“புத்திரபேறு”--
“புத்திரபேறு”---எட்டாக்கனியில்ல...எல்லா தம்பதியர்க்கு கிடைக்கும் அற்புத பொக்கிஷமே....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புத்திரதோஷம் பற்றி...
இன்றைய இயந்திர வாழ்க்கையில் நமக்கு எல்லாம் உடனடியாக கிடைக்கவேண்டும் என்று பணத்தின் பின்பு ஓடிக்கொண்டு இருக்கிறோம். கல்வியில் அவசரம், வேலைகிடைப்பதில் அவசரம், வீடு, வாகனம், வசதி கிடைப்பதில் இருக்கும் அவசரம், திருமணப்பேறிலும், புத்திரபேறிலும் நாம் அதிக அவசரம் காட்டுவதில்லை. திருமணமான சில தம்பதியர்க்கு குழந்தைபேறு என்பது உடனடியாக கிடைகிறது, சிலருக்கு அது எட்டாக்கணியாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராயும் பொழுது அவர்களுக்கு “புத்திரதோஷமும்”, “சயனதோஷமும்” இருப்பதே அதற்கு காரணம். நவீன மருத்துவம் அதை “ஜெனிடிக் டிஸ்ஆர்டர்” என்று கூறுகிறது. இதை பண்டே அறிந்த நமது மகரிஷிகள் அதற்கான வழிபாடுகளையும், தீர்வினையும் கூறியுள்ளார்கள்.
தம்பதியர்களிடேயே குழந்தை பாக்கியம் தடை ஏற்படுவதற்கான காரணங்கள்:
ஒருவரது ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு ஐந்தாமிடம் குழந்தை பாக்கியத்தை பற்றி அறிந்து கொள்ளும் ஸ்தானமாகும். மேலும் புத்திரகாரகன் என்று சொல்லக்கூடிய வியாழன் கிரகத்தின் நிலையை கொண்டும் குழந்தைகள் உண்டா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஐந்தாம் இடமும், வியாழன் கிரகமும் பலம் பெரும் பொழுது நிச்சயமாக வாரிசு ஏற்படும். மேற்கூறிய ஸ்தானமும், வியாழன் கிரகமும் பலம் குறையும் பொழுது வாரிசு ஏற்படுவதில் தடை ஏற்படுகிறது.
பின்வரும் காரணங்களால் புத்திர பாக்கியம் ஏற்படுவதில் தடைகள் ஏற்படுகிறது.
1. லக்னத்திற்கு ஐந்தாம் இடத்து அதிபதி நீச்சம் அடைதல்.
2. ஐந்தாம் இடத்து அதிபதி மறைவு ஸ்தானங்களில் மறைவது.
3. ஐந்தாம் இடத்து அதிபதி சனி அல்லது சர்பங்களின் நட்சத்திர சாரத்தில் இருப்பது அல்லது நட்சத்திரத்தில் இருப்பது.
4. ஐந்தாம் இடத்து அதிபதி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடைதல்.
5. ஐந்தாம் இடத்து அதிபதி லக்னாதிபதி அல்லது 7-ம் இடத்து அதிபதியுடன் சேர்க்கை பெறுதல்.
6. ஐந்தாம் இடத்து அதிபதி தன் ஆட்சி அல்லது உச்ச வீட்டில் வக்கிரம் அடைதல்.
7. ஐந்தாம் இடத்து அதிபதியுடன் செவ்வாய், சனி, இராகு, கேது, புதன் போன்ற கிரகங்களுடன் தனித்து அல்லது சேர்ந்திருந்தாலும்.
8. புத்திரகாரகன் நீச்சம் பெற்றிருந்தால்.
9. புத்திரகாரகன் சர்பங்களின் சாரம் பெரும்பொழுது.
10. புத்திரகாரகன் சூரியனுடன் அஸ்தங்கம் பெரும்பொழுது அல்லது மறைவு ஸ்தானங்களில் மறைவது அல்லது அஸ்தங்கம் அடைவது.
11. புத்திரகாரகன் தன் ஆட்சி, உச்ச வீட்டில் வக்கிரம் அடைதல்.
12. புத்திரகாரகன் லக்ன பாதகாதிபதி சாரம் பெரும்பொழுது.
13. 5-ம் வீட்டு அதிபதி அந்த வீட்டுக்கு மறைவு ஸ்தானங்களில் மறைவுபெருதல்.
14. தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, தோஷம் இல்லாத ஜாதகத்தை இணைப்பது.
போன்ற காரணங்களினால் குழந்தை பாக்கியம் தடை ஏற்படுகிறது.
இவ்வாறு தோஷம் உள்ள தம்பதியரின் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக ஆராய்ந்து, அவர்கள் ஜாதகத்தில் என்ன கிரகங்களுக்கு தோஷம் ஏற்பட்டு இருக்கிறதோ, அந்த கிரகத்திற்கு உண்டான ரத்தினத்தை அணிந்தும், அந்த கிரகத்திற்கு உண்டான கோவில் வழிபாடுகளும், அங்கு நமது முன்னோர்களால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ள சக்திவாந்த யந்த்ரங்களும், சக்கரமும் அளவிடமுடியாத வீரியம் வாய்ந்தவை, அவற்றை வழிபடுவதின் மூலம் புத்திர தோஷம் விலகி அவர்களுக்கு புத்திரபேரு கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. தோஷத்தின் அளவு கூடியிருக்கும் சில தம்பதியருக்கே அதற்க்குண்டான வாய்ப்பு கிட்டாமல்போகிறது.
எமது ஸ்ரீ இராகவேந்திர குருகிருபா ஜோதிடாலயம் மூலம் பல தம்பதியர்கள் தமது ஜாதகத்தை டிகிரி சுத்தமாக ஆராய்ந்து, அவர்களுக்கு இருக்கும் தோஷத்தின் அளவிற்கேற்ப கிரகங்களின் ரத்தினங்களை அணிவதன் மூலமும், அந்த கிரக தோஷத்திற்குண்டான ஆலய வழிபாடுகளின் மூலமாகவும் புத்திரபேரு கிடைத்து அளவற்ற செல்வம் போல் புத்திரசெல்வத்தை அடைந்துள்ளனர். எமது ஆராய்ச்சியில் ஜாதகர்களுக்கு பரிகாரம் கூறுவதில்லை, தோஷத்திர்கேற்ற இரத்தினகற்களும், ஆலய வழிபாடுகளுமே கூறுகின்றோம். அதனால் புத்திரபேறு என்பது எட்டாக்கனியில்ல...எல்லா தம்பதியர்க்கு கிடைக்கும் அற்புத பொக்கிஷமே.
Comments
Post a Comment