சகல யோகம் தரும் சந்திரன்
சகல யோகம் தரும் சந்திரன்
________________________________
கால புருஷ தத்துவ அமைப்பிற்கு இறை நிலை சந்திர பகவானை கடக ராசி 4 ம் வீட்டுக்கு அதிபதியாக அமர்த்தி தாய் , மண் , மனை , வாகனம் , சுகம் போன்ற அமைப்புகளில் இருந்து நன்மைகளை செய்ய பணித்திருக்கிறார், கடக சர ராசி நீர் தத்துவ அமைப்பிற்கு சந்திரன் தரும் யோக பலன்களை பற்றி சற்றே பார்ப்போம் , " எண்ணம் போல் வாழ்க்கை " என்று நமது கிராமங்களில் ஒரு செலவாடை உண்டு , ஒருவர் நன்மை , தீமை பலன்களை அனுபவிக்கும் பொழுது , வயதான பெரியோர்கள் உதிர்க்கும் வார்த்தை இதுவாகும் , இதற்க்கு 100 சதவிகிதம் பொருத்தமானவர் சத்திர பகவானே ஒருவரது சுய ஜாதக அமைப்பில் இவர் நல்ல நிலையில் இருக்கும் பொழுதும் , கடக ராசி வலுப்பெறும் பொழுதும் ஜாதகருக்கு குறுகிய காலத்தில் சகல யோகத்தையும் வாரி வழங்கிவிடும் தன்மை கொண்டவர் இந்த சந்திர பகவான் , இவரின் அனுமதின்றி ஒருவருக்கு எவ்வித எண்ணங்களும் பலிதம் பெறுவதில்லை .
ஒருவருக்கு தாய் வழியிலும் , குடியிருக்கும் வீடு அமைப்பிலும் , சொகுசான வாகன யோகமும் , சுகமான வாழ்க்கை அமைய , சுய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையிலும் , கடகம் நல்ல பலமும் பெறவேண்டும் , ஒருவருக்கு எந்த லக்கினம் என்றாலும் சரி கடகம் நல்ல வீடுகளுடன் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகருக்கு மேற்கல்வி , தாய் வழி உதவி , சொகுசான வீடு வாகனம் , போன்ற யோக அமைப்புகள் நிச்சயம் கிடைக்கும் , மேலும் ஜாதகர் நல்ல குண நலன்களுடன் , பெருந்தன்மையான அமைப்பை இயற்கையாகவே பெற்று இருப்பார் , சொத்து சுகம் நிறைய அமைந்து இருக்கும் , மக்கள் செல்வாக்கு , கலை துறையில் இறந்து விளங்கும் யோகம் , மன நிம்மதி , மன உறுதியான செயல் பாடுகள் , தன்னம்பிக்கை , வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன் உதரணாமாக வாழும் யோகம் , மனதளவில் நல்ல எண்ணங்கள் கொண்டவராகவும் , அனைவருக்கும் நன்மை செய்யும் தன்மை உள்ளவராகவும் ஜாதகர் காணப்படுவார் .
வளர் பிறை சந்திரனாக அமரும் பொழுது ஜாதகருக்கு வழங்கும் யோகம் :
ஒருவருக்கு ரிஷபம் , கடகம் , துலாம் , தனுசு , மீன ராசியில் வளர் பிறை சந்திரன் நல்ல நிலையில் , அமரும் பொழுது ஜாதகருக்கு , நல்ல வசதி மிக்க வீடு , வண்டி வாகன யோகம் , பொருளாதார முன்னேற்றம் , சமுக வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் , மக்கள் செல்வாக்கு , ஜாதகருக்கு திடீர் அதிர்ஷ்டம் , மன வாழ்க்கையில் நிம்மதி , சந்தோசம் , யோகம் , உறவினர் ஆதரவு, சொந்த பந்தங்கள் ஜாதகருக்கு ஓடிவந்து உதவி செய்யும் யோகம் , நல்ல குழந்தைகள் , அவர்களால் அதிர்ஷ்டம் என மிகவும் சிறப்பான யோக பலன்களையே வாரி வழங்குகிறார் , இதனால் ஜாதகரின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்து விடுகிறது .மேலும் தாய் மூலம் வரும் யோகம் , தாய் மூலம் நல்ல வளர்ப்பு, அவர்களின் அன்பும் ஆதரவு எல்லா காலங்களிலும் கிடைக்க பெரும் யோகம் என ஜாதகருக்கு அடிப்படை வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் .
