வீட்டோடு மாப்பிள்ளை யார்?
1. ஆண் ஜாதகத்தில் குருவும் ,சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான்.
2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் விட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.
4.பெண் ஜாதகத்தில் செவ்வாயும் ,சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான்.
5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான்.
6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகி திருமணத்திற்கு பின்னும் தன் தாய் விட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""”#கண்டம்_நாட்கள்:
சூரியன்
செவ்வாய் ஜெனன ஜாதகத்தில் எந்த நட்சத்திரங்களில் உள்ளார்களோ, அந்த நட்சத்திரங்களிலிருந்து 7,10,15ஆவது நட்சத்திரம் நடக்கும் நாள் ஜாதகனுக்கு #கண்டம் தரும் நாளாகும்.
சந்திரன்
புதன் ஆகியோர் இருக்கும் நட்சத்திரத்திலிருந்து 8,18,24ஆவது நட்சத்திரம் நடக்கும் நாள் #கண்டம் ஏற்படுத்தும் நாளாகும்.
சுக்கிரன்
குரு ஆகிய கிரகங்கள் இருக்கும் நட்சத்திரங்களிலிருந்து 9,7ஆவது நட்சத்திரம் நடக்கும் நாள் #கண்டம் ஏற்படும் நாளாகும்.
சனி இருக்கும் நட்சத்திரத்திலிருந்து 5,11,26ஆவது நட்சத்திரம் நடக்கும் நாள் #கண்டம் தரும்.
ராகு
கேது ஜாதகத்தில் நிற்கின்ற நட்சத்திரத்திலிருந்து 7ஆவது நட்சத்திரம் நடக்கும் நாள் ஜாதகனுக்கு #கண்டம் ஏற்படுத்தும் நாளாம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""”அதி_நீசம் பெரும் கிரகங்கள் :-
சூரியன் = சுவாதி 2 (துலாம்)
சந்திரன் = விசாகம் 4 (விருச்சிகம்)
செவ்வாய் = ஆயில்யம் 4 (கடகம்)
புதன் = உத்திரட்டாதி 4 (மீனம்)
குரு = உத்திராடம் 3 (மகரம்)
சுக்கிரன் = ஹஸ்தம் 4 (கன்னி)
சனி = பரணி 2 (மேஷம்)
ராகு / கேது = ரோஹிணி 3 (ரிஷபம்)
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""”ராகு மருத்துவ செலவு கொடுக்கும் கிரகம்.
ராகு எந்த கிரகத்துடன் இருக்கிறதோ அல்லது எந்த கிரகத்திற்கு திரிகோணத்தில் இருக்கிறதோ, அந்த கிரகம் குறிக்கும் உறவு முறைக்கு மருத்துவ செலவுகள் அடிக்கடி ஏற்படும்.
சூரியன் - தந்தை, மூத்தமகன்
சந்திரன் - தாய், மாமியார், தமக்கை, தாய் வழி உறவினர்கள்
செவ்வாய் - கணவன், தம்பி, தந்தை வழி உறவினர்கள்
புதன் - இளைய சகோதரம், தாய்மாமன், மாமனார்
குரு - ஆண் ஜாதகர், இரண்டாம் கணவன்
சுக்கிரன் - மனைவி, பெண் ஜாதகர்
சனி - மூத்த சகோதரர், பெரியப்பா
தற்போது மீனத்தில் ராகு இருக்கிறது. மீனம், கும்பம், கடகம், விருச்சகம் ஆகிய ராசிகளில் சூரியன் இருக்க பிறந்த ஜாதகர்களுக்கு, ஆதாவது பங்குனி, மாசி, ஆடி, கார்த்திகை மாதத்தில் பிறந்த ஜாதகர்களுக்கு சூரியன் ராகு சேர்க்கை தற்காலிகமாக ஏற்படும், இதனால் ஜாதகரின் தந்தை, மூத்தமகன், ஜாதகரின் கண்கள், ஜாதகரின் எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கும். பரிசோதனை செய்து பாருங்கள்.
பரிகாரம் - ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தங்க நகை வாங்கவும், அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன.
அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை. வாங்கிய பொன் நகைகளை முதன்முதலில் அணிய சனிக்கிழமை மிக நல்லது.
பொன் நகை வாங்க வேண்டிய நட்சத்திரங்கள்: அஸ்வினி, ரோகிணி மிருகசீரிடம் பூசம், அஸ்தம் சித்திரை, அனுஷம், ரேவதி, ஆகிய எட்டு நட்சத்திரங்களும் பொருத்தமானவை.
மேற்கண்ட எட்டு நட்சத்திரங்களும் பஞ்சமி, சஷ்டி தசமி, ஏகாதசி, பெளர்ணமி, ஆகிய திதிகளில் வரும்போது முதன்முதலில் அணியப்படும் நகைகள் பத்து தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சுவர்ண லட்சுமி என்றும் குடியிருப்பாள். பொன் நகை தங்காத தங்க தோஷம் விலகும்.
அடகு போன நகைகளை மீட்டு, மேற்கண்ட நட்சத்திரம், திதிகளில் அணிந்தால் மீண்டும் அந்த நகை அடகுக்குச் செல்லாது. மேலும் மேற்கண்ட நட்சத்திரம் அல்லது நாட்களில் பொன் நகை போடுவதால், வாழ்நாள் முழுவதும் பொன் நகைகள் அதிக அளவு சேரும்.
******************************************
ஓரை அறிந்து நடப்பவனை, யாரும் ஜெயிக்க முடியாது - சித்தர் வாக்கு :-
உங்கள் ராசிக்கு அனுகூலம் தரும் #ஹோரை
மேஷம் - சூரியன் செவ்வாய் குரு சுக்கிரன்
ரிஷபம் - சந்திரன் புதன் குரு சுக்கிரன்
மிதுனம் - சந்திரன் புதன் குரு சுக்கிரன்
கடகம் - சந்திரன் குரு சுக்கிரன்
சிம்மம் - சூரியன் சந்திரன் குரு
கன்னி - சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்
துலாம் - செவ்வாய். புதன் குரு சுக்கிரன்
விருச்சிகம் - சந்திரன் குரு சுக்கிரன்
தனுசு - சூரியன் செவ்வாய் குரு சுக்கிரன்
மகரம் - சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன்
கும்பம் - சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன்
மீனம் - சூரியன் செவ்வாய் குரு சுக்கிரன்
குறிப்பு:- வளர்பிறை சந்திரன் தான் இங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment