கர்ம நட்சத்திரங்கள் :-





1.மேஷத்தில்
அசுபதி 
தாய்வழி கர்மா.

2. ரிஷபத்தில் உள்ள
மிருகசீரிஷம் 1,2 மட்டும்.
தகப்பன் வழி கர்மா.
தெய்வ சாபம்.
பொதுமக்கள் சாபம்.
நம்பியவர்களை ஏமாற்றிய சாபம்.
உடல் போகத்தினால் உண்டான சாபம்.

3. மிதுனம்
திருவாதிரை
விசம் நெருப்பு போன்ற கொடிய இறப்புகள்.
தற்கொலை.

4.கடகம் 
ஆயில்யம்
பறவைகள், மரங்கள் மற்றும்
படுத்த படுக்கையாக இறத்தல்.

5. சிம்மம்
பூரம்
அரசுவழி பொதுமக்கள் சொத்து உடமைகளை அபகரிப்பு செய்த தோஷம்.
பொதுமக்கள் சாபம்.
குடும்பத்தார் சாபம்.

6.கன்னி
அஸ்தம்
பெண்கள் வாழ்க்கை இழப்பு
பெண்கள் ஆற்றுனாகொடுநோய் பட்டு இறத்தல்.
குருவின் சாபம்.
நண்பர்கள் சாபம்.
வாழ்வுக்கு வழிகாட்டியவர்களை ஏமாற்றிய சாபம்.

7. துலாம்
சித்திரை 3,4
தொழிலில் கலப்படம் செய்தல்.
பொதுமக்களை ஏமாற்றிய சாபம்.
பேராசையினால் உண்டான சாபம்.

8.விருச்சிகம் 
அனுஷம்
ஆயுள் சாபம்
பிரேத சாபம்

9. தனுசின்
மூலம்
உருவாக்கத்தில் உள்ள சாபம்
10.பூராடம் 
நம்பிக்கை துரோகம்.
11.உத்திராடம்1 பாதம் 
பஞ்சமகா புருஷ தோஷம்.

12. மகரம்
அவிட்டம் 1,2
உடன் பிறந்தவர்களை ஏமாற்றிய சாபம்.
மண் மூலம் செய்த துரோகம்.
அடுத்தவர்களை தண்டித்த தோஷம்.

13. கும்பம்
பூரட்டாதி 1,2,3
பெண்களுக்கு இழைத்த மொத்த சாபம் (ஸ்ரீ சாபம்)

14.மீனம்
உத்திரட்டாதி
குல தெய்வம் சாபம்
தாய்மாமன் சாபம்
குழந்தைகளுக்கு செய்த துரோகம்.

இந்த 14 நட்சத்திரமும் கர்ம நட்சத்திரங்கள்.

அடுத்த வீட்டில் உள்ள உடைந்த நட்சத்திரங்கள் சாபம் பெறாது.

இதில் நிற்கும் கிரகங்களின்
உறவு காரகங்கள்
இந்த தோஷத்தை தாங்கியே வாழ்வார்கள்.

ஜாதகருக்கு கர்ம நட்சத்திரத்தில் கிரகங்கள் நின்று தசா நடத்தினால்,
மேலே கூறிவந்த தோஷ நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் நடக்கும்.

பொதுவாக 4 கிரகங்களுக்கு மேல் கர்ம நட்சத்திரத்தில் நின்றால் ஜாதகம் அவ்வளவு சிறப்பு இல்லை.

கர்ம நட்சத்திரத்தில் நிற்கும் கிரக தசைகள் நடக்காமல்,
வாழ்ந்து முடிப்பது மிகவும் சிறப்பு.
______________________

மரணதோஷமும், மஹா மிருத்யுஞ்செய ஹோமமும்..

மரண தோஷங்களில் முக்கியமான 3 வகைகள் இருக்கின்றன. அவை வசு பஞ்சக தோஷம், பிண்ட நூல் தோஷம், மற்றும் பலி நட்சத்திர தோஷம்..

1. வசுபஞ்சக தோஷம்

அவிட்டம் தொடங்கி ரேவதி வரையிலான 5 நட்சத்திரங்களில் எதேனும் ஒரு நாளில் மரணம் ஏற்பட்டால் , அதே ஆண்டில் அந்த குடும்பத்தில் தொடர்ச்சியாக கண்டங்கள் அல்லது மரணத்திற்கு இணையான கண்டங்கள் ஏற்படும்.. பாதிப்பு என்பது மரணம் அடைந்தவர்க்கு யார் கொள்ளி போட்டு காரியங்கள் செய்கிறார்களோ, அவருக்கு தான் முதலில் இருக்கும்...

பரிகாரம்

வசுபஞ்சகதோஷம் உள்ள நாட்களில் ஒரு மரணம் ஏற்பட்டால் , பிணத்தை சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பே எரித்து விட வேண்டும்.

பிணத்தை எரிக்கும் போது தர்ப்பை மற்றும் அருகம்புல் ஆகியவற்றால் ஐந்து பொம்மை உருவங்கள் செய்து அவற்றை கொள்ளி வைப்பவர் கையால் சிதையில் தனித்தனியாக வைத்து எரித்து விடவும் வேண்டும்..

அத்துடன் மரணம் ஏற்பட்ட 16 நாட்கள் கழித்து மிருத்யுஞ்செய ஹோமம் செய்ய வேண்டும்..

கொள்ளி வைத்தவர் யாரோ, அவர் ஒரு ஆண்டு காலம் தனது ஜென்ம நட்சத்திரம் வருகின்ற நாட்களில், சிவாலயம் சென்று வில்வ இலைகளால் சர்வேஸ்வரனை அர்ச்சித்து வர வேண்டும் ...

வசுபஞ்சகதோஷநிவர்த்தி தருகின்ற ஒரு மிகச் சிறந்த தீர்வாகும்..இதனாலேயே அவர்கள் குடும்பம் சகல ஐஸ்வர்யங்கள் பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழும்..

2. பிண்டநூல் தோஷம்

வசு பஞ்சகத்தை விட வீரியம் குறைந்தது.

பிண்டநூல் தோஷத்தில் தொடர்புகள் கொண்ட நட்சத்திரங்கள் மொத்தம் 9 ஆகும். அவை கேட்டை, கார்த்திகை, பூரம், பூரட்டாதி, பூராடம், ஆயில்யம், பரணி, திருவாதிரை, மூலம் ஆகிய எதேனும் ஒரு நட்சத்திரத்தில் மரணம் ஏற்பட்டால் அது பிண்டநூல் தோஷம் ஏற்படும். இதனால் கொள்ளி வைப்பவருக்கு மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும்.

பரிகாரம்

மரணம் ஏற்பட்ட 16 நாட்கள் கழித்து வீட்டில் மிருத்யுஞ்செய ஹோமம் நடத்த வேண்டும்..

3. பலி நட்சத்திர தோஷம்

பிண்டநூல்தோஷத்தைவிடஇது இன்னும் வீரியம் குறைந்தது..

புனர்பூசம், விசாகம், உத்திரம், ரேவதி, உத்திரட்டாதி, உத்திராடம், ரோஹிணி, ஆகிய எதேனும் ஒரு நட்சத்திரத்தில் மரணம் ஏற்பட்டால் அதுவே பலி நட்சத்திர தோஷம் என்பது..

குடும்பத்தில் குழப்பங்களும், வறுமையும் சேர்ந்தது போன்ற நிலை ஏற்படும்..

பரிகாரம்

மரணம்ஏற்பட்டபதினாறு நாட்கள் கழிந்த பின்னர் வீட்டில் மிருத்யுஞ்செய ஹோமம் நடத்த வேண்டும்..


