12-இல் செவ்வாய் தோஷம் – படுக்கை போர்களாமா.......? ------------------------------------------------- -------- .
12-இல் செவ்வாய் தோஷம் – படுக்கை போர்களாமா.......?
------------------------------------------------- --------
.
...ஒரு ஜாதகம் அலோசணைக்கு வந்தது....லக்னம் கன்னி,ராசி ரிஷபம் கிருத்திகை நட்சதிரம்,செவ்வாய் 12 ல் சிம்மத்தில், சனி கும்பத்தில் இருந்து12 மிடமான செவ்வாயைப் பார்கிறார்...இது செவ்வாய் தோஸ ஜாதகம் என சில ஜொதிடர்கள் சொன்னதாக வாடிக்கையாளர் என்னிடம் வந்தார்கள்....நான் சனி பார்ப்பதால் இது பரிகார செவ்வாய்...தோஸம் இல்லை என கூறியுள்ளேன் அய்யா....தாங்களின் மேலான கருத்தை தாருங்கள்!!!
ஐயா
சனி பார்த்தாலும் பரிகார செவ்வாய் ஆயினும் தோஷம் தோஷமே.
தோஷம் சதவீதம் குறையலாம் என்பது எனது கருத்து
பகவான் ராமர் ஜாதகத்தை பாருங்கள் செவ்வாய் தோஷம் வேலை செய்ததா இல்லையா என்பது தெரியும்.
செவ்வாய் நின்ற சாரம் என்ன ஜி, மகம் உத்திரம் என்றால் தோசம் தான்
அப்படியானால் செவ்வாய் தோஸ நிர்ணயத்தில் 2,4,7,8,12 ல் இருக்குமாயின் விதி விலக்குகளை எவ்வாறு நிர்ணயிக்க வேண்டும்....தயவு கூர்ந்து பதிலலிக்கவும்
திரு....... அவர்கள் 12-இல் உள்ள செவ்வாய் தோஷத்தை பற்றி கேட்டதற்குரிய எனது கருத்து.
செவ்வாய் 12-இல் இருக்கும் போது தாம்பத்திய வாழ்வில் படுக்கையில் படுக்க நினைத்தால் மனம் படபடக்கும். படுத்தால் உடலுடன் மனமும் சுட்டு விடும். தேவையில்லாத கணவன் மனைவி வாக்குவாதங்கள் , வெறுப்பு, பெண்மை விரும்பும் மேன்மை இல்லாமல் போய்விடுதல், இவை எல்லாம் நடக்கும். இதை சனியோ சூரியனோ பார்த்தால், அல்லது சேர்ந்தால் நாலு சுவற்றிக்குள் நடப்பது நாலு தெருவுக்கே தெரியவரும். இந்த இடம் அக்னி ராசியாக இருந்தால் சில நேரங்களில் விவாகரத்து கூட நடக்கலாம். ஆனால் உயிர் சேதம் இல்லை எனலாம். இதே இடத்தை குரு பார்த்துவிட்டால் மேற்சொன்னது அனைத்தும் நடக்கும் இருப்பினும், இது தான் வாழ்க்கை என்று பொழுது விடிந்தவுடன் நடந்தது அனைத்தும் மறந்து விடும்.
செவ்வாய் 7, 8 இல் இருப்பது அதிக தோஷத்தை தந்து எது வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் 2, 4, 12 இல் இருப்பது சமாளிக்க கூடியது.
செவ்வாயை குரு பார்ப்பதால் முழு தோஷ நிவர்த்தி எனலாம். முருகனை வழிபட்டால் தோஷத்தின் வீரியம் குறையும்.
ஆக, 12-இல் உள்ள செவ்வாய் தோஷம் சமாளிக்க கூடியதே
திரு..... அய்யா அவர்களுக்கு மனமாந்த நன்றிகள்....செவ்வாய் தோஸத்திற்க்கான பலன்கள் வெகு அருமை...
செவ்வாய் தோஸ விதி விலக்குகள் என சில கொடுக்கப்பட்டிருக்கிறது....
