லக்ன பாவிகள் யார் ?
லக்ன பாவிகள் யார் ?
ஒருவன் உலகில் ஜெனித்த உடன் அவன் லக்னம் நிர்ணயிக்கப்படுகிறது. லக்னத்தின் மையப்புள்ளியை பொறுத்தே மற்ற பாவங்கள் அமைகிறது. எனவே லக்ன அதிபதியின் காரகத்துவம் பொறுத்தே மற்ற கிரகங்களின் பலன்கள்.
இதை சுலபமாக அறிவதற்கு, நம் முன்னோர்கள் வகுத்த முறையே அருள் மற்றும் பொருள் அணிகள். முனிவர்கள் கூறிய அந்த அருள் மற்றும் பொருள் அணியானது அவர்கள் காரகத்துவம் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
அவர்கள் பிரித்த அருள் அணி என்பது
1. சூரியன்
2. சந்திரன்
3. குரு
4. செவ்வாய்
மேலே கூறிய அருள் அணி காரகத்துவங்கள் ஒன்றை ஒன்று பாதிப்பதில்லை.
பொருள் அணி என்பது
1. புதன்
2. சனி
3. சுக்கிரன்
மேலே கூறிய பொருள் அணி காரகத்துவங்கள் ஒன்றை ஒன்று பாதிப்பதில்லை.
ராகு மற்றும் கேதுகள் மற்ற கிரகத்தின் காரகத்துவத்தை கெடுப்பதால், அவர்கள் இருக்கும் வீட்டை பொறுத்தே பலன்கள் மாறுபடும்.
இவ்வாறு அணிகள் பிரிக்க காரணம், அந்த கிரகங்களின் காரகதுவங்கள்.
ஒரு அருள் அணி கிரகம், லக்ன அதிபதியாக வரும் போது, இன்னொரு அருள் அணியின் அசுப ஆதிபத்திய அதிபதியாக வந்தாலும், அவ்வளவு கெடுதல் செய்வதில்லை காரணம் அசுப ஆதிபத்தியம் பெற்றவர்கள் கிரகத்தின் காரகத்துவம், லக்ன அதிபதியின் காரகத்தை கெடுப்பதில்லை என்பதே.
இங்கே அசுப ஆதிபத்தியம் பெற்ற அருள் அணி கிரகம், தங்கள் காரகத்துவம் கெட்டால் ஒழிய கெடுதல் செய்ய மாட்டார்கள்.
உதாரணம்: (பொருள் அணி)
கடக லக்னம், லக்ன அதிபதி சந்திரன் அருள் அணியை சேர்ந்தவர். இங்கே ஆறாம் அதிபதியாக வரும் குரு அருள் அணியை சேர்ந்தவர். இவர் இயற்கை சுபர் என்பதாலும் மேலும் லக்ன அதிபதிக்கு நண்பர் என்பதாலும், தன் சுப காரகத்துவையே வெளிபடுத்துவார். ஏனெனில், லக்னம் பொறுத்தே மற்ற பாவங்கள் இயங்குகின்றன என்பதை மனதில் கொள்க.
இங்கே குருவின் காரகத்துவம் காரகத்துவம், சனி, ராகு சுக்கிரன், புதன் தொடர்பு (சேர்க்கை, பார்வை, சாரம்) குரு காரகம் கெட்டால் மட்டுமே, ஆறாம் வீட்டின் பலன் செய்வார். அதாவது நல்லவன் கெட்டவர்கள் சகவாசம் பெற்று கெட்டவன் ஆகினால் மட்டுமே, தீமை செய்யும். அருள் அணியில் செவ்வாய் மட்டுமே இயற்கை அசுபர் என்பதால், அவரின் காரகத்துவம் பொருள் அணிகிரகத்துடன் சேரும் போது சுப தன்மை பெற்று நல்லதை செய்யும்.
உதாரணம்: (பொருள் அணி)
ஒரு பொருள் அணி கிரகம், லக்ன அதிபதியாக வரும் போது, இன்னொரு பொருள் அணியின் அசுப ஆதிபத்திய அதிபதியாக வந்தாலும், அவ்வளவு கெடுதல் செய்வதில்லை காரணம் அசுப ஆதிபத்தியம் பெற்றவர்கள் கிரகத்தின் காரகத்துவம், லக்ன அதிபதியின் காரகத்தை கெடுப்பதில்லை என்பதே.
இங்கே அசுப ஆதிபத்தியம் பெற்ற பொருள் அணிகிரகம், தங்கள் காரகத்துவம் கெட்டு, லக்னத்திற்கு அசுப காரக தன்மை பெற்ற கிரகமாக மாறும் போது மட்டுமே கெடுதல் செய்யவர்கள்.
குறிப்பு: பொருள் அணியில் உள்ள கிரகமான சனி மட்டுமே இயற்கை அசுபர் என்பதால், அவரின் அசுப காரகத்துவம் சுப கிரக தொடர்பு ஏற்பட்டு, சுப தன்மை அடைய வேண்டும். அப்பொழுதே அவர் தன் சுப ஆதிபத்திய கடமையை நல்ல முறையில் செய்வார்.
முடிவு
-----------
லக்ன அதிபதிகளை பொறுத்தே லக்ன பாவிகள் செயல்படுவார்கள். இதில் சனி மற்றும் செவ்வாய் தன் அசுப தன்மை கட்டப்பட்டு, சுப கிரக தொடர்பு பெற்று, சுபதன்மை பெறும் போது மட்டுமே லக்னத்துக்கு நன்மை செய்யும்.
Comments
Post a Comment