______________________

வீட்டின் நட்சத்திரம் விதானம் :---

1) அசுபதி - வீட்டின் மொட்டை மாடி.
2) பரணி - அடுப்பு இருக்கும் இடம், சமையல் ஸ்டவ் இடம்.
3)கிருத்திகை - புகை போக்கி இடம்.
4)ரோஹிணி - பாதித்திரம் இருக்கும் இடம்.
5) மிருகசிரிடம் - ஜன்னல் பகுதி கதவு.
6) திருவாதிரை - போர்ட்டிக்கோ பகுதி.
7)புனர்பூசம் - பல சரக்கு உள்ள இடம்.
8) பூசம் - ஹால்
9) ஆயில்யம் - குப்பை கொட்டும் இடம்.
10) மகம் - dinning table.
11) பூரம் - ரெஸ்ட் ரூம்.
12) உத்திரம் - தண்ணீர் தொட்டி.
13) அஸ்தம் - வாஷிபேசின் இடம்
14) சித்திரை - பீரோ
15) ஸ்வாதி - பெட் ரூம்
16) விசாகம் - sit அவுட் place
17) அனுஷம் - பாத்ரூம் place
18) கேட்டை - டாய்லெட் place.
19) மூலம் - கல்லா பெட்டி
20) பூராடம் - கூரை போர்டு.
21) உதிராட்டம் - வாஷிங் மெஷின்
22) திருவோணம் - பூஜை அறை
23) அவிட்டம் - மிக்ஸி இடம்
24) சதயம் - கிரைண்டர் இடம்
25) பூராட்டதி - நடைபாதை
26) உத்திராட்டத்தி - முழு சமையல் அறை.
27) ரேவதி - வாசல்படி செடிகள்…

__________________

1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் .

2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் .

3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் .

4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் .

5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் .

6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் .

7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் .அறுவை சிகிச்சை செய்வதற்கும் ,டாக்டரை அணுகி வைத்தியம் செய்வதற்கும் இந்த விதி பொருந்தும் .

8,மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தால் கைராசிக்காரன் என்ற பெயரை எளிதாகப் பெற்றுவிடலாம் .

9, மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி அர்ச்சனை செய்தால் படிப்பறிவு அதிகமாக வளரும் .தேர்வுகளில் எளிதாக வெற்றி கிடைக்கும் .

10, மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம் ஆகும் .இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மாலை கட்டி விநாயகரை வணங்கிவிட்டு மேற்கொள்ளும் பயணம் யாவும் வெற்றியை தரும்
____________________

காண்பதெல்லாம் ஜோதிடம்:

     முகூர்த்தங்களுக்கு யோகங்கள் மட்டுமே முக்கிய மானதல்ல சித்த மரண அமிர்த யோகம் என்பது முகூர்த்தத்தில் ஒரு பகுதியே மூகூர்த்தங்களில்சித்த அமிர்த யோகம் அமைவதும் மரணயோகம் அமையாது இருப்பதும் சிறப்பு இருந்தாலும் கூட இவற்றிற்கு சில விதிவிலக்கு உள்ளன காலை மூன்றே முக்கால் நாழிகைக்குள் அமைந்தால் மட்டும் இவை பயன் தருபவை அல்லது பாதிப்பை தருபவை அதற்கு மேலாக மரணயோகம் பாதிப்பை தருவதில்லை அதுபோன்று தத்தயோகம் மரணயோகம் போன்ற யோகங்கள் ஒன்பது நாழிகைக்கு மேல் பலன் தருவதில்லை -எனவே பஞ்சாங்கங்களில் இன்று முழுதும் மரணயோகம் என்று குறித்திருப்பதை எண்ணி அச்சப்படத் தேவையில்லை ஆனால் அதே வேளை சாஸ்திரங்கள் முகூர்த்த சாஸ்திரங்கள் தீய காலங்கள் என எனவரையறை செய்துள்ள நாட்களில் இன்றைய நாட்காட்டி களில் முகூர்த்தம் அமைத்திருப்பதை காண முடியுது அத்தகைய நாட்களில் முகூர்த்தம் வைப்பது என்பது பல விதமான தீமை தருவதாகும். எடுத்துக்காட்டாக லாடம் வைத்திருதம் என்னும் தோஷங்கள் அமைந்த நாட்களில் நாம் முகூர்த்தம் அமைத்தால் பதவி இழப்பு பண இழப்பு அது போன்று தவறி விழுதல்போன்ற கெடுதியான பலன்கள் நடக்கும் இது அனுபவ ரீதியாக சரியாக உள்ளது அதை வேளையில் இவ்விதம் பலவிதமான தீமைகளை தரும் காலங்களில் நாட்காட்டிகளில் முகூர்த்தம் அமைக்கப்பட்டுள்ளனயோகம் என்பது மட்டும் முகூர்த்தம் அல்ல அதே வேளை அதிகாலையில் நாம் முகூர்த்தம் அமைக்கும் போது மரணயோகம் இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியம் ஆகும் மரணயோகத்தைப் பற்றி இவ்வளவு பிரச்சாரம் செய்த நாட்காட்டிகள் தத்த யோகநாட்களில் முகூர்த்தம் அமைத்து பலவித துன்பங்கள் அடைய காரணமாக அமைகின்றன 

