மாந்தி தோஷம் அனுபவ குறிப்பு:-



லக்னத்தில் மாந்தி சிசேரியன் இருக்கும் மந்திரங்களை நம்புபவர் மாந்திரீகத்து கற்றுக் கொள்வார் குட்டிச்சாத்தானை வழிபடுவார்கள் பிடிவாதம் அவசர புத்தி பழிவாங்கும் குணத்தை ஏற்படுத்தும் உடல் பாதிப்பை கொடுக்கும் உதாரணம் ஜெயலலிதா தான் என்ற கர்வம் இருக்கும் 
 லக்னத்தில் அல்லது ராசியில் அமரும்போது அந்தந்த கிரக காரகங்கள் பாதிக்கப்படும் .

இரண்டாம் இடத்தில் மாந்தி இருந்தால் வாக்கு ஸ்தானம் குடும்பஸ்தானம் தொடக்க கல்வி ஸ்தானம் பாதிக்கப்படும் பொய் பேசுவார் பித்தலாட்டம் செய்வார் திருமணத்தில் பிரச்சனை குடும்பத்திற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டார்கள்
சந்திரனுடன் மாந்தி சேர்ந்தால் தாயாருக்கு உடல்நிலை கெடும் தாயாரின் சொல் பேச்சு கேட்ப்பார்கள் தாயார் முலம் தான் கஷ்டப்படுவார்கள் முக்கியமாக முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள் மாந்தி எந்த கிரகத்துடன் சேருகிறதோ அதில் அடிக்ட் ஆவார்கள் 

மூன்றாம் இடத்தில் மாந்தி இருந்தால் 
இளைய சகோதரன் குறிக்கும் குருவுடன் மாந்தி சேர்ந்தால் பொய் பேசுவார் வாக்கு தவறுவார் வில்லங்கம் செய்வார் பணம் வருவாய்க்கு தடுமாறுவார் திடீர் பணம் வரும் திடீரென்று போய்விடும் 
பணத்தை எல்லாம் இளைய சகோதரனுக்கு அப்பப்போது கொடுத்து விடுவார் , சுக்கிரன் மாந்தி சேர்ந்திருந்தால் பெண் தவறு செய்வார் துரோகம் செய்வார், குரு மாந்தி சேர்ந்து இருந்தால் ஆண் தவறு செய்வான் , செவ்வாய் மாந்தி சேர்ந்திருந்தால் தன் சகோதரனே துரோகம் செய்வார், பயணத்தால் மரணம், பயணத்தால் விரைய செலவு,

நான்காம் இடத்தில் மாந்தி இருந்தால் 
தாய் ஸ்தானம் ,மண்மனை ஸ்தானம், உயர் கல்வி ஸ்தானம், தாய்க்கு உடல்நிலை கெடும் ,மண்மனைகளில் பிரச்சனை, அலைச்சல் அவஸ்தை உண்டாக்கும், நிரந்தர வேலை இன்மை ,வீடு மனை அமைய தடை,
ராகுவுடன் மாந்தி இருந்தால் தந்தை வழிபாட்டன் சொத்து வருவது தடை ஏற்படுத்தும், உயர்கல்வி ஸ்தானம் கெடும்,

ஐந்தாம் இடத்தில் மாந்தி இருந்தால் காதல் திருமணத்தை சொல்லும் , காதல் திருமணத்தை தடை செய்யும், காதல் தோல்வியால் மருந்து குடித்து சாகும், ஐந்தாம் இடத்தைப் சனி கொண்டும் பார்க்க வேண்டும் லக்னத்தைக் கொண்டும் பார்க்க வேண்டும் சந்திரனை கொண்டும் பார்க்க வேண்டும் , குரு மாந்தியும் இருந்ததால் புத்தர தோஷத்தை கொடுக்கும் குலதெய்வத்தை மறைத்து விடும் பூர்வ கர்ம தோஷத்தை உண்டு பண்ணும்.

