திருமணத் தடையை ஏற்படுத்தும் தோஷங்களும் அதன் பரிகாரங்களும் :-
அதேபோல, ஒருவருக்கு அமையக்கூடிய துணை, திருமணம் அவரின் ஜாதக அமைப்பை பொருத்தே அமைகிறது. ஒருவரின் ஜாதக கிரக நிலைகளை பொருத்து தான் அந்த நபரின் திருமணம் தாமதமாக நடைபெறுமா அல்லது விரைவில் நடைபெறுமா என்பதை கணிக்க முடியும். அந்த வகையில், திருமண தாமதத்தை ஏற்படுத்தும் கிரக தோஷங்களும், அதன் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.
செவ்வாய் தோஷம் :
ஜனன கால ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் அமைந்து இருப்பதை தான் செவ்வாய் தோஷம் என கூறுகின்றனர். இருப்பினும் செவ்வாய் தோஷம் பல்வேறு விதிவிலக்குகள் உள்ளன. செவ்வாய் தோஷம் காரணமாக திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஆகலாம்.
ராகு - கேது தோஷம் :
ஜாதகத்தில் லக்னம் 2, 7, 8 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி, ராகு - கேது இருவரும் அவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டு கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். எனவே தான் திருமணத்தடை ஏற்படுகிறது.
மாங்கல்ய தோஷம் :
இந்த தோஷம் பெரும்பாலும் பெண் ஜாதகத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஜாதகத்தில் லக்கினத்துக்கு 8 ஆம் இடத்தில் அசுப கிரகங்களான சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் அமைந்து இருப்பது மாங்கல்ய தோஷமாகும்.
சூரிய தோஷம் :
ஒருவரின் ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருப்பின் சூரிய தோஷமாகும். சூரிய தோஷ அமைப்பு கொண்ட ஜாதகங்களை, அதே போன்ற அமைப்பு கொண்ட ஜாதகருடன் சேர்ப்பதால் அந்த தோஷம் நிவர்த்தியாகிறது.
பரிகாரம் :
ஜாதகத்தில் உள்ள குறையை சரிசெய்ய பிரபஞ்சம் வழங்கிய கொடை தான் பரிகாரம். திருமண தடை நீங்க எளிய பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்:
சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் , ஸ்ரீ காளகஸ்தி ஆலயம் சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.
சூரியன், சனி சேர்க்கை இருந்தால், சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருமணத் தடை அகலும்.
சுக்ரன்,கேது சேர்க்கை இருப்பவர்கள், வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ர நாமத்தை குங்கும அர்ச்சனையுடன் சொல்லி வந்தால், மனதிற்கினிய வரன் அமையும்.
செவ்வாய், கேதுவால் திருமணத் தடை இருப்பவர்கள், அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சுக்ர ஒரையில் வழிபட திருமணம் கைகூடும்.
சனி, ராகு-கேது சம்பந்தத்தால் திருமணம் தடைபட்டால், ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும். அதே போல, செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பவர்கள், லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசிக்கு 2-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடம், 8-ம் இடம், 12-ம் இடம் (2, 4, 7, 8, 12) இந்த இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்.
ஆனால், மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து, குரு, சனி, சூரியன் ஆகியோரின் சேர்க்கை பெற்றிருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் தோஷம் இல்லை.
அதுபோல செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில் இருந்தாலும் தோஷம் இல்லை. கடகம், சிம்மம் லக்னத்துக்குச் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் இடம் 2-ம் வீடாக இருந்து, அந்த வீடு மிதுனம் அல்லது கன்னியாக இருந்தாலும் தோஷம் இல்லை.
செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்திருந்தாலும் தோஷம் இல்லை. செவ்வாய் இருக்கும் இடத்தின் ராசி அதிபதி கேந்திர திரிகோணங்களில் இருந்தாலும் தோஷம் இல்லை. இப்படி செவ்வாய் தோஷத்துக்கு பல விதி விலக்குகள் உள்ளன.
ஜாதக சந்திரிகை :-
கொடும்பாவி செவ்வாயின் கொடிய பலன் ஏது சொல்வேன்
கேடு செய்யும் செவ்வாயின் கெடு பலனை கேளப்பா,
இரண்டிலே செவ்வாயப்பா, இல்வாழ்க்கை கசந்துவிடும்,
இருக்கும் செல்வம் அழிந்துவிடும்,
இருவருக்கும் பகையாகி எலி பூனை போல் ஆகும்.
நான்கிலே செவ்வாயும், நலமில்லை பாரப்பா,
நலமான தாய்க்கு தோஷம், நாற்கால் ஜீவன் நாசம்
மண், மனை பாழதாகும், பொன், பொருள் விரயமாகும்,
ஏழு எட்டில் செவ்வாயப்பா, எடுத்தெல்லாம் பிரச்சனைதான்,
எட்டெடுத்து வைத்த வீட்டில் எல்லோரும் எதிரிகளே
பன்னிரண்டில் செவ்வாயப்பா, பலதோஷம் செய்யும்பார்,
பாம்பின் வாய் தேரை போல், பரிதவிப்பார் ஜாதகரே.
தொட்டதெல்லாம் நட்டமாகி, தொலைதூரம் சென்றிடுவார்
கெட்ட பெயரோ வந்துவிடும் கெடுதிக்கோ பஞ்சமில்லை -
களத்திர தோஷமும் அதற்கு உரிய பரிகாரங்களும்...
மாங்கல்ய தோஷம் போலவே, களத்திர தோஷமும் திருமணத்தின் போது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். களத்திர தோஷம் ஏன் ஏற்படுகிறது? என்பதைப் பார்ப்போம்.
* லக்னம், சந்திரன், சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 1, 2, 4, 7 , 8, 12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அல்லது சேர்ந்திருந்தால் இந்த தோஷம் ஏற்படும்.
* 4 - ம் இடத்தில் சனி, செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலும், 2, 7 - ம் இடத்து அதிபதிகளும், சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6, 8, 12 -ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
* சுக்கிரனுடன் சூரியன், சனி அல்லது ராகு, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7 -ம் இடம் பாவ கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் ஆகும்.
இந்த தோஷம் 10-ல் 6 ஜாதகங்களில் இருக்கும். கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்து தங்களது மணவாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள்ளலாம்.
ஆண்களின் ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம்:
ஆண்களின் ஜாதகத்தில் ஏற்படும் களத்திர தோஷம் என்பது மேலே சொன்ன தோஷங்களோடு சூரியன், சுக்கிரன் இருவரும் 5, 7, 9 - ம் வீட்டில் இருந்தாலும், சூரியன், ராகு அல்லது கேது சேர்ந்து 7 -ம் வீட்டில் இருந்தாலும் 2 - ம் வீடு பாதிக்கப்பட்டாலும் ஏற்படும்.
Comments
Post a Comment