எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்:-
*1.பிரதமை் திதி:*
அதிபதி:
அக்னி பகவான்
பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:
உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்*
*2. துதியை திதி:*
அதிபதி:
துவஷ்டா தேவதை
துதியை திதியில் செய்யத் தக்க காரியம்:
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!
*3. திருதியை திதி:*
அதிபதி:
பார்வதி
திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:
வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!
*4. சதுர்த்தி திதி:*
அதிபதி:
கஜநாதன் [விநாயகர்]
சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ]
*5. பஞ்சமி திதி:*
அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !
*6.சஷ்டி திதி:*
அதிபதி:
முருகன்
சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:
வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!
*7. சப்தமி திதி:*
அதிபதி:
சூரியன்
சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:
வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!
*8.அஷ்டமி திதி:*
அதிபதி:
சிவபெருமான்
அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!
*9.நவமி திதி:*
அதிபதி:
பாராசக்தி
நவமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!
*10. தசமி திதி:*
அதிபதி
ஆதிசேஷன்
தசமி திதியில் செய்யத் தக்க காரியம்:
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி !
*11.ஏகாதசி திதி:*
அதிபதி:
தர்ம தேவதை
ஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!
*12. துவாதசி திதி:*
அதிபதி:
விஷ்ணு
துவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]
*13.திரயோதசி திதி:*
அதிபதி:
மன்மதன்
திரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!
*14.சதுர்தசி திதி:*
அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை
வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!
வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!
பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.
__________________________
ஹோரை :
சூரிய ஹோரை :
சுபகாரியங்கள் செய்ய மற்றும் புதிதாக எந்த அலுவல்களையோ செயல்களை இந்த சூரியன் ஓரை ஏற்றதல்ல. ஆனால் இந்த ஓரையில் உயில் சாசனம் எழுத, பெரியோர்கள் ஆசிபெற, மற்றவரின் சிபாரிசு பெற, மற்றவர்களிடம் ஆலோசனை பெற, அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷங்களை மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.
_____________________
சந்திர ஹோரை :-
சந்திர ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் தொடர்புகொண்ட சுப விசேஷங்கள் மிகவும் ஏற்ற காலம் இது. இந்த ஓரைகளில் புதிய தொழில் தொடங்க, வர்த்தகம் தொடங்க, வியாபார விஷயமாகவோ பிரயாணம் மேற்கொள்ளலாம், ஆன்மீக யாத்திரை செய்யலாம், பெண் பார்ப்பது மற்றும் திருமணம் விழாக்கள், சீமந்தம், மொட்டையடிப்பது, காது குத்துதல், வெளிநாடு செல்ல, பதவி ஏற்பது, பேச்சுவார்த்தை செய்யலாம், வேலை விண்ணப்பிப்பது, சேமிப்பு துவங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதிலும் வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் மிகவும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
_____________________
செவ்வாய் ஹோரை :-
இந்த செவ்வாய் அசுப கிரகம், எல்லாக் கிழமையில் வரும் இந்த ஓரை எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. செவ்வாய் ஓரையானது யுத்தம், பொருள் அழிவு, நோய், விபத்து, ஆகியவற்றை உண்டாக்கும். இருப்பினும் இந்த ஓரையில் நிலம் வாங்குவது விற்பது பற்றிய பேச்சு வார்த்தை, அக்ரிமென்ட் போடுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது, ஆயுதப் பிரயோகத்தைப் பயன்படுத்தி யுத்தம் செய்யலாம். பல போர்கள் முற்காலத்தில் இந்த ஓரையில் செய்வார்கள். செவ்வாய் பெரிய அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தைப் பிரயோகம் செய்து சமாதான கட்டுக்குள் கொண்டுவர முடியாது. இந்த ஓரையில் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, முருகரை அம்பாளை வழிபடலாம். இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் சீக்கிரம் முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.
_____________________
புதன் ஹோரை :-
புதன் என்றவுடன் அனைவரும் புத்தி என்று தெரியும். இந்த ஓரையில் புத்தியைப் பலப்படுத்தும் கல்வி சேர்க்கை, தகவல் தொடர்பு, நிலம் வாங்க, பெண் பார்க்க, திருமணம், ஜோதிடம் பார்க்க மற்றும் பேச, கதை கட்டுரைகள் மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும், நற்காரியங்கள் ஆரம்பிக்க, வாங்கி சேமிப்பு, வழக்குப் பதிவு ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம் ஆகும். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். இந்த ஓரையில் காணாமல்போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும். திருமணம் விஷயமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.
_____________________
குரு ஹோரை:-
குரு ஓரையில் தொடங்கும் எல்லாவித நற்காரியம் முக்கிய வெற்றியில் முடியும், நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் சந்தோஷம் ஏற்படுத்தும். இந்த ஓரையில் எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், திருமணம், குரு உபதேசம் ஆசீர்வாதம் பெற, புது வேலைக்குச் சேர, வியாபாரம், மருத்துவம் பார்க்க, விவசாயம் செய்ய நல்லது. ஆடை மற்றும் பொருள்கள் வாங்கவும், தங்கம் வாங்க, சட்டத்திற்கும் ஏற்ற காரியங்கள், வீடு மனை வாங்க சரியான முழு சுப ஓரை ஆகும். இந்த நேரத்தில் காணாமல்போன பொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் உடனே கிடைத்துவிடும்.
