திருமணம் தோஷம் நீங்க

திருமணம் தோஷம் நீங்க
---------------------------------------------

ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் திருமணத்தைப் பற்றி அறிய லக்னத்துக்கு ஏழாம் இடத்தை ஆராய்வார்கள் ஏழாம் இடத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகம் தான் திருமணத்தை கைகூட்டும் அதன்படி தசா புக்தி அந்தரம் ஆகியவற்றில் ஏழாம் வீட்டிற்குரிய கிரகம் நடத்தும் காலத்தை அறிந்து அந்தக் காலகட்டத்தில் திருமண பேச்சை நடத்தினால் ஆண் பெண் இருவருக்கும் தடையில்லாமல் திருமணம் நடக்கும் 7ஆம் வீட்டிற்குரிய கிரகம் திருமணம் நடக்க காரணமான கிரகமாக இருந்தாலும் சுக்கிரனுக்கும் முக்கிய பங்கு உண்டு சுக்கிரன் கடகம் சிம்ம்ம ஆகிய வீடுகளில் பகையாகவும் கன்னி வீட்டில் நீசமாகவும் வருகிறார் இந்த வகையில் ஜாதகம் அமைய பெற்றவர்களுக்கு சுக்கிரனாலும் திருமண தோஷம் ஏற்படும் எனவே திருமண தோஷம் உள்ள ஆண் பெண் இருவரும் கீழ்கண்ட பரிகாரத்தை செய்ய 90 நாட்களில் திருமண தோஷம் நீங்கும் திருமணம் தடையில்லாமல் நடக்கும்
பரிகாரம்-1
உங்கள் பகுதியில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை விரதமிருந்து 27 வாரம் ராகு காலத்தில் நெய்விளக்கு போட்டுவர திருமண தோஷம் நீங்கும் 90 நாட்களில் திருமணம் நடக்கும்
பரிகாரம்-2
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி சென்று அங்குள்ள சுந்தரேஸ்வர்ர் மற்றும் அம்பாளை வழிபட்டு வந்தால் 90 நாட்களில் திருமணதோஷம் நீங்கும்
பரிகாரம்-3 [பெண்களுக்கு மட்டும்]
திருமண தோஷம் உள்ள பெண்கள் தங்கள் உறவுகளில் ருதுவாகாமல் கன்னியாக உள்ள [வயது11முதல்13க்குள்] மங்கையை ஒரு வியாழக்கிழமை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து சைவ உணவு விருந்து கொடுக்க வேண்டும் விருந்து முடிந்த்தும் சந்தனம் மற்றும் மஞ்சள் வண்ண ஜாக்கெட் துணி இரண்டும் அதனோடு ஐந்து மஞ்சள் கிழங்கு குங்கும்ம் கண்ணாடி வளையல்கள் மூன்று முழம் மல்லிகைப்பூ ஆகியவற்றோடு காணிக்கையும் ஒருதட்டில் வைத்து விருந்து சாப்பிட்ட பெண்ணை கிழக்கு முகமாக நிற்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும் கொடுத்த தட்டை திரும்ப வாங்க கூடாது இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் திருமணம் முடியும்
களத்திர தோஷம் நீங்க…..
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ஆம் வீட்டிற்குரிய கிரகம் 3ஆம் வீட்டில் வருமேயானால் களஸ்திர தோஷமாகும்
அதேபோல லக்னத்துக்கு 7 க்குடைய கிரகம் 5ஆம் வீட்டிற்கு வந்தாலும் களத்திர தோஷம் ஆகும்
மேலும் லக்னத்துக்கு 10 க்குடைய கிரகம் 7வந்தாலும் களஸ்திர தோஷமாகும் மேற்கண்ட தோஷம் ஆண் பெண் இருவருக்கும் வரும் இப்படிப்பட்ட ஜாதகம் அமைந்தவர்களுக்கு இருதாரம் என்றும் அறியலாம் இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைப்படும் இந்த தோஷத்தை கீழ்க்கண்ட எளிய பரிகாரம் ஆலயப் பரிகாரம் வாயிலாக நீக்கி மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடையலாம்