கடகம் சிம்ம லக்னத்தாருக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஸம் இல்லை ஏனெனில் கடக சிம்மத்திற்க்கு யோக காரகன் என்பதாலும்,,மேலும் ஆட்சி,உச்சம்,நீசம் பெற்றாலும்,குரு சனி ராகு பார்வை பெற்றாலும் தோஸம் இல்லை எனவும் பலவாறாக கூறப்படுகிறதே!!???
சப்தமே வா அஷ்மேபாவி நில்கிலும் சுபசட் வர்க்கம் உண்டெங்கில் தோசம் இல்லாப்போல் என்பது பிரச்சனரீதி வாக்கியம் இதன் பொருள் 7-8-ல் பாக்கிரங்கள் இருந்து தாரத்தை இழத்தல் என்னும் தீமை ஏற்ப்டாலும் அந்தகிரகங்கள் சுபக்கிரகங்களின் வருக்கத்தில் இருக்க தீமை விழைவதில்லை எனில் செவ்வாய் தோசங்களைத்தரும் செவ்வாய் சுபக்கிகசட்வருக்கங்களில் இருக்க செவ்வாய் தோசம் இல்லை எனலாம் மேலும் பாவக்கிர சட்வருக்கத்தில் இருக்கும் செவ்வாய் தோச குறிகாட்டியானச் செவ்வாய்நிச்சயமாக தீமையைத்தரும் என்பதும் உறுதியாகிறது மேலும் ஒன்பதில் ஒரு சுபக்கிரகம்இருந்து வலுவாய்நின்றால் ஏழில் எட்டில் செவ்வாய் தோசம்தீமைதராது ஆக மற்றுவகையில் செ்வாய் தோச விதிவிலக்குகள் இருந்தாலும் செவ்வாய்சட்வர்க்கத்தில் பாப வருக்கத்தில் இருக்க தீமையைத்தரும் என்பதுஉறுதியே இதற்குசான்றாக சாதகாசேநூலு பாடல் பாபா பாப விலோகிதோ வா பாபவர்க்கஸ்தி தோ வா என்னும் பாடல் பாப்வருக்கத்தில் ஏழில் இருக்கும் கிரகமும் பாப பார்வையைப் பெற்ற ஏழில் இருக்கும் பாபகிரகமும் தார இழப்பை நல்கும் ஆகவேச் செவ்வாய் தோசத்தை ஆய்வுச் செய்யும் வேழை செவ்வாய் இருக்கும் வருக்கத்தையும் செவ்வாய் யாரால் பார்க்கபடுகிறது எனாபதனையும் ஆய்வுச் செய்ய வேண்டும் என்பதே உண்மையான நிலை வணக்கம்
செவ்வாய் ஆட்சி உச்சம் நீச்சம் கும்பத்தில் தனித்த செவ்வாய் சிம்மம் மற்றும் சரராசியில் உள்ள வெவ்வாய்
களத்திர இடத்தில இருப்பது நல்லது அல்ல
செவ்வாய் ராகு இனைவு தீடிர் திருமணம்
செவ்வாய் கேது (2ல்) திருமணத்திற்கு பின் ஆயுள் குறை
செவ்வாய் சனி தாமத திருமணம் partner க்கு வியாதி
செவ்வாய் புதன் காதல் கால்யாணம் but divers ஆகும்
கடகம் சிம்மம் லக்கனத்துக்கு செவ்வாய் தோசமில்லை
2ம் இடம் மிதுனம் கன்னி
4ம் இடம் மேசம் விருச்சிகம்
7ம் இடம் கடகம் மகரம்
8ம் இடம் தனுசு மீனம்
12ம் இடம் சுக்கிரனுடைய வீடு ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை
இரவி குரு புதன் சந்திரன் இவற்றுடன் சேர்நதால்
சேர்நதாலும் தோசமில்லை
அத்திக்காய் வாழைப்பூ சமைத்து சாப்பிட செவ்வாய் தோசம் குறையும்
செவ்வாய் 2ல் வாக்கினில் உஷ்ணம்.
4ல் இதயம் மற்றும் மார்பினில் உஷ்ணம்.
