நவகிரகங்களின் சிறப்பு :-



*1.சூரியன்.*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்

*2.சந்திரன்.*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்.

*3 . அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்.

*4.புதன்.*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்.

*5.குரு.*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.

*6.சுக்கிரன்.*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .

*7.சனி*
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்.

*8.ராகு*
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்.

*9.கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்.

*ஓம் நம சிவய நம ஓம்.✍🏼🌹*
________________________________

 கடன் வாங்க கூடாத நபர்கள்:-
பல நாட்களுக்கு முன்பு கோவையில் ஒருவருடைய ஜாதகம் பார்க்க நேர்ந்தது. அந்த ஜாதகத்தில் இவருக்கு பணம் பரிவர்த்தனை செய்கையில் சிக்கல் ஏற்படும் என்று பலன் கூறப்பட்டது. அவரோ ஃபைனான்ஸ் என்று கூறப்படும் வட்டிக்கு விடும் தொழிலை செய்ய எண்ணினார். ஆனால் அவருடைய ஜாதகத்தில் பணப்பரிவர்த்தனை காண அமைப்பு சரியானதாக இல்லை. உடனே நீங்கள் பண பரிவர்த்தனை செய்யும் எந்த ஒரு தொழிலையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

அதுபோல கடன் வாங்கி ஒரு தொழிலை செய்வதும் சிறப்பானதாக வராது என்றும் பலன் கூறப்பட்டது. ஆனால் அவரது மனதில் கடன் வாங்கி பைனான்ஸ் என்ற தொழில் செய்ய வேண்டும் என்ற அதீத ஆசை இருந்தது. அதனால் எனது பரிந்துரையை ஏற்காமல் பைனான்ஸ் தொழில் தொடங்கினார்.

இன்று அவரது நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. அவர் எந்தெந்த இடத்தில் பணம் கொடுத்தாரோ அந்த இடத்திலிருந்து அவரால் பணத்தை வாங்க இயலவில்லை. இதனால் பல பஞ்சாயத்து களையும் சந்திக்க நேர்ந்தது. மேலும் வழக்கு போடலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார். இப்போது கடனாளியாக நிற்கிறார்.

இதற்கான கிரக நிலை என்ன?

யாருடைய ஜாதகத்தில் சனிக்கு மற்றும் சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது என்ற கிரகம் பலமாக அமர்ந்து இருக்கிறதோ அவர்களெல்லாம் பணப்பரிவர்த்தனை செய்வதில் கவனம் கொள்ள வேண்டும் மேலும் பணபர ஸ்தானங்கள் என்று அழைக்கப்படக்கூடிய 2 5 8 மற்றும் 11 ஆகிய அதிபதிகள் யாரேனும் ஒருவர் கேதுவுடன் இருந்துவிட்டால் அவர்களும் பணப்பரிவர்த்தனை செய்யக்கூடிய தொழிலை மேற்கொள்ளக்கூடாது. 

திருவாதிரை சித்திரை திருவோணம் மிருகசீரிடம் ஹஸ்தம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பண பரிவர்த்தனை செய்வதை கவனத்துடன் மேற்கொள்வது சாலச் சிறந்தது. மேலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு கடன் கொடுப்பதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதனால் தெரிவிப்பது என்னவென்றால், "உங்கள் மனதிலிருக்கும் பலனை அல்லது நீங்கள் விரும்பும் பலனை ஜோதிடர் கூறாவிடில், அதை கேட்கமாட்டேன்" என்ற மனோநிலை தேவையற்றது என்பதே ஆகும்.
________________________________

பஞ்சபூதங்களும்_கிரகங்களும் :-

1) பிருதிவி என்றால் நிலம் அதற்கு அதிபதி #செவ்வாய்

2) அப்பு என்றால் நீர் அதற்கு அதிபதி #சந்திரன் மற்றும் #சுக்கிரன்

3) தேயு என்றால் நெருப்பு அதற்கு அதிபதி #குரு மற்றும் #சூரியன்

4) வாயு என்றால் காற்று அதற்கு அதிபதி #புதன்

5) ஆகாயம் என்றால் வானம் அதற்கு அதிபதி #சனி

________________________________

யாருக்கு ஜாதகம் பார்த்து பலன் சொல்லக்கூடாது?

அமாவாசையில் பிறந்தவர்களுக்கு*

நவமி & தசமி திதியில் பிறந்தவர்களுக்கு*

வியாதிபாதம், வைதிருதி, அதிகண்டம் இந்த நாமயோகத்தில் பிறந்தவர்களுக்கு*

நவாம்சத்தில் 5 கிரகங்களுக்கு மேல் கடகம், விருச்சிகம், மீனம் இவற்றில் இருப்பவர்களுக்கு*

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது!
மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கானது!
இது போன்ற ஜாதகங்களை தொடுவதும் ஜோதிடருக்கு தீங்கானது!

மேற்குறித்த அமைப்பில் பிறந்தவர்களின் ஜாதகத்தை பார்த்தால் அதை பார்ப்பவருக்கு அதாவது ஜோதிடருக்கு கர்மவினை எதிர்வினையாற்றும் என்றும் கூறப்படுகிறது!

இப்படி பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கு பலன் சொல்லாமல் உங்களுக்கு நேரம் சரியில்லை ஒரு வருடம் கழித்து வாருங்கள் என்று, ஏதோ ஒரு கோவிலை கை காட்டிவிட்டு மழுப்பிவிடுவது நல்லது*

இதை கூறியவர் கி.பி. 1960-1970 க்குள் பிறந்த ஒரு ஜோதிட மகான்*

நம்பிக்கையும் விருப்பமும் உள்ள ஜோதிட நண்பர்கள் இதை கடைபிடிக்கலாம்*

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-