புதன்கிழமை த்விதியை திதிமற்றும் 

செவ்வாய்.. பஞ்சமி
வியாழன்...ஷஷ்டி
வெள்ளி... அஷ்டமி
சனி...நவமி
திங்கள். ஏகாதசி

ஞாயிறு.... துவாதசி

இணைந்து வரும் நாள்தத்த யோகம் என சாஸ்திரம் கூறுகின்றதுஇந்த நாட்களில் அதிகாலையில் முகூர்த்தம் அமைத்தால் தீ விபத்தும் தீராத துன்பமும் ஏற்படும் ஆனால் இந்த நாட்களில் நாட்காட்டி களில் முகூர்த்தம் அமைத்திருப்பது காண முடிகிறதுஎனவே நாட்காட்டிகள் முகூர்த்தம் என்பது இறுதியானது அன்று ஒரு சிறந்த ஜோதிடர் மூலமாகவே மூகூர்த்த நாட்கள் குறிக்கப்பட வேண்டும்
________________

எந்த கிரகம் வக்ரமாகி உள்ள தோ அந்த காரக உறவுகளில் விட்டு கொடுத்து.. அனுசரித்து செல்வது நல்லது.. 

வக்ரம் என்றாலே தாமத பலன் என்று பொருள்.. அல்லது கிடைத்தும் பயனில்லை.. திருப்தியில்லை என்பதாகும்..

உதாரணமாக.. குரு வக்ரம் எனில்.. குழந்தை களிடம்.. 

சுக்கிரன் வக்ரம் எனில் மனைவியிடம்

சனி வக்ரம் எனில்.. சித்தப்பா.. மற்றும் அண்ணன்.. 

செவ்வாய் வக்ரம் எனில்.. இளைய சகோதரம்.. பெண் ஜாதகத்தில் எனில் கணவனிடம்

புதன் வக்ரம் எனில்.. தாய் மாமனிடம்..

இவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள்.. ஈகோ வேண்டாம்.. அன்பு செலுத்துங்கள்..

________________


காலன்... ராகு

மகா காலன்.. சூரியன்+ராகு

காலம்... சூரியன்

நேரம்... சூரியன்

நாள்... சந்திரன்

பூமி... கேது

பொறுமை... கேது

நிசப்தம்.. கேது

சப்தம்... புதன்

ஒளி... சூரியன்

மைண்ட் பவர்.. சந்திரன்+புதன்

வெகுளி... சந்திரன்+புதன்

கள்ளன்.. புதன்+ராகு+சனி

ஆழ்மன தியானம்.. சூரியன்+கேது

ஒற்றுமை.. சூரியன்+குரு

வேற்றுமை.. சனி+சூரியன்

உயர்குலம்.. குரு+சூரியன்

தாழ்ந்த குலம்.. சனி

உயர்வில் தாழ்வு.. குரு+சனி

தாழ்வில் உயர்வு.. சனி+குரு

ஒற்றுமையில் வேற்றுமை
குரு+சனி+ராகு

நல்லவன்... சூரியன்

மாண்புமிக்கவன்.. சூரியன்

வல்லவன்.. செவ்வாய்

வித்தையில் சிறந்தவன்.. புதன்+செவ்வாய்

மனதை கவருபவன்
சுக்கிரன்+சந்திரன்

பிறர் உதவியை நாடுபவன்
சனி+குரு+கேது

_______________

யோகி அவயோகி 

நாம் ஒரு யோகத்தில் பிறத்திருப்போம் அந்த யோகத்திற்கு ஒரு யோகியும் ஒரு அவயோகியும் இருப்பார்கள் அவர்களின் நட்சத்திரங்கள் யோக நட்சத்திரம் என்றும் அவ யோக நட்சத்திரம் என்றும் கூறப்படும் 

