12 லக்னங்களுக்கும் முதல் தசை ப்ரதானமாக இந்த தசாக்கள் வர கூடாது:-




🐐மேஷம் = புதன் தசா
🐃ரிஷபம் = குரு தசா
👬🏻மிதுனம் = செவ்வாய் தசா
🦀கடகம் = சனி தசா
🦁சிம்மம் = சனி தசா
👧🏻கன்னி = செவ்வாய் தசா
♎துலாம் = குரு தசா
🦂வ்ருச்சிகம் = புதன் தசா
🏹தனுஷ் = சுக்ரன் தசா & சந்த்ரன் தசா
🐊மகரம் = சூர்யன் தசா
⚱கும்பம் = சந்த்ரன் தசா
🐟மீனம் = சுக்ரன் தசா & சூர்யன் தசா

🔸️ஒருவேளை இந்த ப்ரதான அவயோக தசா வந்துவிட்டால் 40 வயசுக்குள் முடிந்துவிடுவது உத்தமம். ஏனென்றால் 40 வயசு வரை தேகமும் மனமும் அவயோக தசா தரும் கஷ்டங்களை தாங்க கூடிய நிலையில் இருக்கும். 

🔸️இந்த அவயோக தசா க்ரகங்கள் குறிப்பிட்ட சில அமைப்பில் இருந்தால் மட்டுமே தசாவில் நல்ல பலன்கள் இருக்கும். அவயோக தசா நல்ல பலன்கள் தந்தாலும் அதில் மன நிம்மதி இருக்காதது
____________________

திதிகளின் தெய்வங்கள்
•••••••••••••••••••••••••
ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

சுக்லபட்சம் (வளர்பிறை)
•••••••••••••••••••••••••
1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை - பிரம்மா
3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
6. சஷ்டி - செவ்வாய்
7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி - காலபைரவர்
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - மகா விஷ்ணு
13. திரயோதசி - மன்மதன்
14. சதுர்த்தசி - காளி
15. பவுர்ணமி - லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம்(தேய்பிறை)
••••••••••••••••••••••••••••
1. பிரதமை - துர்க்கை
2. துவதியை - வாயு
3. திரிதியை - அக்னி
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - நாகதேவதை
6. சஷ்டி - முருகன்
7. சப்தமி - சூரியன்
8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - சுக்ரன்
13. திரயோதசி - நந்தி
14. சதுர்த்தசி - ருத்ரர்
15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.

*************************************
கருப்பணசுவாமி – பூஜா விதி

மறைக்கப்பட்ட சித்தர் ஜோதிட மாந்த்ரீக ரகசியங்கள்


கருப்பணசாமி – ரூபலக்ஷ்ணம் ! (திருவுருவ அமைப்பு)

இவர் பைரவர் அம்சம்; கிராமிய வழக்கில் கருப்பர் – கருப்பணன் – கருப்பண்ணன் – முனியாண்டி – சடையாண்டி – கருப்பணசாமி எனப் பலபெயர் பெறுவர். ஒரு முகமும் – இரண்டு கரங்களுமே உடையவர். வலக்கரத்தில் – கத்தி அல்லது அரிவாள் கொண்டிருப்பார். இடக்கரத்தில் – தண்டம் அல்லது கதை உமையவராக இருப்பார். முறுக்கு மீசையும் – சடாமுடியும் உடையவர். காவி உடை அணியும் வழக்குடையவர். இவர் அருகில் நாய் வாகனம் இருக்கக் காணலாம். அதுவே, இவர் பைரவர் அம்சம் என்பதை எடுத்துக்காட்டும்.

குதிரை வாகனத்தின் மேலும் அமர்ந்திருப்பார். குதிரை வாகனத்தின் அருகிலும் இருப்பார். கிராமிய காப்புக் கடவுள். இவரை வழிபட்டால் – காத்தல் அடையலாம். உபாசித்தால் – பேய் – பிசாசுகளின் – பிடியில் இருந்தும் விடுபடலாம்!

கருப்பணசுவாமி – பூஜா

ஆசன ஆர்த்தி மூலம் :
ஓம் – ஹ்ரூம் – கருப்பண்ணசாமி – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹ்ரூம் – கம் – கருப்பணசாமி மூர்த்தியை – நம:
ஓம் – ஹ்ரூம் – ஹாம் – கம் – கருப்பணசாமியே – நம:

காயத்ரி :
ஓம் க்ருஷ்ண வர்ணாசாய வித்மஹே;
ருத்ர புத்ராய தீமஹி;
தந்நோ பீம ப்ரசோதயாத்.

த்யான ஸ்லோகம் :
வ்ருத்தாயத் த்விநேத்ரம் ச
வ்யாளபத்த சூகுந்தளம்;
நீலம் பீமம் த்ரிபுண்டர வில சந்முகம்
குந்தம் தரந்தரம் வாமேச;
க்ருகரம் தக்ஷிணே கரே
ஓட்யாண பத்த கச்சம் ச;
ஸர்வா லங்கார பூஷிதம்
கருப்பணசாமி நமஸ்துதே.

மூல மந்திரம் :
ஓம் – ஹ்ரூம் – கம் – கருப்பணசாமியே நம:

அர்ச்சனை :
இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.

பூஜை :
பீஜங்களுடன் கூடிய – கருப்பண்ணர்
நாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி –
தூப – தீப – நைவேத்திய –
தாம்பூலம் – சமர்ப்பிக்க.

