சுப தாரை நட்சத்திர அட்டவனை:-
சித்திரை நட்சத்திரம் :(1,2,4,6,8,9)
________________
ஜென்ம தாரை: 1
சித்திரை -1
அவிட்டம்-10
மிருகசீரிஷம் -19
_________________
சம்பத்து தாரை :2
ஸ்வாதி-2
சதயம்-11
திருவாதிரை -20
_______________
சேமத் தாரை:4
அனுஷம்-4
உத்திரட்டாதி-13.
பூசம்-22
_______________
சாதகத் தாரை:6
மூலம்-6
அஸ்வினி-15
மகம்-24
_______________
மித்ர தாரை :8
உத்திராடம்-8
கிருத்திகை-17
உத்திரம் -26
________________
பரம மித்ர தாரை:9.
திருவோணம்-9
ரோகிணி-18.
ஹஸ்தம் -27
_______________
விபத்து தாரை :3,12,21
அசம்பாவிதம் உண்டாகும் ,
விசாகம்-3
பூரட்டாதி-12
புனர்பூசம் -21
______________________
பிரத்யாக தாரை :5,14,23
தடங்கள், சிக்கல் தரும் ,
கேட்டை-5
ரேவதி -14
ஆயில்யம் -23
_______________________
வதைத் தாரை :7,16,25
துன்பம் தரும் ,
பூராடம்-7
பரணி-16
பூரம் -25
______________________________
#ஜோதிட_பாலபாடம்_வகுப்பு_01
#தாராபலன் எனும் #நட்சத்திரபலன்
விளக்கம்;
1)ஜென்மதாரை கூட்டத்தில், 19_வது நட்சத்திரம் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
2)சம்பத்துதாரை கூட்டத்தில் 20_வது நட்சத்திரம் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
3)விபத்துத்தாரை கூட்டத்தில் 21_வது நட்சத்திரம் (வாழ்வில் கடுமையான சிக்கல் நடைபெறும் போது மட்டும்) அவசியம் பயன்படுத்த வேண்டும்.
4)சேமதாரை கூட்டத்தில் 13_வது நட்சத்திரம் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
5) பிரத்யாக தாரை எந்த நட்சத்திரமும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த கூடாது.
6)சாதகதாரை கூட்டத்தில் அனைத்து நட்சத்திரமும் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
7)வதைதாரை கூட்டத்தில் அனைத்து நட்சத்திரமும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த கூடாது.
8)மைத்ரதாரை கூட்டத்தில் 26_வது நட்சத்திரம் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
9)பரமமைத்ரதாரை கூட்டத்தில் 27_வது நட்சத்திரம் அவசியம் பயன்படுத்த வேண்டும்.
________________________________
பஞ்ச பட்சி:-
(சித்திரை தேய்பிறை)
சாதக தாரை பயன்பாடு
====================
இராமனின் நட்சத்திரம் புனர்பூசம் ஆகும். இராவணன் மீது போர் தொடுக்க இராமர் உத்திரம் நட்சத்திர நாளை தேர்ந்தெடுத்தார். உத்திரம் என்பது புனர்பூசத்தின் சாதக தாரை ஆகும்.
சாதக தாரை என்பது உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் 6, 15, 24 வது நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரம் வரும் எதாவது ஒரு நாளினை கீழ்க்கண்ட விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்:
1. இந்த நாளில் தீராத கடனில் சிறுபகுதி கடன் தொகை கொடுக்க, கடன் பிரச்சனை தீரும்.
2. தீராத நோய்க்கு இந்நாளில் சிகிச்சை தொடங்கலாம்
3. தீராத பிரச்சனைக்கு வழக்கு தொடங்க இந்நாளை பயன்படுத்தலாம்
4. அரசாங்க தேர்வு எழுத விண்ணப்பம் பூர்த்தி செய்ய இந்நாளை பயன்படுத்தலாம்.
உங்கள் நட்சத்திரத்தின் சம்பத்து தாரையில் ஒருவர் குடும்பத்தில் இருந்துவிட்டால், உங்கள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.
_________________
உங்கள் நட்சத்திரத்தின் சம்பத்து தாரையில் ஒருவர் குடும்பத்தில் இருந்துவிட்டால், உங்கள் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும்.