உங்கள் பிறப்பு ஜாதகத்தில் அந்த யோக நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்கள் நன்மையும் அவயோக நட்சத்திர சாரம் பெற்ற கிரகங்கள் தீமையும் செய்யும் 

உதாரணமாக பிரீதி யோகத்தில் நீங்கள் பிறந்திருந்தால் ஆயில்யம் யோக நட்சத்திரம் புதன் யோகி மேலும் புதனின் மற்ற நட்சத்திரங்களான கேட்டை ரேவதியும் யோகம் செய்யும் அடுத்து அவிட்டம் தீமை செய்யும் செவ்வாய் அவயோகி மேலும் செவ்வாயின் ஏனைய நட்சத்திரங்களான மிருகசீரிஷம் சித்திரையும் தீமை செய்யும் 

இப்போ ஒரு சந்தேகம் வரும் ஒரு வேளை யோகி கிரகம் அவ யோக நட்சத்திர சாரம் பெற்றால் என்ன செய்வார் என்று கண்டிப்பாக நல்லது செய்ய மாட்டார் 

அடுத்த கேள்வி யோகியின் நட்சத்திரத்தில் 6 8 12 ம் அதிபதிகள் நின்றால் என்ன செய்வார்கள் என்றால் 6 8 12 க்கு உண்டான வேலையை சரியாக செய்வார்கள் அதில் மாற்றமில்லை ஆனால் கெட்ட காராகதுவங்களை விட நல்ல காராகதுவங்களை தூக்கலாக செய்வார்கள் 

உதாரணமாக 6 ம் அதிபதி யோகின் சாரத்தில் நின்றால் நல்ல வேலை வெளியூர் அல்லது வெளிமநிலத்தில் வேலை அரசியல் சுப நகர்வு உருப்படியான கடன் என்று இதுவே அவ யோகியின் நட்சத்திர சாரம் பெற்றிருந்தால் கடன் விபத்து எதிர்கள் விரோதம் என்று வலுவாக செய்வார் 

8 ம் அதிபதி யோகியின் சாரத்தில் நின்றால் திடீர் அதிஷ்டம் நோய் சரியாகுதல் வழக்கில் வெற்றி போன்றவை ஏற்படும் இதுவே அவயோகி நட்சத்திர சாரம் பெற்றால் வம்பு வழக்கு எதிலும் தோல்வி நோய் அளவில்லாத கடன் என்று ஒரு வழி செய்துவிடுவார்

12 க்கு அதிபதி யோகின் சாரத்தில் நின்றால் நல்ல படுக்கை நிம்மதியான உறக்கம் அயன சயன போகத்திற்கு பஞ்சமின்மை வெளிநாட்டு வாழ்க்கை சுற்றுலா என்று இருக்கும் இதுவே அவயோகி சாரம் பெற்றால் விரயம் நிம்மதி இல்லாத வாழ்க்கை ஏற்படும் 

___________________

27 நட்சத்திர அன்பர்கள் உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள் :- 