துதி :
ரக்தாக்ஷம் க்ருஷ்ண வஸ்த்ரஞ்ச
த்வி புஜம், மோஹணா க்ருதிம்;
கட்கம் தண்டம் அபயகர ஹஸ்தம்
சுவாமி கருப்பண்ண நமோஸ்துதே.

கருப்பண்ணசுவாமி – அஷ்ட சதஸ்தோத்ரம்

ஓம் க்ருஷ்ணவர்ணாய நம
ஓம் ரக்தாசாய நம
ஓம் நீலவஸ்த்ராய நம
ஓம் த்விபுஜாய நம
ஓம் சுந்தராய நம
ஓம் கட்க பாணியே நம
ஓம் தண்டஹஸ்தாய நம
ஓம் அலங்காரசோபிதாய நம
ஓம் குக்குட ப்ரியாய நம
ஓம் பய நிவாரகாய நம

ஓம் தயா மூர்த்தியே நம
ஓம் நிசி நாதாய நம
ஓம் ரோகஹராய நம
ஓம் மகாவிக்ரமாய நம
ஓம் த்ரிபுண்டாதாரிணே நம
ஓம் ருத்ர புத்ராய நம
ஓம் பீம அம்சரே நம
ஓம் த்விநேத்ராய நம
ஓம் புஜங்க ஆபரணங்ய நம
ஓம் புரவிரூடாய நம

ஓம் சுகாசனாய நம
ஓம் நூபுர பாதரே நம
ஓம் குங்கும திலகரே நம
ஓம் சந்தன மேனியாரே நம
ஓம் கல்லாட வஸ்தரே நம
ஓம் க்ராம பாதுகாவலரே நம
ஓம் உத்திரநோக்கரே நம
ஓம் அக்ஷ்மாலரே நம
ஓம் கஸ்தூரி ப்ரியரே நம
ஓம் சப்தகன்னி காவலரே நம

ஓம் ஸ்வான அருகுடயாயி நம
ஓம் தடாகவிருப்பரே நம
ஓம் நிம்பவ்ருஷஅமர்வாய் நம
ஓம் சடா மகுடாய நம
ஓம் காப்புக் கரத்தாய் நம
ஓம் வீரதண்டாய நம
ஓம் உக்ர முகத்தாய் நம
ஓம் வ்யாக்ரசர்மகக்சாய் நம
ஓம் போதிவ் ருஷப்ரியாய நம
ஓம் புருச விசேசாய நம

ஓம் மகாகாளாய நம
ஓம் ஏககாராய நம
ஓம் அம்ஸாய நம
ஓம் அம்ஸபநயே நம
ஓம் அரிசோபிதாய நம
ஓம் நவபூசணாய நம
ஓம் நமசிகதாய நம
ஓம் சர்வதூதாய நம
ஓம் கணபூஜிதியா நம
ஓம் தீர திவ்யாய நம

ஓம் ராஜாய நம
ஓம் ராஜியலோசநாய நம
ஓம் கந்தப்பிரியாய நம
ஓம் கெர்பகுண்டலாய நம
ஓம் கந வல்லபாய நம
ஓம் ருத்ரசோமிதாய நம
ஓம் ருத்ரவாதநாய நம
ஓம் ருத்ரவசாய நம
ஓம் வாதரூடாய நம
ஓம் யதாகோடியே நம

ஓம் யமவாங்கியே நம
ஓம் ஸ்வாதிஸ்டாய நம
ஓம் ஸ்வாமிசகாய நம
ஓம் அரிணே நம
ஓம் ஆசாய நம
ஓம் காகளாய நம
ஓம் ஆப்யநாய நம
ஓம் கெர்க்காய நம
ஓம் ஈடாகாய நம
ஓம் பூதரூபதிரதயே நம

ஓம் திரிசூலாயுததாரணாய நம
ஓம் ஸர்வ ராசநிவிதாய நம
ஓம் ஆததித்ரோதாய நம
ஓம் கெம்பீராய நம
ஓம் ஆதிபீமாவய நம
ஓம் காலநிதயே நம
ஓம் ÷க்ஷம÷க்ஷத்திராய நம
ஓம் பஸ்ம திருதயே நம
ஓம் வீரபத்ரஸ்வாமிணே நம
ஓம் அகோர ரூபிணே நம

ஓம் கலிநாசனாய நம
ஓம் கபாலினே நம
ஓம் கபர்தினே நம
ஓம் விரண்மயாய நம
ஓம் விசாம்பதயே நம
ஓம் விரூபாசாய நம
ஓம் ரத்யாய நம
ஓம் ரமணாய நம
ஓம் ரீதாரூபாய நம
ஓம் யவடாய நம

ஓம் யமதரூபாய நம
ஓம் யம் கக்காய நம
ஓம் ஸ்வசூத்ராய நம
ஓம் வாசபதீம்பிர்பவே நம
ஓம் கம்பநாசாய நம
ஓம் கருப்பரே நம
ஓம் கம் காளாய நம
ஓம் போகாய நம
ஓம் போக்யாய நம
ஓம் பரணதாய நம

ஓம் நீலவேணியே நம
ஓம் கிம்கிணிதிரதயே நம
ஓம் சண்டாய நம
ஓம் அஷ்டஆசாய நம
ஓம் உக்ராய் நம
ஓம் க்ருபாகாராய நம
ஓம் சர்வயக்ஷõய நம
ஓம் கருப்பண சுவாமினே நம

ஸ்ரீ கருப்பணசாமி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-