற்கு பகையாக உள்ள கிரகம் புதன்,சுக்கிரன் கிரகங்கள் சனிக்கு நட்பாக உள்ளது.
எனவே குருவிற்கும் சனிக்கும் இடையே பனிப்போர் நடைப்பெறுகிறது.குருவும்,சனியும் சம சப்தமாக பார்க்கும்போது குருவின் வலிமையை சனி இழக்க செய்வார்.
குருவிற்குரிய தொழிலான போதகர்,வேதமந்திர சாஸ்திர அறிவு,யாகம் செய்தல்,புத்திரஞானம்,தேகசொளக்கியம்,நல்ல புத்தி,ஞாபகசக்தி,மந்திரம்,ராஜதந்திரம்,நியம நிஷ்டை,உயர்ந்த அந்தஸ்து,செல்வாக்கு,பணம்,பிராமண உபச்சாரம்,தீர்த்த யாத்திரை ஆகியவைகளை அடைய விடமாட்டார்.
இதற்கு மாறாக விஷமத்தனம்,கஞ்சத்தனம்,பிறர்க்கு தீங்கு செய்யும் எண்ணம்,கள்ளத்தனம்,வீண்கலகம்,தேகசஞ்சாரியாக,மதுகுடித்தல்,போதைப்பொருள் பயன்படுத்துதல் போன்ற செயல்களை செய்ய தூண்டுவார்.
குருவானவர் சூரியனுடன் சேரும்போதும் பார்க்கின்றபோதும் ஜாதகரை ஆன்மீக தலைவர்களாக மாற்றுகிறது.
சனியானவர் சூரியனுடன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோது ஜாதகருக்கும் அவருடைய தந்தையாருக்கும் ஒத்துபோகாத தன்மையை ஏற்படுத்துகிறது.சில நேரங்களில் தந்தையிருந்தும் அவரால் எவ்வித பலனுமில்லாமல் செய்துவிடுகிறது.
குருவுடன் சந்திரன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோதும் "குருசந்திர யோகத்தை "வாரி வழங்குகிறார்
"கூரப்பா இன்னமொரு புதுமை சொல்வேன் குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும் ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும் கூரப்பா கோதையரால் பொருளும் சேரும் குவலயத்தில் போர் விளங்கோன் கடாட்ச முள்ளோன் ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால் அப்பலனை யரையாதே புவியுளோர்க்கே"
பாடல் விளக்கம்:-
குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும் .அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும்.மனைவி வழியில் தனலாபம் ஏற்படும்.பூமியில் பேரும்புகழும் பெற்று இறையருளோடு நீடோடி வாழ்வான்.
குறிப்பு:-குரு சந்திர யோகம் தந்தபாவாதிபதி நீசம் பகை மற்றும் மறைவு ஸ்தானங்களில் இருப்பின் மேற்கண்ட பலனை தராது.எனவே பாடல் கருத்தை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் கோளாராய்சி செய்து பலனுரைக்கவும்.
சனியுடன் சந்திரன் சேர்ந்தாலும்,பார்த்தாலும் தாய்க்கு பீடை,திருமண தடை மற்றும் மன ரீதியாக ஊசாலாடும் மனம் படைத்தவராக இருப்பார்.மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைவது கடினம்.
குருவுடன் செவ்வாய் சேர்ந்தாலும்,பார்த்தாலும் "குரு மங்கள யோகம்"அளிப்பார்.
நல்ல வாழ்க்கை துணை அமையும்.திருமணத்திற்கு பிறகு மனைவியால் முன்னேற்றம் ஏற்படும்.நில புல வசதி ஏற்படும்.
சனியோடு செவ்வாய் சேர்ந்தாலும்,ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் வாகன விபத்து மற்றும் மனித புத்தியைக்கெடுக்கும்.
சனியும் செவ்வாயும் சேர்ந்து ஏழாம் இடத்தில் இருப்பின் ஜாதகர் காம எண்ணம் மிக்கவராக இருப்பார்.
சனி,செவ்வாய் இணைந்து பார்க்கப்படும் ஸ்தானம் பாதிக்கப்படுகிறது.
இதேபோல் தேவர்களின் தலைவனும் பேரின்ப நிலையை அள்ளி தரும் குருவும்,அசுரர்களின் தலைவனும் சிற்றின்ப நிலையை அள்ளி தரும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்.
ஜாதகத்தில் குரு ஆட்சி உச்சம் பெற்று சுப ஸ்தானத்திலே இருக்க பெற்றவர்கள் ஆன்மீக நாட்டத்தின் மூலமாக தியானத்தின் மூலம் நித்திய பேரின்பத்தை அடைவார்கள்.ஆனால் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று சுப ஸ்தானத்தில் இருக்க பெற்றவர்கள் வாழ்வின் எல்லாவித லொளகீக இன்பங்களையும் அடைந்து சிற்றின்பத்தின் உச்ச நிலையை அடைவர்.
இப்படிப்பட்ட குருவும் சுக்கிரனும் இணைந்தோ அல்லது பார்த்துக்கொள்ளும்போது அந்த தசா புத்திகளான குரு தசையில் சுக்கிர புத்தியோ அல்லது சுக்கிர தசையில் குரு புத்தி சிறப்பாக அமைவதில்லை.
சனி சுக்கிரன் சேர்ந்து அல்லது பார்த்துக்கொள்வது கனரக வாகனங்களுக்கு யோகம்,ஆடு,மாடு ஜீவ ராசிகளுக்கு ஆகாது.திருமணம் தடைபடும்.
குருவும் ,புதனும் சேர்ந்து இருந்தாலும் ,ஒருவரையோருவர் பார்த்துக்கொண்டாலும் கல்வி ,கேள்விகளில் சிறந்து விளங்குவார்.ஜோதிட ஞானம்,வேத சாஸ்திரஞானம்,கவிதை எழுதுவது ,மற்றும் பேச்சாற்றலில் சிறந்து விளங்குவான்.
சனியும்,புதனும் சேர்ந்து இருந்தாலும் ,ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும் கல்வியில் நாட்டமின்மையை ஏற்படுத்துகிறது.ஜாதகரை எலக்ட்ரானிக் பொருட்களை பிரித்து பார்த்தால்,மெக்கானிக் மற்றும் பொறியில் நாட்டங்களை ஏற்படுத்துகிறது.மின்சாதன பொருட்களை பிரித்து மேற்பொருத்துதல் போன்ற விஷயங்களில் நாட்டத்தை ஏற்படுத்துகிறது.(இலக்கிய,கலை,பேச்சு நாட்டம் ஏற்படுத்தாது).

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-