1. அஸ்வினி - முந்திரி.
2. பரணி - நெல்லி.
3. கிருத்திகை. - பேரீச்சை.
4. ரோகிணி - பால்கோவா.
5. மிருகசீரிடம் - தேங்காய் சாதம்.
6. திருவாதிரை - வாழைப்பழம்.
7. புனர்பூசம் - கரும்பு ஜீஸ்.
8. பூசம் - ஆப்பிள்.
9. ஆயில்யம் - முருங்கை காய், கீரை.
10. மகம். - மாங்காய்.
11. பூரம் - எலுமிச்சை சாதம்.
12. உத்திரம் - மாதுளை.
13. அஸ்தம் - ஆரஞ்சு.
14. சித்திரை - பப்பாளி, சாத்துக்குடி.
15. சுவாதி. - உலர் திராட்சை.
16. விசாகம். - கற்கண்டு, சப்போட்டா
17. அனுசம் - பனை நுங்கு
18. கேட்டை - வல்லாரை, செர்ரி.
19. மூலம். - கொய்யா.
20. பூராடம் - காளான், வெள்ளரிகாய்
21. உத்திராடம். - பலாப்பழம்.
22. திருவோணம் - சீதாப்பழம், கேசரி
23. அவிட்டம். - தக்காளி சாதம்.
24. சதயம். - பன்னீர் திராட்சை.
25. பூரட்டாதி. - மாம்பழம்.
26. உத்திரட்டாதி - அன்னாசி பழம்.
27. ரேவதி - இலந்தை, கொத்தமல்லி சாதம்
_______________________

NKV SYSTEM

நெல்லை வசந்தன் ஆய்வின் ஒரு சில துளிகள்:-

டபுள்பீன்ஸ் .........
சந்திரன் வியாழன் சனி

 காராமணி.............சூரியன் புதன் சனி

பட்டாணி..............செவ்வாய் சனி குரு

ஏலக்காய்..............சூரியன் குரு

வெந்தயம்...............சந்திரன் புதன் சனி

பெருங்காயம்...குரு செவ்வாய்

நெல்லை வசந்தன் ஆய்வின் ஒரு சில துளிகள்

சமையல் மஞ்சள்...குரு
கல்உப்பு...சந்திரன்
உப்பு...சந்திரன்
துவரம் பருப்பு....செவ்வாய்
கடலபருப்பு....குரு
பச்சபருப்பு....புதன்
கடுகு....புதன் சனி—-------------------
__________________

NKV SYSTEM

நெல்லை வசந்தன் ஆய்வின் ஒரு சில துளிகள்
Hair Oil.........சூரியன் சனி
Talcum Power...சுக்கிரன் புதன்
தீப்பெட்டி..............
செவ்வாய்
கற்பூரம்...சூரியன் செவ்வாய்
Jam...சந்திரன் சனிகுரு
நெய்.....சுக்கிரன்
ஊறுகாய்...சனி
இஞ்சி....சூரியன்
மிளகாய் வத்தல்......செவ்வாய்
அவல்...சந்திரன்
பூண்டு....குரு_
________________


27 நாமயோகங்கள்:-

1.விஷ்கம்பம் - பூசம்
2. ப்ரீத்தி - ஆயில்யம்
3.ஆயுஷ்மான் - மகம்
4.சௌபாக்கியம் - பூரம்
5.சோபனம் - உத்திரம்
6.அதிகண்டம் - அஸ்தம்
7.சுகர்மம் - சித்திரை
8.திருதி - சுவாதி
9.சூலம் - விசாகம்
10.கண்டம் - அனுஷம்
11.விருத்தி - கேட்டை
12.துருவம் - மூலம்
13.வியாகாதம் - பூராடம்
14.ஹர்சனம் - உத்திராடம்
15.வஜ்ஜிரம் - திருவோணம்
16.சித்தி - அவிட்டம்
17.வியதிபாதம் - சத்யம்
18.வரியான் - பூரட்டாதி
19.பரிகம் - உத்திரட்டாதி
20.சிவம் - ரேவதி
21. சித்தம் - அசுபதி
22.சாத்யம் - பரணி
23.சுபம் - கார்த்திகை
24.சுப்பிரம் - ரோகிணி
25.பிராம்யம் - மிருகசீரிஷம்
26.ஐந்திரம் என்ற மாஹேந்திரம் - திருவாதிரை
27.வைத்திருதி - புனர்பூசம்
அந்தந்த நாமயோகமும் அந்தந்த நட்சத்திரத்தில் உதயமாகும். அந்த நாமயோகத்திற்கு அந்த நட்சத்திர அதிபதிகளே அதிபதிகள். 
இந்த நாமயோகங்களுக்கு அவர்களே யோகாதிபதிகள். 
இந்த யோக நட்சத்திரத்தில் இருந்து 15 வது நட்சத்திரம் அவயோகி நட்சத்திரம்.
ஒரு ஜாதகருக்கு யோகி என்பவர் சுபராகவும், அவயோகி என்பவர் பாவராகவும் இருப்பார்கள்.
யோகி என்பவர் தாய்க்கு நிகராக ஜாதகரை காப்பவர்.
அவயோகி என்பவர் ஒரு பலனை கொடுத்து பின் கெடுப்பவர்.(அவர் தசா புத்தியில் கொடுத்து, தசா புத்தி முடியும் பொழுது கொடுத்ததையும் கெடுத்து, இருப்பதையும் கெடுத்து விடுவார்)
யோகி அமைவது நம் முன்னோர்கள் செய்த புண்ணியம்.
அவயோகி என்பது முன்னோர் செய்த பாவங்கள்.