____________________
சுக்கிர ஹோரை :-
சுக்கிர என்பவன் போகக் காரகன் அதனால் ஆடம்பரமான வாழ்க்கை வாழத் தேவையான அடுக்குமாடி அல்லது கட்டிய வீடு, புது வாகனம், ஆடை, வெள்ளி ஆபரணம் மற்றும் வீட்டிற்கு வேண்டிய அலங்கார பொருள்கள், நட்பு, காதல் புரிவதற்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள், பெண்கள் தொடர்பான சகல காரியங்களிலும், விவசாயத்திற்கும், பயணங்கள் செய்ய, பெண் பார்க்க, சாந்தி முகூர்த்தத்திற்கு மிக முக்கிய ஓரையாகும். இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
____________________
சனி ஹோரை:-
இது ஒரு அசுப கிரக ஓரை அதனால் இந்த ஓரையில் தான் சிறை வாசம், சண்டை, எதிரிகளால் துன்பம் போன்றவை ஏற்படும். எந்தவித சுபகாரியங்களும், அறுவைச்சிகிச்சை செய்தல் மற்றும் புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் பொருள் சேர்க்கை பற்றிப் பேசவோ, கடனை அடைப்பதற்கு முயற்சியோ, பழைய வீடு, வாகனம் மற்றும் இயந்திரம் வாங்க, பூர்வ ஜென்ம பாவம் தீர்க்க, உழைப்பு பற்றிய பேச்சு வார்த்தையோ, சட்டப்பூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ, மரம் செடி நடுதல், நடைப்பயணம் துவங்க நல்லது. இந்த ஓரையில் காணாமல்போன பொருள் கிடைக்காது கிடைத்தாலும் பல வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம். சனிக்கிழமை அன்று சந்திர ஓரை தவற்றை ஏற்படுத்தும்.
________________________
ஜோதிட நண்பர்களே, காலை வணக்கம். கேதுவின் நட்சத்திரங்களால், ஏற்படும் தோஷம் என்ன? அதை போக்க என்ன பரிகாரம் செய்யலாம். சிறு குறிப்புகள்.
***கேதுவின் நட்சத்திரங்களான, அசுவினி, மகம், மூலம். இம்மூன்றும், நெருப்பு தத்துவத்தில் வரும். என இதனை, நெருப்பு தத்துவமான, விளக்கை உபயோகித்து தான் ஈஸ்வரனுக்கு, தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
1) அசுவினியில், ஒருகிரகம் இருந்தால், அந்த பரம்பரையில் (அல்லது) வீட்டில், செய்வினை குற்றம் இருக்கும். (கா.பு.த. 1மிடம், குடும்ப தலைவன்).
பரிகாரம்: அசுவினி அன்று ஆமணக்கு எண்ணை வாங்கி, வீட்டு பூஜை அறையில், தீபம் ஏற்ற வேண்டும்.
2) மகத்தில், ஒரு கிரகம் இருந்தால், பூர்வபுண்யம் / பிதுர்கள் குற்றம் இருக்கும். மகத்தில் எத்தனை கிரகம் உள்ளதோ? அத்தனை துர்மரணம் ஏற்பட்டிருக்கும். (ஜந்தாமிடம்: - பூர்வ ஜென்ம வினை).
பரிகாரம் : 5 தீபம் ஏற்றி, சாம்பிராணி தூபம்,வீடு முழுக்க போட வேண்டும்.
3) மூலத்தில், ஒரு கிரகம் இருந்தால், அந்த வீட்டில் தெய்வ குற்றம் இருக்கும்.(மற்றும்) குலதெய்வத்தை மறந்து வேறு தெய்வத்தை வணங்குவார்கள்.(9மிடம், முன்னோர்கள்).
பரிகாரம்:-வீட்டுதலை வாசப்படியில் மாலை வேலையில் அகல்விளக்கில், 2தீபம் ஏற்றினால், நம் குலதெய்வம் கனவில் வரும்.
சூட்சுமம் :- கேது என்ற கிரகம், அதில் உள்ள கிரக, காரக உறவு மூலம், விடுபட்ட கர்மாவை சுட்டிகாட்டும். நண்பர்களே.
குறிப்பு :- 1).விநாயகரை வழிபட்டாலே கேதுவினால் வரும் தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடும். அதனால் தான் கோவில்களில் சர்ப்பம் இருக்கும் இடத்தில் விநாயகரும் / விநாயகர் வயிற்றில் சர்ப்பத்தையும், கட்டி வைத்து குறிப்பாக, நம் முன்னோர்கள் உணர்த்தினார்கள்.
குறிப்பு:- 2). சுவாசத்தின் மூலம் குண்டலியை மேல் எழுப்பினால் அமிர்த கலசம் கிடைக்கும். இது விநாயகர் + கேது தத்துவம்.
______________________________________
நவபாசனம் விபரம் :-
புதன் : கந்தகம் /sulphur
சுக்கிரன் :மனோசிலை/red arsenic
சந்திரன் : மிருதார்சிங்கி/
சூரியன்: பாதரசம் /Mercury
செவ்வாய்: லிங்கம்/Mercury sulphide
ராகு : வீரம்/ corrosive sublimate/percloride of mercury
சனி : தாளகம்/orpiment
கேது : பூரம்/bhi chloride of mercury
குரு : வெள்ள பாசனம்/white arsenic
Comments
Post a Comment