சம்பத்து தாரை என்பது உங்கள் நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 2,11,20 நட்சத்திரங்களாகும்.
____________________
உங்கள் பரம மித்ர தாரை நபரை நண்பராக்கி கொள்ளுங்கள். அவர் மூலம் புகழின் உச்சியை அடையும் சாத்தியம் உங்களுக்கு கிடைக்கும். அவருக்கும் பல நற்பலன்கள் உண்டு.
பரம மித்ர தாரை என்பது உங்கள் நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 9, 18 & 27 நட்சத்திரமாகும்.
_____________________
உங்கள் ராசிக்கு உப ஜெய ஸ்தானமான 3,11 ராசிகளில் இருக்கும் சாதக தாரைகள், சிக்கலான நிகழ்வுகளுக்கு தீர்வு காண உதவும்.
உதாரணமாக, ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் சுவாதி எனில் அது துலா ராசியில் வரும். துலாமின் 3, 11 ராசிகள் தனுசு மற்றும் சிம்மம்.
தனுசு ராசியில் இருக்கும் பூராடமும், சிம்மத்திலுள்ள பூரமும் சாதக தாரைகள். ஆக இந்த தாரை வடிவங்கள், தெய்வங்கள் அனுகூலம் தரும்.
_________________________
இராமேஸ்வர தாரை ரகசியம்
========================
இராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் ஆகும், எனவே அவருக்கு வழிகாட்டும் அவரது பரம மித்ர தாரை திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகும்.
இராவணனை வதம் செய்த பிரம்மஹத்தி தோசம் தீர, தனது பரம மித்ர தாரை சதயம் வடிவான மணல் லிங்கத்தை செய்து பூஜை செய்து சிவனருள் பெற்று, தோசம் தீர வழிகாட்டுதலும் பெற்றார்.
சதயம் என்பது இராவணின் மூல நட்சத்திரத்திற்கு சாதக தாரை என்பது குறிப்பிடதக்கது.
எனவே தோசம் கொண்ட புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நண்பர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர நாள் அன்று சுயம்பு சிவலிங்க வழிபாடு செய்தல் நலம் தரும்.
திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் ராமேஸ்வரம் சென்று லிங்க வழிபாடு செய்வது உடல்நலம் காக்கும்.
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திர நண்பர்கள் ராமேஸ்வரம் சென்று லிங்க வழிபாடு செய்வது சர்வ சம்பத்தும் கிட்டும்.
திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் ராமேஸ்வரம் சென்று லிங்க வழிபாடு செய்வது உடல்நலம் காக்கும்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நண்பர்கள் ராமேஸ்வரம் சென்று லிங்க வழிபாடு செய்வது காரிய சித்தி தரும்.
அஸ்வினி, மூலம், மகம் நட்சத்திர நண்பர்கள் ராமேஸ்வரம் சென்று லிங்க வழிபாடு செய்வது சாதக சூழல் தரும்.
_________________________
பயணம் செய்ய கூடாத தருணங்கள்
====================
1. வாகனம் ஒட்டுபவரின் ஜென்ம நட்சத்திர பாதம் மீது சந்திரன் செல்லும் காலம்.
2. வாகனம் ஒட்டுபவரின் ஜென்ம லக்ன பாதம் மீது சந்திரன் செல்லும் காலம்.
3. வாகனம் ஒட்டுபவரின் சந்திராஷ்டம காலம்
4. வாகனம் ஒட்டுபவரின் லக்னாஷ்டம காலம்
_____________________
பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வர கீழ்கண்ட அசுப தாரைகளில் ஆணின் நட்சத்திரம் அமைந்தால் கிடைக்கும் பலன்களை காணலாம்:
விபத்து - தாம்பத்தியம் கெடும். மகப்பேறு சிக்கல்.
பிரத்யக்கு - சச்சரவுகள் அதிகம் அல்லது அவமானம்
வதை - கைகலப்பு அல்லது அவமானம் அல்லது மகப்பேறு சிக்கல்.
குறிப்பு - ஆணின் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி, மேற்கண்ட பதிவை குழப்பிக்கொள்ள வேண்டாம்.
