அஷ்டமத்துசனியின் ஆதிக்கம் குறைய;

அஷ்டமத்துசனியின் ஆதிக்கம் குறைய;
***********************************************************
அஷ்டமத்து சனி என்பது நமது ராசிக்கு 8ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் 2 1/2 வருட காலமாகும்.இது 7 1 /2 சனியை விட வலிமை வாய்ந்ததாகும்.இக்காலத்தில் தடைகளும் ,தாமதங்களும் ,இனம்புரியாத கவலைகளும்,எதிர்ப்புகளும் வந்து செராமலேயும் இல்லத்தில் சுபகாரியங்கள் இனிதே நடைபெறவும்,எடுத்தகாரியத்தில் எளிதில் வெற்றி பெறவும் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனிஸ்வரருக்கு எண்ணைக்காப்பிட்டு,நீலவஸ்திரம் அணிந்து வாசமுள்ள மாலை சூட்டி எள்திபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.
அதன் பிறகு அனுமனுக்கு வயதுக்கு ஏற்ற வெற்றிலையை மாலையாக்கி அணிவித்தும்,வடமாலை அணிவித்தும் வழிபாடு செய்யாலாம்,விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு வழிபட்டு ,நந்திஸ்வரர் கொம்பு வழியே சிவபெருமானையும் வழிபட்டு வரவேண்டும்.இப்படி முறைபடி யாக சிவாலய தரிசனம் செய்தாலே அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் குறைந்து இன்பங்கள் வந்து சேரும் இனிய வாழ்வும் மலரும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-