சப்த விடங்கத் தலங்கள்;
சப்த விடங்கத் தலங்கள்;
*************************************
இத்தலங்கள் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் உள்ளன.''டங்கம்''என்றால் உளி ''வி''என்றால் செதுக்காதது.எனவே உளியால் செதுக்காத சுயம்பு மூர்த்தங்கள் உள்ள தலங்கள் இவையாகும்.இந்த ஏழு தளங்களிலும் தியாகராஜருக்கு தனித்தனிப் பெயர்களும்,நடனங்களும் உள்ளன.
1 )திருவாரூர்- வீதிவிடங்கர்-அசபாநடனம் (மேலும் கீழுமாக ஏறியும்,இறங்கியும்,முன்னும்,பின்னும்மாக சென்று வந்தும்,அடியவர்கள் மந்திரத்தை மானசிகமாகச் ஜெபிக்கின்ற நிலையில் உள்ளம் மகிழ்ந்து இறைவன் ஆடும் நடனம்)
2 )திருநள்ளாறு-தகவிடங்கர்-உன்மத்தநடனம் (பித்துக் கொண்டவன் தலை சுற்றி ஆடுவது போல் ஆடுவது)
3 )திருநாகைக் காரோணம்-சுந்தர விடங்கர்-பாராவாரகரங்க நடனம் (கடல் அலைகளின் அசைவை பொறுத்து ஆட்டும் நடனம்)
4 )திருக்காளாயில்-ஆதிவிடங்கர்-குக்குடனடணம் (கோழி நடப்பது போன்று ஆடும் நடனம்)
5 )திருக்கோளிலி-அவனி விடங்கர்-பிருங்க நடனம்(மலர்களுக்குள் வண்டு குடைந்து சென்று ஆடுவது போன்ற நடனம்)
6 )திருவாய்மூர்-நிலவிடங்கர்-கமலநடனம் (நீர் நிறைந்த குளத்தில் ஒற்றைத்தாளில் நிற்கும் தாமரை மலர் காற்றால் தள்ளப்பட்டு மெல்லென ஆடுவது போன்ற நடனம்)
7 )திருமறைக்காடு-புவனி விடங்கர்-அம்ஸபாத நடனம்
(அம்ஸம் என்பது அன்னம் ,பாதம் என்பது கால் ,அன்னம் நடப்பது போன்று ஆடும் நடனம்)
Comments
Post a Comment