அஸ்வினி மகம் மூலம் கேட்டை ரேவதி ஆயில்யம் ... கண்டாந்த நட்சத்ரமா .. ! ,,, ? --
அஸ்வினி மகம் மூலம் கேட்டை ரேவதி ஆயில்யம் ... கண்டாந்த நட்சத்ரமா .. ! ,,, ?
------------------------------------------------- --------
.
இந்திய ஜோதிடம் தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் கர்மம் ஆரோக்யம் ஆகியவற்றை லக்னத்தோடு இரண்டு பாவங்களை சம்பந்த படுத்தி பலன் சொல்லும் முறை உள்ளது. இவையெல்லாமே இந்த கலாச்சாரத்திற்கு உண்டான ஒழுக்க கோட்பாடுகள். இந்த முறை மேல் நாட்டு ஜோதிடத்தில் இல்லை.
அதேபோல் இந்திய ஜோதிடத்தில் மிக முக்யமாக கருதப்படும் கண்டாந்த அணுகுமுறை ராகு கேதுக்களின் நிழல் தோஷங்கள் மேல் நாட்டில் கிடையாது. கண்டாந்தம் என்பது கண்டம் அந்தம் என்ற இரு வார்த்தைகளின் கோர்வை. ராசி மண்டலம் மூன்று கணுக்களாக இணைந்துள்ளது. முதல் கணு மேஷத்திலும் 2ம் கணு சிம்மத்திலும் 3ம் கணு தனுசிலும் உள்ளது. இது அதாவது இந்த கணு பிரம்மாவின் கண்களாகவும் விஷ்ணுவின் தொப்புளாகவும் வேத ஜோதிட புராணம் கூறுகிறது. அதாவது நீரில் அழிந்து காற்றில் அக்னியால் அதாவது சூரியனால் ஆவியாகி காற்றில் கலந்து மறுபடியும் அக்னியில் இருந்து பிரியும் நெருப்பு கோளமாக பிரிந்து உருவாகிற பிரபஞ்ச தத்துவம். இது ஒரு சுழற்சி முறை. அக்னியில் தொடங்கி நீரில் அதாவது நெருப்பு ராசியில் தொடங்கி நீர் ராசியில் முடியும். இது ராசி சக்கரத்தில் மூன்று கணுக்களில் ஆரம்பம் முடிவில் இருக்கிறது. அஸ்வினி மகம் மூலத்தில் தொடங்கி ஆயில்யம் கேட்டை ரேவதியில் முடியும். ஒரு ஜனனம் பகல் பொழுதில் கண்டாந்தத்தில் நிகழ்ந்தால் பித்ரி கண்டாந்தம். இரவில் கண்டாந்த ஜனனம் என்றால் மாத்ரி கண்டாந்தம் எனப்படும். ரேவதி அஸ்வினி சந்திப்பில் ஜனனம் நிகழ்ந்தால் அது ஸ்வ கண்டாந்தம் அது ஜாதகனின் பூர்வ வினை தோஷம். ஆயில்யம் மகம் சந்தி ஜனனம் மாத்ரி கண்டாந்தம். தாய் வழி தோஷம். மூலம் கேட்டை சந்தி ஜனனம் பித்ரி கண்டாந்தம். தந்தை வழி தோஷம். இதில் கேட்டை மூலம் சந்தி ஜனனம் தான் அதுவும் அபுக்த கண்டாந்தம் எனும் கேட்டையின் கடைசி நாழிகை மூலத்தின் முதல் நாழிகை மிகவும் மோசமானதாக நாரத புராணம் சொல்கிறது. அந்த குழந்தை அற்ப ஆயுளை கொண்டதாகும். அப்படி ஆயுள் பலம் நின்று வாழ்ந்தால் தந்தயை 8 வருடம் பார்க்கக் கூடாது என்பர். லக்ன கண்டாந்தம் மூளை வளர்ச்சியை பாதிக்கும். ராசி கண்டாந்தம் உடல் நிலை ஆயுளை பாதிக்கும்.
மிகவும் ஆழமான பதிவு, நன்றி..அய்யா
ஆம் சார், இந்த கண்டாந்த நட்சத்ர பாதங்களான ரேவதி-4, அஸ்வினி-1, ஆயில்யம்-4, மகம்-1, கேட்டை-4 மற்றும் மூலம்-1 இல் பிறந்தவர்கள் வாழ்நாளில் ஏதோ ஒன்றுக்காக வாழ்நாள் முழுவதும் நிம்மதி இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இதில் அதிகம் பாதிக்கபடுபவர்கள் என்று பார்த்தால் கேதுவின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் என்று பெரும்பான்மையாக கூறலாம். இந்த சந்திரனை குரு பார்த்துவிட்டால் இவர்களுக்கு கவலை இல்லை.
கெண்டாந்த தோசம்மிகவும் தீமைபயப்பதாக பிரச்சன சாஸ்திரம்கூறுகிறது இந்தநாளில்முகூர்த்தம் வைக்க தீவிபத்து உஷ்ணவியாதி குழந்தைகளுக்கு ஆபத்து உறவினர் அளிவு ஏற்படுவது உறுதி துரதிர்ஸ்டம் நம்பஞ்சாங்கங்கள் கெண்டந்தத்தில் முகூர்த்தம்குறித்துள்ள தீய நிலைஇப்போதுகாணப்படுகிறது
கெண்டாந்தத்தில் அபுத்தசந்தி எனனும்பகுதிமிகவும் தீமையாகும் அஸ்வதியின் ஆதி மூன்றேமுக்கால்நாழிகை ரேவதி கடைபாதம் மூன்றேமுக்கால் நாழிகை ஆக 7நாழிகை இவ்விதம்மற்றைய கெண்டாந்த நட்சத்திரங்களுக்கும் உணரவே்டும்
கடைசி 2 நாழிகை பௌர்ணமியிலிருந்து வளர்பிறை 5,10,15 வது நாள், முதல் 2நாழிகைகள் தேய்பிறையில் இருந்து 1,6,11வது நாள் ஆகியவை திதி கண்டாந்திர தோஷம் இதை போலவே கடகம்,விருச்சிகம்,மீனம் இவற்றின் கடைசி 2பாகைகள் சிம்மம் மேஷம இவற்றி்ன் முதல் 2 பாகைகளும் அசுபமாக கருதப்படுகிறது
4ல் சந்திரன் --மாந்தி அல்லது நவாம்ச ராசியில் இந்த இணைவு இருப்பின் தற்கொலை புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் மற்ற கிரகஅமைப்பை யும் பார்த்து கொள்ளவேண்டும் —
Comments
Post a Comment