ஜோதிட சிறப்பு விதிகள் =
ஜோதிட சிறப்பு விதிகள் =
01. ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2ல் இருந்து குரு 11ல் இருந்தால் அல்லது குரு 2ல் இருந்து சுக்கிரன் 11ல் இருந்தால் ஜாதகத்தில் எத்தனை அவயோகம் இருந்தாலும் ஜாதகன் யோகக்காரன் ஆகிவிடுவான்.
02. சந்திரனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ 10ல் ஒரு சுபகிரகம் இருந்தால் அது அமலா யோகம் எனப்படும். இந்த யோகமானது ஒருவரை வான்புகழும் அளவிற்கு உயர்த்தும் சக்தி வாய்ந்தது.
03. குரு 2ல் அல்லது 10ல் இருந்து சிம்ம நவாம்சத்தில் இருந்தால் ஜாதகன் அரச வாழ்க்கை வாழ்வான்.
04. நீச்ச பங்கம் பெற்ற கிரகத்தின் தசை நடந்தால் அச்ஜாதகன் புகழ் எட்டுத்திக்கும் பரவும். ஆனால் அக்கிரகம் குறிக்கும் காரகத்துவத்தை ஜாதகன் இழந்துவிடுவான்.
05. 9ம் அதிபதியின் நவாம்ச நிலையானது ராசியில் உள்ள லக்கினத்திற்கு திரிகோணத்தில் இருந்தால் உயர் அதிகாரிகளின் நண்பன் ஆவான்.
06. 5ம் அதிபதியின் நவாமச நிலையானது ராசியில் உள்ள லக்கினத்திற்கு திரிகோணத்தில் இருந்தால் உயர் அதிகாரிகளுக்கு வேலை செய்வான்.
07. சுக்கிரன் துலாத்திலிருந்து தசை நடத்தினால் சுக்கிர தசை சனி புத்தியும், சுக்கிர தசை புதன் புத்தியும் மிகப் பெரிய யோகத்தை செய்யும்.
08. 7ம் அதிபதி சூரியனுடன் இருந்தால் அவனுக்கு 2 தாரம் வாய்க்கும். இவ்விதி களத்திர தோஷமாகவும் செயல்படும்.
09. 5ம் அதிபதி பாதிப்ப்டைந்தால் முக்கியமாக 8ம் இடத்தில் இருந்தால் ராமேஸ்வரத்தில் புண்ணிய குளியல் செய்தால் புத்திர ஜோஷம் மட்டுமல்ல ஜாதகத்தில் உள்ள ஏனைய எல்லா தோஷமும் நிவர்த்தி ஆகிவிடும்.
10. ஒரு லக்கினத்திற்கு எந்த கிரகமானாலும் அம்சத்தில் அந்த லக்கினத்தின் யோகக்காரகன் வீட்டில் இருந்தால் அக்கிரகம் யோகம் செய்யும். உதாரணம் = துலா லக்கினத்திற்கு குரு மகரம் அல்லது கும்ப அம்சத்தில் இருந்தால் குரு துலா லக்கினத்திற்கு யோகம் செய்யும் அந்தஸ்து பெறுவார்.
Comments
Post a Comment