தேய்பிறை சந்திரனாக அமரும் பொழுது ஜாதகருக்கு வழங்கும் யோகம் :
ஒருவருக்கு மேஷம் , மிதுனம் , கடகம் , சிம்மம் ,கன்னி ,விருச்சகம் ராசிகளில் தேய்பிறை சந்திரனாக நல்ல நிலையில் , அமரும் பொழுது ஜாதகருக்கு வியாபார துறையில் சிறந்து விளங்கும் யோகமும் , கற்ற கல்வியினால் மேன்மை பெரும் அமைப்பும் , அரசு துறையில் பணியாற்றும் யோகமும் , மக்கள் செல்வாக்கால் அரசியல் பதவிகளில் முன்னேற்றம் பெரும் யோகமும் , வெளிநாடுகளில் இருந்து அதிக வருமானமும் , யோக வாழ்க்கையையும் , தொழில் முறை யோகமும் ஜாதகருக்கு நிறை கிடைக்கின்றது, மேலும் விவசாயம் , பண்ணை தொழில் , நான்கு கால் ஜீவன் வளர்ப்பு , குடிநீர் விற்பனை செய்யும் தொழில்களில் சிறந்து விளங்கும் நிலையை ஜாதகருக்கு மிக விரைவாக தந்து விடுகிறார் . ஒருவருடைய ஜாதக அமைப்பில் லக்கினம் எதுவென்றாலும் , கடகம் எந்த எந்த பாவகமாக வந்தாலும் நல்ல நிலையில் இருக்கும் பொழுது ஜாதகருக்கு மேற்கண்ட நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்க பெறுகின்றது ,
சந்திர பகவான் ஒருவரின் மனதையும் , எண்ண ஆற்றலையும் , யோகமான வாழ்க்கை நிலையையும் , நிர்ணயம் செய்கிறார் , கடக ராசி சர ராசியாக வருவதால் இந்த அமைப்பு நல்ல நிலையில் அமர்ந்தால் மிக குறுகிய காலத்தில் சகல யோகங்களையும் வாரி வழங்குகிறார் , இதுவே மாறி அமைந்தால் இதற்க்கு நேர்மாறாக பலனை வாரி வழங்கி விடுகிறார் , அதிகம் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆகும் சூழ்நிலைக்கு ஆட்படுபவர்களுக்கு இந்த சந்திர பகவானும் , கடக ராசியும் நல்ல நிலையில் இருப்பதில்லை , இதன் காரணமாக ஜாதகரே தனது உடல் நிலையை கெடுத்துக்கொண்டு வாழ்க்கையையும் கெடுத்து கொள்கிறார் .
சந்திரனால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்க படும் ஜாதக அமைப்பை
பெற்றவர்கள் மன போராட்டம் , மன நிம்மதி இழப்பு , தன்னம்பிக்கை அற்ற நிலை , தனிமையில் மன வேதனை படும் நிலை , செல்வ நிலையில் விருத்தி அற்றவர்கள் , குடியிருக்க நல்ல வீடு அமையாதவர்கள் , சிறப்பான வண்டி வாகன யோகம் இல்லாத நிலையில் இருப்போர் , வண்டிவாகன தொழில்களில் பல சிரமங்களை அனுபவித்து கொண்டு இருப்போர்கள் , மணவாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் , என அனைவரும் வளர் பிறையில் வரும் , திங்கள் அன்று திருப்பதி சென்று ஸ்ரீ வாரி தீர்த்தத்தில் நீராடி , வெங்கடாசலபதியை தரிசனம் செய்து வருவோர்க்கு நிச்சயம் சந்திரனால் முழு யோகம் கிடைக்க பெறுவார்கள் .
Comments
Post a Comment