________________________
பரசுராமரின் பரசு ரகசியம்
=======================
ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி நான்காவதாக அல்லது பதிமூன்றாவது அல்லது இருப்பத்தி இரண்டாக வரும் நட்சத்திரத்திற்குரிய வடிவம் அல்லது அந்த நட்சத்திரத்தில் உதித்த கடவுள் அல்லது மஹான் உங்களுக்கு நலம் தரும் சூழ்நிலை உருவாக்கி தருவார்கள் என அறியுங்கள்.
பரசுராமரின் ஜென்ம நட்சத்திரம் ரோகிணி. இவரது நட்சத்திரத்திற்கு நான்காவது நட்சத்திரம் புனர்பூசம், பதிமூன்றாவது நட்சத்திரம் விசாகம், இருப்பத்தி இரண்டாவது நட்சத்திரம் பூரட்டாதி. இதில் புனர்பூசத்தின் வடிவம் வில் (சிவ தனுசு), விசாகத்தின் வடிவம் கைவிசிறி போன்ற வடிவுள்ள கோடாரி எனும் பரசு. இந்த சிவதனுசே ஜனகருக்கு பரிசாக அளிக்கப்பட்டு ராமரால் முறிக்கப்பட்டது.
தனது தாயின் மரணத்திற்கு காரணமான சத்ரிய குலத்தை சார்ந்த அரசர்களை அடியோடு அழிக்க சபதம் கொண்டு, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். பரசுராமர் எதிர்க்கபோவது சத்ரிய குல அரசர்கள் என்பதால், இவரது ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ப சிவபெருமான் வில் மற்றும் பரசு இவற்றை வரமாக கொடுத்தருளினார். இதனை கொண்டு தனது சபதத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
சேம நட்சத்திர வடிவான பரசும், வில்லும் எப்பொழுதும் தன்னிடமே வைத்திருப்பதால் இவரது இயற்பெயரான ராமர் என்பது பரசுராமர் என்றானது. எனவே இந்த சேம நட்சத்திர வடிவத்தின் பெயரை தன் இயற்பெயருடன் சேர்த்துக்கொள்வதும் நமக்கு சாதகமான சூழ்நிலை அமைத்து தரும்.
__________________________
கரணத்தை அறிந்து
★★★★★★★★★★★
காரியம் சாதியுங்கள்
★★★★★★★★★★★
பவம்
----------
மருந்து சாப்பிடுதல்,கட்டடம் கட்டுதல்.
பாலவம்
---------------
மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யவும்,புண்ணியத்தைப் பெற தானங்கள் அளிப்பதற்கு.
கௌலவம்
-------------------
ஒருவரின் அன்பையும் நட்பையும் பெறுவதற்கு உகந்த காரணம்
தைதுலை
-----------------
அரசர்களை சந்திப்பதற்கும்,
இசை , பாட்டு இவைகளை கற்று கொள்வதற்கும்.
கரசை
------------
விவசாய பணிகள் வெற்றியில் முடியும்.
வணிசை
--------------
எல்லாவித ஒப்பந்தங்களையும் முடித்துக் கொள்ளலாம்.
பத்திரை
----------------
ஒப்பந்தங்கள் செய்ய உகந்தவை அல்ல ஆவிகளை விரட்டவும்.வசிய மந்திரங்களை கற்றுக் கொள்ளவும்.
சகுனி
-------------
தெய்வ அருள் வாக்குகளை பெறவும், சூதாட்டத்திற்கு, வானியல் பற்றி தெரிந்து கொள்ளவும் உகந்த காரணம்.
சதுஷ்பாதம்
---------------------
அசையாத சொத்துக்கள் வாங்கவும். கால்நடைகள் ஆகியவற்றை வாங்கவும் விற்கவும் உகந்த காரணம்.
நாகவம்
---------------
பலிச் சடங்குகள் செய்யவும்
சர்ப்ப சாந்தி.
கிம்துஸ்கணம்
------------------------
விவசாயம், பூமி சம்பந்தப்பட்ட காரியங்கள் செய்ய சிறப்பு .