பரிகாரம் [பெண்களுக்குமட்டும்]
ஒன்பது செம்பருத்திப்பூக்கள் ஒரு சிவப்புநிற ஜாக்கெட் துணி 27 கொண்டைக் கடலைகள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும் ஒரு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை கோமியம் தெளித்து சுத்தம் செய்த பின் சிவப்பு ஜாக்கெட் துணியில் செம்பருத்திப்பூ மற்றும் 27கொண்டைக்கடலைகளை வைத்துகட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும் [ மஞ்சள் துணியில் தங்களது குலதெய்வத்திற்குத் தனியே காணிக்கை எடுத்து வைக்க வேண்டும்] பகல் முழுவதும் விரதமிருந்து மாலையில் யாருக்கும் தெரியாமல் அந்த முடிச்சை எடுத்துச்சென்று தெப்பகுளம் கண்மாய் ஆற்றுபடுக்கை போன்ற நீர்நிலைகளில் போட்டுவிட்டுவர வேண்டும் இவ்வாறு செய்தால் களஸ்திர தோஷம் நீங்கும் திருமணம் நடக்கும்
பரிகாரம் [ஆண்- பெண் இருவருக்கும்]
வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்கு செவ்வாய்கிழமையில் சென்று கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்க வழிபாடு செய்ய சொல்லி வழிபட்டுவர வேண்டும் சந்நிதியில் கொடுக்கும் பிரசாத்த்தை[ தீருநீறு குங்குமத்தை] பூஜைஅறையில் வைத்து வணங்கிவர வேண்டும் இவ்வாறு செய்த 90வது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கிவிடும் திருமணம் நடக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.திருமணத்திற்கு பிறகு தம்பதி சகிதம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டுவர வேண்டும் [ களத்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி மேன்மையுறலாம்]
கணவன்- மனைவி பிரிந்துவாழும் தோஷம் நீங்க…….
சில குடும்பங்களில் திருமணம் நடந்த சில காலத்துக்குள் கணவன் மனைவிக்கிடையே பல்வேறு காரணங்களால் சண்டை ஏறபட்டுவிடுகிறது அதனை தொடர்ந்து பிரிந்து வாழ்கின்றனர் பிரிந்தவர்கள் கூடிட கணவன் மனைவி இருவருமே தனித்தனியாகப் போலி மந்திரவாதி மாந்திரீகத்தின்மீது நம்பிக்கை வைத்து அவர்களை நாடுகின்றனர் அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை அவர்களிடம் கொடுத்தும் பயனில்லாமல் போகின்றது இவர்கள் ஒன்று சேர ஒரு எளிய பரிகாரத்தை இங்கு காண்போம்
கணவனை பிரிந்து வாழும் மனைவி தன் கணவன் பயன்படுத்திய ஆடை அல்லது கைக்குட்டை போன்ற ஒரு துணியை எடுத்துக் கொண்டு அதில் 27 கொண்டைக் கடலையை வைத்து முடிய வேண்டும் [ கணவரின் துணி கிடைக்காதவர்கள் ஒரு மஞ்சள் துணியில் முடியலாம் ]அதனை தான் பயன்படுத்தும் தலையணைக்கு கீழ் வைத்து உறங்க வேண்டும் தொடர்ந்து 27 நாட்களுக்கு அந்த முடிச்சை வைத்து உறங்கி 27 நாட்கள் முடிந்த மறுநாள் காலையில் அதனை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பிரிந்து சென்ற என் கணவரை கொண்டு வந்து சேர் குருபகவானே என்று108 முறை சொல்ல வேண்டும் பின்பு அதனைத் தண்ணீரில் போட்டுவிட வேண்டும் இவ்வாறு செய்த 90 நாட்களுக்குள் பிரிந்து சென்ற கணவர் வந்துவிடுவார்
மனைவியைப் பிரிந்து வாழும் கணவன் தங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் இரண்டு பாம்புகள் இணைந்த நிலையில் உள்ள சிலையை வணங்கிவர வேண்டும் தொடர்ந்து 90 நாட்களுக்கு வணங்கி வர பிரிந்து சென்ற மனைவி எந்த மறுப்பும் இல்லாமல் வெறுப்பு விலகி நீங்கள் அழைக்காமலேயே வந்து உங்களுடன் சேர்ந்து வாழ்வார்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-