உபாசனை தெய்வம் :-
சூரியன்: சிவன்
சந்திரன்: காளி, மாரியம்மன்,முத்து மாரியம்மன்,
செவ்வாய்: முருகன், பைரவர்
புதன்: பெருமாள்
குரு; குருமார்கள், பிரம்ம, ஜீவசமாதி
சுக்கிரன்: லட்சுமி,
சனி: கருப்புசாமி,முனி சாமி,காவல் தெய்வங்கள்,
ராகு : காளி, வராஹி, நாகம்மா, அகோர தேவதைகள்.
கேது : விநாயகர், ஜீவசமாதி, முன்னோர்கள்.
உபாசனை தெய்வம் ,லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் அந்த ஸ்தான அதிபதி எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அந்த நட்சத்திர அதிபதி தான் உபாசனை தெய்வம்,
அதிர்ஷ்ட தெய்வம் ,லக்னத்தில் எட்டாம் இடத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் உள்ளாரோ அந்த நட்சத்திரமே அதிர்ஷ்ட தெய்வமாகும்,
ரோகம், நோய் ,கடன், லக்னத்திற்கு ஆறாம் அதிபதி எந்த நட்சத்திரத்தில் உள்ளார்கள் அந்த நட்சத்திரமே ரோக நிவாரணம் கடன் நிவாரணம் தெய்வம்.
திருமணம் நடைபெற ஆண்களுக்கு லக்னத்திற்கு ஏழாம் இடத்தின் அதிபதி எங்கு நின்று எந்த நட்சத்திர சாரத்தில் இருக்கிறாரோ அந்த நட்சத்திர கடவுளை வணங்கினால் அந்த ராசி அதிபதி நிற்கும்கிழமையில் வணங்கினால் திருமண தடை நீங்ககும்.(கோவில் வாசப்படியில் பண்ணீர் தெளித்து விட்டு வரவும்)
சுக்கிரன் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் உள்ளரோ அந்த நட்சத்திர அதிபதி தெய்வத்தை வணங்கினால் திருமணம் நடக்கும்,
பெண்களுக்கு திருமணம் நடைபெற எட்டாம் இடத்தின் (மாங்கல் ஸ்தானம்) அதிபதி எங்கு உள்ளாரோ எந்த நட்சத்திர சாரத்தில் உள்ளாரா அந்த தெய்வத்தை வழிபாடு செய்தால் திருமணம் நடைபெறும்,
லக்னத்திற்கு செவ்வாய் எந்த இடத்தில் உள்ளாரோ அதனுடைய எந்த நட்சத்திரத்தில் உள்ளாரா அந்த தெய்வத்தை வணங்கினால் திருமணம் தடை நீங்கி நடைபெறும்.
தொழில் தடை நீங்க பத்தாம் அதிபதி நின்ற நட்சத்திர சாரத்தில் பத்தாம்மாதிபதி நின்ற கிழமையில்
வழிபாடு செய்தால் தடை நீங்கும்.
தொழில்காரகன் சனி நின்ற நட்சத்திர சார அதிபதி வழிபாடு செய்தால் தொழில் தடை நீங்கும் (சனி நின்ற ராசி கிழமையில்).
*************************************
உபாசனை தெய்வம் செல்ல வேண்டிய கோயில் அல்லது வழிபாடு வேண்டிய தெய்வம் :-
ஆண் : குருவிற்கு 11 இடம் ,
பெண்: சுக்கிரனுக்கு 11 இடம்
தொழில் fame : சூரியனுக்கு பதினோராம் இடம்
1)மேஷம் : பழனி திருஆவினன்குடி மகாலட்சுமி சன்னதி
2)ரிஷபம்: ராமேஸ்வரம்
3)மிதுனம்: திருநெல்வேலி காந்திமதி சன்னதி
4)கடகம்: அரக்கோணம் நெம்மேலி திருபுரசுந்தரி வீடு( Nemili Sri Bala Tripurasundari Peetam)
5)சிம்மம்: திருமயச்சூர் லலிதாம்பிகை
6)கண்ணி : பட்டீஸ்வரம் விஷ்ணு துர்க்கை அம்மன்
7)துலாம்: காற்று அழகிய சிங்கப்பெருமாள் கோயில் திருச்சி ஸ்ரீரங்கம்
8)விருச்சகம்: கீழ் திருப்பதி அலமேலு மங்காபுரம்
9)தனுசு : வராஹி அம்மன் ,வராகப் பெருமாள்.
10)மகரம் : தெத்து பட்டி ராஜகாளியம்மன் , கன்னிவாடி.
11)கும்பம்: குற்றாலம் குற்றாலீஸ்வரர்
12)மீனம்: மதுரை மீனாட்சி
Comments
Post a Comment