7,8ல் கரு உற்பத்தி ஆகும் இடத்திலும் மர்ம்ஸ்தானத்திலும் உஷ்ணம்.
12ல் ... சார் சொன்னது போல் அயன சயன சூடு.
ஒரு ஜாதகருக்கு இந்த விஷயங்களில் அதிக உஷ்ணத்தை கொடுத்து அந்த பகுதியின் இயக்கத்தை கெடுத்து விடும். இரண்டில் அதிக கோபத்தையும். நான்கில் இதயம் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இரத்த ஓட்டத்தில் பிரச்சனையையும். ஏழு எட்டில் தாம்பத்ய உறவில் பிரச்சனையையும் பனிரெண்டில் படுக்கை அறையில் அன்யோன்யத்தில் குறையையும் தரும்.
பரிகாரம் 2க்கு அதிக கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சாத்வீகமான பாடல்கள் படிப்பது தியானம் செய்வது நல்லது. நான்கிற்கு அதிக காற்றோற்றம் இருக்கும் இடத்தில் இருப்பது அதிகாலையில் ஜாக்கிங் செய்வது நல்லது. எழு எட்டிற்கு உணவில் நெய் தயிர் சேர்த்துக்கொள்வது அதிகாலையில் இளநீர் குடிப்பது. சினன வெங்காயம் முருக்கக்காய் முருங்கை கீரை பச்சை பருப்பு சேர்த்து புளி குறைவாக போட்ட சாம்பார் வாரம் இருமுறை சாப்பிடுவது, பெண்களானால் மாதுளை சாப்பிடுவது, காரட் பீட்ருட் அதிகம் சாப்பிடுவது, வாரம் ஒரு முறை செவ்வாழை பழம் சாப்பிடுவது, பனிரெண்டடிற்கு படுப்பதற்கு முன் முகத்தை நல்ல குளிர்ந்த நீரில் முகம் கழிவிக்கொள்வது., காட்டன் படுக்கை உபயோகிப்பது.,தூங்குவதற்கு முன் பக்தி பாடல்கள் கேட்பது.,மென்மையான சங்கீதம் கேட்பது, படுக்கை அறையில் மஞ்சள் மற்றும் நீல படுக்கை விரிப்புகள் திரை சீலைகள் உபயோகிப்பது இவையெல்லாம் செய்தால் அங்காரகனால் ஏற்படும் அதிக உஷ்ணம் குறைந்து வாழ்க்கை இனிக்கும் சந்தோஷமாகும்.
திரு.... தோஷம் சில இடங்களில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளலாமா?
லக்னத்தில் ஒரு உஷ்ண கிரஹம் இருந்து அதற்கு ஏழில் ஒரு உஷ்ண கிரஹம் இருந்தால் தார இழப்பை சொல்லும். தார இழப்பு என்பது உயிரிழப்பு கிடையாது. தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியாத அதில் பூரணத்துவம் பெறமுடியாத தார இழப்பை அதாவது பிரிவை சொல்லும்.
ஐயா ராமர் கடக லக்னம் செவ் உச்சம். குரு பார்வை வேறு. தோசம் இருந்த்தா இல்லையா. பரிகார செவ்வாயாக எடுத்துக் கொள்ளலாமே தவிர தோசம் இல்லை என எடுத்துக் கொள்ளக்கூடாது
இது எனது கருத்து. சரியா
அவருக்கும் அவர் மனைவிக்கும் பிரிவை தந்ததே. ஏழில் உச்சம் பெற்ற யோகனும் உச்சம் பெற்ற ஏழாம் அதிபனும் மாய மான் வேண்டும் என்ற பிடிவாதத்தை தரவில்லையா. மைத்துனன் மீது சந்தேக வார்த்தை வீசவில்லையா.
பரிகார செவ்வாய் என்பது முதலில் அதன் வீரியத்தை கொடூத்து பின்பு குறையும். பிரிவை தரும். அது நிரந்தரமாக இருக்காது. ஒன்பதாம் அதிபன் தோஷ செவ்வாயை பார்த்தால் தம்பதிக்குள் அன்யோன்யம் இருக்கும்.
Comments
Post a Comment