______________________


கீழே 27 யோகங்களின் பொதுவான பலன்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜாதக அமைப்புப்படி கிரகங்களின் நிலைகளின்படி குணாதிசியங்கள் மாறக்கூடும் என்ற போதிலும் இதில் உள்ள அடிப்படை ஒன்றிரண்டு அவர்களிடம் இருக்கவே செய்யும்.

நட்சத்திரங்களின், திதிகளின், குணாதிசயங்களோடு, யோகங்களில் பிறந்த பலனும் இணைந்து காணக் கூடும்.

1. விஷ்கம்பம் (கம்பம் யோகம்):-அசுவினி

இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். மற்ற வர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டி யே உணரும் தீர்க்க தரிசனம் இருக்கும். மாந்திரீக விஷய ங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும் கட்டுப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை மதி ப்பார்கள். 

2. ப்ரீதி (பரிசம் யோகம்):-பரணி

இது சுபமான யோகமாகும். இதில் பிறப்பவர்கள் இனிய சொல் பேசுபவராகவும், நல்ல செயல்களையும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோர்கள், ஞானிகள், மகான்கள், குரு ஆகி யோர்களை மதிப்பவராகவும் அவர்களை வணங்குபவராகவு ம் இருப்பார்கள். உறுதியான மனமும், செயல் பாட்டுத் திறமையும் இருக்கும். 

3. ஆயுஷ்மான் (ஆயுள் யோகம்):- கார்த்திகை

இது சுப யோகமாகும். பெரியவர்கள், மகான்கள், ஞானி யோகிகள் “ஆயுஷ்மான் பவ” என்று இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான் பவ” என்றால் நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற் கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதி யாக வாழ்வார்கள். 

4. செளபாக்யம் (செள யோகம்):- ரோகிணி

பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன்றாகவே இருக்கும். இதுவும் சுபமான யோகம் தான். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான மனம் உடைய செயல் திறன் மிக்கவர்களாகவும், நல்ல பக்திமான்களாகவும், ஈவு இரக்கம் உடைய தர்ம வான்களாக இருப்பார்கள். 

5. சோபனம் ( அ(ச)யன யோகம்):- மிருகசிரீடம்

சுப யோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திரு மணமாகி முதல் இரவுக்கு “சோபனம்” என்று குறிப்பிடுவதுண்டு இதில் பிறந்தவர்கள் சுகமான இனிமையான வாழ்க்கையை விரும்புவார்கள்,நிபுணர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் குறிக்கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான். 

6. அதி கண்டம் (அதி யோகம்):-திருவாதிரை

பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும் அதிகண் டம். எனவே அடிக்கடி விபத்து கண்டங்கள் ஏற்படும். துன்பம் தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்கு தொல்லைகளையும், பிரச்சினைகளையும், துன்பங்களையும் ஏற்படுத்துவார்கள். பிறரை துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான் பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்க ளாக இருப்பதுண்டு. 

7. சுகர்மம் (நற்செயல் யோகம்):- புனர்பூசம்

இது நல்லயோகம். இதில் பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும் புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள். பற்று, பாசம், ஈகை உடையவர் கள். நல்ல பக்திமான்களாகவும், தெய்வ காரியங்கள் செய்வதில், தீர்த்த யாத்திரை மேற்கொள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார் கள்.