அன்றைய நாள் நட்சத்திரம் திதி யோகம் இவ்வற்றுடன் முக்கியமாய்
கரணத்தை அறியுங்கள்
காரியம் இயற்றுங்கள் .
வெற்றி பெறுங்கள்.
_______________________
நட்சத்திர பஞ்சபூத ரகசியம்
======================
இந்த பதிவை முழுமையாக புரிந்து கொள்ள பிராப்தம் வேண்டும். அதனால் பொறுமையாக படித்து புரிந்து கொள்வதும், இந்த பதிவை பாதியிலேயே படித்து கடந்து செல்வதும் உங்கள் பிராப்தமே காரணம்
நெருப்பு எனும் பஞ்சபூத வஸ்துவை காற்று அல்லது வாயு வளர்க்கும். ஆகவே நெருப்பும் வாயுவும் நண்பர்கள்.
நெருப்பு ராசிகள்
==============
மேசம் - அஸ்வினி, பரணி, கார்த்திகை
சிம்மம் - மகம், பூரம், உத்திரம்
தனுசு - மூலம், பூராடம், உத்திராடம்
காற்று ராசிகள்
=============
மிதுனம் - மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்
துலாம் - சித்திரை, சுவாதி, விசாகம்
கும்பம் - அவிட்டம், சதயம், பூரட்டாதி
காற்று ராசிகளில் இருக்கும் நட்சத்திரத்திற்கு நெருப்பு ராசிகளில் இருக்கும் சேமதாரை (உங்கள் நட்சத்திரத்திற்கு 4, 22, 13 வதாக வரும் நட்சத்திரங்கள்) அல்லது சாதகதாரை (உங்கள் நட்சத்திரத்திற்கு 6, 15, 24 வதாக வரும் நட்சத்திரங்கள்) உடனிருந்து வழிநடத்தும். நீங்க புண்ணிய கர்மா தாங்கிய ஆத்மா எனில் இந்த சேம அல்லது சாதக தாரைகள் உங்களை சுற்றி நிச்சயம் இருக்கும்.
நெருப்பு ராசிகளில் இருக்கும் நட்சத்திரத்திற்கு காற்று ராசிகளில் இருக்கும் சேமதாரை (உங்கள் நட்சத்திரத்திற்கு 4, 22, 13 வதாக வரும் நட்சத்திரங்கள்) அல்லது சாதகதாரை (உங்கள் நட்சத்திரத்திற்கு 6, 15, 24 வதாக வரும் நட்சத்திரங்கள்) உடனிருந்து ஊக்குவிக்கும். நீங்க புண்ணிய கர்மா தாங்கிய ஆத்மா எனில் இந்த சேம அல்லது சாதக தாரைகள் உங்களை சுற்றி நிச்சயம் இருக்கும்.
உதாரணமாக, காற்று ராசியான கும்பத்தில் இருக்கும் அவிட்ட நட்சத்திரத்திற்கு நெருப்பு ராசியிலுள்ள சுப தாரைகள் எனப்படும் கீழ்க்கண்ட நட்சத்திரங்கள் உடனிருந்தாலே போதும், வளர்ச்சி சுபமானதாக இருக்கும்.
அஸ்வினி,
மகம்,
மூலம்,
கார்த்திகை,
உத்திரம்,
உத்திராடம்,
உங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் அதிகமாக இருப்பின் மேற்கண்ட சுபதாரைகள் உங்கள் தாயாகவோ, தந்தையாகவோ, வாழ்க்கைதுணையாகவோ, நலம் விரும்பியாகவோ, நண்பராகவோ அல்லது குழந்தைகளாக இருந்து உங்களின் வளர்ச்சிக்கு வித்திடும். காரணம்...
"இந்த சுபதாரை நபர்கள் உங்களின் உதவியால் முற்பிறவியில் நன்கு வாழ்ந்த நபர்களாவர். அவர்கள் இப்பிறவியில் உங்களுக்கு உதவ பிறவி எடுத்திருக்கிறார்கள் என்பதை உணர்க"
இந்த பதிவை பரிசோதனை செய்து பாருங்கள்,
பஞ்சபூதம் கூறும் தாரை சூட்சுமம்
============================
பஞ்சபூதங்களில் நிலமும் நீரும் நண்பர்கள் என்கிறது ஜோதிடம்.