ஆறாம் இடத்தில் மாந்தி இருந்தால் 
கடன் நோய் எதிரி கொடுக்கும் , கடனை நிவர்த்தி செய்ததால் நோய் வரும் நோயை நிவர்த்தி செய்தால் எதிரி வரும், இறந்த பிரேதத்துக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்தால் மாந்தி தோஷம் விலகும் வளம் பெறும், சுக்கிரனுடன் மாந்திணைந்தால் அழகு கெடும், ஒழுக்கம் கெடும் , சுக்கிரன் ராகு இணைவு கெட்ட சாகவாசத்தை ஏற்படுத்தும் பெண்களுடன், சுக்கிரன் மாந்தி இருந்தால் மனைவியுடன் உயிருக்குயிராக நேசிப்பார் அதுவே பிரச்சனையாக மாறிவிடும் இந்த அமைப்பு துரோகத்திற்கு வழிவகுக்கும், வாகனத்தால் பிரச்சனை வாகனம் அமையாது பழைய வாகனம் அமையும் , வாகன விபத்தை உண்டாக்கும், வாகனத்திற்காக செலவு செய்ய வேண்டி வரும், வாகன தோஷத்தை உண்டாக்கும், 


மாந்தி ஏழாம் இடத்தில் இருந்தால் 
திருமண தோஷம் உண்டாக்கும் கல்யாணம் நிச்சயமாக மண்டபம் சென்று தானாக நின்று விடும்
சூரியனுடன் மாந்தியை இணைந்தால் தகப்பனார் இறந்து விடுவார் அப்போது திருமணம் தானே நின்று விடும், விரைவில் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் அல்லது மரணத்தை கொடுத்து திருமணத்தை நிறுத்தும் தாய் வழி உறவு கெடுக்கும் மண் மனை வீடுகளில் பிரச்சனை உண்டாக்கும் கேது மாந்தி சேர்ந்து இருந்தால் எப்போது பக்தி மார்கத்தில் அலைந்து கொண்டிருப்பான் விநாயகரை கும்பிட்டுக் கொண்டிருப்பான் அல்லது சனி கேது கேட்டிருந்தால் சாமியே இல்லை என்று நாத்திகவாதியாக இருப்பான் .

எட்டாம் இடத்தில் மாந்தி இருந்தால் 
ஆயுள் ஸ்தானம் சனி மாந்தி இணைந்து எட்டாம் இடத்தில் குரு பார்வை இல்லை என்றால் சாவில் முடியும் சனியுடன் மாந்தி சூரியன் இணைந்தால் அப்பாவுக்கு மரணம் சனி மாந்தி சந்திரன் இணைந்தால் தாயாருக்கு மரணம் இதுபோல் பார்த்துக் கொள்ளவும் , சனி நல்ல நிலையில் இருந்து மாந்தியுடன் கூட நீண்ட ஆயுள் இருக்கும், சனி நல்ல நிலையில் இருந்து மாந்தியுடன் இருந்தால் அன்னதானம் செய்யலாம், 
சந்திரன் மாந்தி சேர்ந்து இருந்தால் அன்னதானம் செய்யக் கூடாது, இறந்த பெண் உடலுக்கு சேலை மற்றும் இறுதி காரியங்கள் செய்ய உதவி செய்தால் இந்த தோஷம் விலகும்,

ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால் 
தந்தை ஸ்தானம், யோக ஸ்தானம், வாழ்க்கையில் வரும் யோகங்கள் எல்லாம் கெட்டுவிடும், தந்தைக்கு உடல்நிலை கெடும் ,தந்தையை பிரித்து வைப்பார், செவ்வாயுடன் மாந்தி இணைந்தால் சகோதரருடன் பிரிவினை உண்டாக்கும், மாந்தி காரகங்களின் மேல் பிரியத்தை உண்டாக்கி கெடுப்பார் ,
மாந்தியுடன் எந்த கிரகம் சேருகிறதோ அந்த கிரக காரக வீக்னஸ் உண்டாக்கும் , பூர்வ புண்ணியத்தை கெடுக்கும் அப்பா வழியில் திதி கொடுக்க வேண்டும், பினத்தை எரித்து சாம்பலை வைத்துள்ளவர்கள் காசியில் போய் கரைக்க வேண்டும் என்று இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு போக்குவரத்து வசதி இருக்காது அப்படிப்பட்டவர்களுக்கு பண உதவி செய்து வழி அனுப்பி விட்டால் பிரேத தோஷம் நீங்க சுபிட்சம் உண்டாகும்,

பத்தாம் இடத்தில் மாந்தி இருந்தால் 
பதவி தொழில் பறிக்கப்படும் குருவும் மாந்தியும இணைந்து இருந்தால் பதவி பறிக்கப்படும் பதவி எல்லாம் கொடுப்பார் தொழிலும் கொடுப்பார் அவரே நிறுத்துவார் ,மாந்திக்கு ஆங்கில பெயர் titan,
ராகு தேசம் துபாய், செவ்வாய் தேசம் சிங்கப்பூர், செவ்வாய் மாந்தி சேர்ந்தால் தகராறு அடிதடி கலாட்டா உண்டாக்கும்,
மாந்தி பத்தாம் இடத்திலும் 11ஆம் இடத்திலும் இருந்தால் டைட்டான் வாட்ச் கட்டினால் அவர் சூப்பரா பிக்கப் ஆயிடுவார்.

பதினோராம் இடத்தில் மாந்தி இருந்தால் , சனிக்கு 11 , அல்லது சந்திரனுக்கு 11 ,அல்லது லக்கினத்திற்கு 11 இருந்தால் நன்மைதான் செய்வார்,

பன்னிரண்டாம் இடத்தில் மாந்தி இருந்தால் அயனசயண போகம் கெடும் கணவன் மனைவி பிடித்து வைக்கும் வெளிநாடு வெளியூர் செல்ல வைக்கும்
பன்னிரண்டாம் இடம் கெட்டுப் போனால் சந்தோஷமாக இருக்க முடியாது தூக்கம் கெட்டுப் போய்விடும் , ஆசையை தூண்டி கெடுத்து விடும்,

மாந்திக்கான பரிகார ஸ்தலங்கள் 

இறந்த போன சரீரத்திற்கு உதவி செய்தல் அடக்கம் செய்யும் வரை உதவி செய்யுங்கள் (பணம்)

பகலில் பிறந்தால் :குளிகன் 
 இரவில் பிறந்தால:மாந்தி

குளிகன் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தலாம், மாந்தி மரணத்திற்கு உகந்தவன்.


 இரவில் பிறந்திருந்தால் (மாந்தி என்ற பெயர்)திருவாலங்காடு கும்பகோணம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்

பகலில் பிறந்து மாந்திதோஷம் (குளிகன் என்ற பெயர்) இருந்தால்திருவலங்காடு திருவள்ளூர் சென்னை சென்று பரிகாரம் செய்ய வேண்டும் 

அல்லது திருநாரையூர் சென்று குடும்ப சனீஸ்வரரை வழிபாடு செய்தால் மாந்திதோஷம் நீங்கும்
மங்களநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் நீங்கும் 

சென்னை திருவள்ளூர் பாக்கம் 

நம்பாக்கம் மாந்தி ஈஸ்வரரை வணங்கினால் தோஷம் பிறதி சனிக்கிழமை பூஜை நடக்கும் அந்த சமயத்தில் சென்று வணங்கவும்

திருப்பூர் பக்கம் காங்கேயம் பக்கம் கண்ணாபுரம் சுயம்புலிங்கமாக மாந்தீஸ்வரர் காட்சியளிக்கிறார் அர்ச்சனை செய்தால் மாந்தி தோஷம் விலகும். 

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-