8. திருதி (திரு யோகம்):- பூசம்

இது அசுப யோகம் தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று கூறுகின்றார்கள். இதில் பிறந்தவர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை உடையவர்கள். எடுத்த காரியத்தை விடாப்பிடியாக முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். கொடுத்தவாக்கை காப்பாற்றக் கூடியவர்கள். நல்ல தைரியமும் உடையவர்கள். 

9. சூலம் (சூல யோகம்):- ஆயில்யம்

இது அசுபமான யோகம். முன்கோபம், முரட்டுத்தனம், அலட்சியம், சோம்பல், எடுத்தெரிந்து பேசும் குணம் இருக்கும். எவரையும் மதிக்க மாட் டார்கள். எவருடனும் ஒத்து போகாமல் முரண்டு பிடிப்பவர்கள். மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பதுடன் வீண்வம்பு, சண்டை பிடிக்கவும் செய்வதுண்டு. 

10. கண்டம் (தடை யோகம்):-மகம்

இதுவும் அசுபமான யோகம் தான். கண்டம் என்ற பெயரைப் போல இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண்டங்களையும், துன்பங்களையும், உடல் நோய்த் துன்பங்களையும் சந்திக்க வேண்டி வரும். நல்ல எண்ணங்களும் இருக்காது. செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. 

11. விருத்தி (வளர்ச்சி யோகம்):- பூரம்

செல்வாக்குடையவர்கள். நல்ல அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர நாட்ட மும், புலமையும் உடையவர்களாக இருப்பதுடன், தெய்வ பக்தியும், நற் பண்புகளும் உள்ளவர்கள். ஈகை தரும குணம் உடையவர்களாகவும், தெய்வ காரியங்கள் திருப்பணிகள் செய்பவர்களாக இருப்பார்கள். 

12. துருவம் ( கேந்திர யோகம்):- உத்திரம்

இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாமரை இலைத் தண்ணீர்போல பட்டும், படாமலும் இருப்பார்கள். கபடமான எண்ணம் உடையவர்கள். சமயம் கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். 

13. வ்யாகதம் (வ்யாகாத பாம்பு யோகம்):-ஹஸ்தம்

இதுவும் அசுபமான யோகம் தான். முன்கோபமும், முரட்டுத்தனமும் உடைய இவர்கள் சமுகத் தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண்ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம் உள்ளவர்களே எனலாம். மன உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்களையும், செயல்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். 

14. ஹர்ஷணம் (ஹர் யோகம்):-சித்திரை

இது சுபமான யோகமாகும். செல்வாக்கும் மற்றும் சொல்வாக்கும் உடை யவர்கள். இனிமையான மென்மையான சுபாவம் கொண்டவர்கள். பின்னால் வருவதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப்பதுண்டு. சுகமான ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். 

15. வஜ்ரம் (உறுதி நிலை யோகம்):-சுவாதி

இது சுபமான யோகமாகும். இதை சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது சுப மான யோகம் தான். இதில் பிறந்தவ ர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள். எதையும் சாதிப்பவர்கள். துணிச்சலும், தைரியமும் உள்ள இவர்களிடம் கனிவும் இருக்கும். 

16. சித்தி (அடைதல் யோகம்):- விசாகம்

சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாச னா சக்தியுடையவர்கள். தியானம்,யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடையவர்கள். தீர்த்த யாத்திரைகள் மேற் கொள்வதில் விருப்பம் அதிகம். இமாலய யாத்திரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற் கொள்வதுண்டு செல்வமும், செல்வாக்கும் உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும் மனப்பான்மையு டையவர்கள் எனலாம்.

17. வியதீபாதம் (விய யோகம்):- அனுஷம்

இது அசுபமான யோகமாகும். இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். துன்பங்களை யும், துயரங்களையும், கஷ்டங்களை யும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை போராட்டமாக இருக்கும். சிந்தித்து, முன்யே

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-