நிலத்தை நீர் வளர்க்கும், நீர் நிலத்தில் பாதுகாக்கப்படும்.
நிலம் - மகரம், ரிஷபம், கன்னி
நீர் - விருச்சகம், கடகம், மீனம்.
மேற்கண்ட நில ராசிகளில் இருக்கும் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தால், குறிப்பிடப்பட்ட நீர்ராசிகளில் இருக்கும்
சேம தாரை (உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 4, 13, 22 நட்சத்திரங்கள்)
சாதக தாரை (உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 6, 15, 24 நட்சத்திரங்கள்)
மித்ர தாரை (உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 8, 17, 26 நட்சத்திரங்கள்)
ஆகியவற்றால் நன்மை உண்டு. அங்கே இருக்கும் சுபதாரைகள் உங்களை சுற்றி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால், நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் அல்லது வழிபாடு செய்து மிகுந்த நலம் பெறலாம்.
உதாரணமாக, நிலராசியான மகரம்- திருவோணத்தில் பிறந்த நபருக்கு, நீர் ராசிகளில் இருக்கும் சேமதாரைகள் (பூரட்டாதி, புனர்பூசம், விசாகம்) மற்றும் சாதக தாரைகள் (ரேவதி, ஆயில்யம், கேட்டை) உங்களை சுற்றி தெய்வமாகவோ அல்லது நபராகவோ அல்லது வடிவமாகவோ நிச்சயம் இருக்கும்.
இந்த பதிவை சரியாக படித்து புரிந்து கொள்ளுங்கள்.
நெருப்பு ராசிகள் பற்றிய பதிவு விரைவில் வரும்.
திரௌபதியும் கிருஷ்ணரும் தாரை ரகசியம்
=================================
காற்று ராசியில் இருக்கும் ஸ்வாதி நட்சத்திரம், நில ராசியான ரிஷபத்தில் இருக்கும் ரோகினி நட்சத்திரம். காற்றின் வேகத்தை நிலம் தடுக்கும். நிலத்தின் பலத்தை காற்று தகர்க்கும்.
கிருஷ்ணை எனும் பாஞ்சாலியின் நட்சத்திரம் ஸ்வாதி (பிறந்தவர்). கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகினி. மேலும் கிருஷ்ணரின் ரோஹிணிக்கு ஸ்வாதி விபத்து தாரை. ஆகவே கிருஷ்ணர் விபத்துதரையான பாஞ்சாலிக்கு மறைமுகமாவே உதவி செய்தார். பாஞ்சாலியை துகில் உரிக்கும் சமயத்தில் கூட கிருஷ்ணர் நேரடியாக உதவி செய்யவில்லை, மறைந்திருந்தே உதவி செய்தார்.
ரோஹிணிக்கு சம்பத்து தாரை மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம். இதே நட்சத்திரங்கள் ஸ்வாதிக்கு பரம மித்ர தாரையாக வருவதை காணலாம்.
இதில் சித்திரை என்பது ஆடையை (வஸ்திரம்) குறிக்கும். ஆகவே தனது விபத்து தாரையான ஸ்வாதி நட்சத்திர பாஞ்சாலிக்கு தனது சமபத்து தாரை வடிவான வஸ்திரத்தை மறைமுகமாக கொடுத்து உதவி செய்தார் கிருஷ்ணர். மேலும் அவிட்டம் என்பதன் வடிவம் பாத்திரம் எனபதால் பாண்டவர்கள் வனவாசத்தின் போது அட்சய பாத்திரம் பெற சொல்லி உதவி செய்தார்.
ஆகவே சித்திரையை சுபதாரையாக கொண்ட கீழ்கண்ட நட்சத்திரங்கள் எளியவருக்கு வஸ்திர தானம் செய்து புண்ணியம் பெறுங்கள்:
ரோகினி,
அஸ்தம்
திருவோணம்
மிருகசீரிடம்
சித்திரை
அவிட்டம்
திருவாதிரை
ஸ்வாதி
சதயம்
பரணி
பூரம்
பூராடம்
ரேவதி
கேட்டை
ஆயில்யம்
Comments
Post a Comment