வாகனம் வாங்க உகந்த நாட்கள்:-





இந்த பதிவில் வாகனம் வாங்க நல்ல நாளை தேர்ந்தெடுப்பது எப்படி என பார்க்கலாம், பொதுவாக நமது ஜாதகத்தில் பலம் இழந்த கிரகம் மற்றும் வீடுகள் தொடர்பான பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும், நல்ல முகூர்த்தத்தை தேர்வு செய்வதன் மூலம் பலமிழந்த கிரகம் மற்றும் வீடுகளின் மூலமாகவும் மகிழ்ச்சியை உண்டாக்கலாம் இதுவே முகூர்த்தத்தின் அடிப்படை நோக்கமாகும்

முகூர்த்த சாஸ்திரம் கூறும் நட்சத்திரத்தின் வகைகள் 

லகு நட்சத்திரம் 
உக்கிர நட்சத்திரம் 
இயல்பான நட்சத்திரம் நிலையான நட்சத்திரம் மேன்மையான நட்சத்திரம் 
சர நட்சத்திரம் 
கூர்மையான நட்சத்திரம்

இதில் வாகனம் வாங்க லகு நட்சத்திரங்கள் அஸ்வினி பூசம் அஸ்தம்
இயல்பான நட்சத்திரங்கள் மிருகசீரிடம் சித்திரை அனுஷம் ரேவதி 
சர நட்சத்திரங்கள் புனர்பூசம் சுவாதி திருவோணம் அவிட்டம் சதயம் 

இந்த நட்சத்திர நாட்களில் வாகனம் வாங்குவது நல்லது

கிழமைகள் திங்கள் புதன் வியாழன் வெள்ளி நல்லது 

தவிர்க்க வேண்டிய கிழமை செவ்வாய்

தாரா பலன் வண்டி வாங்கும் தினத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் நல்ல தாராபலன் உள்ள நாளில் வாங்குவது நல்லது, அதாவது உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 2-4-6-8-9-11-13-15-17-18-20-22-24-6-27 நட்சத்திர நாள்களில் வாங்குவது நல்லது

வாகனம் வாங்கும் நாளில் உங்கள் ராசிக்கு 8 வது ராசியில் சந்திரன் இல்லாமல் இருப்பது நல்லது, சந்திரன் ஜோதிடத்தில் மனதை குறிக்கும் கிரகம் நமது சந்திர ராசிக்கு 8 வது ராசியில் இருக்கும் போது செய்யும் செயல் நமது மனதிற்கு மகிழ்ச்சி தருவதில்லை சந்திரன் 8 வது ராசியில் இருக்கும்போது வாகனம் வாங்கினால் வண்டி சம்பந்தப்பட்ட ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும் 

அடுத்தது லக்னம் வாகனம் வாங்கும் போது உள்ள லக்னம் உங்கள் ஜென்ம லக்னத்திற்கு 8 ஆம் இடமாக வராமல் இருப்பது நல்லது 8ஆம் லக்னமாக வரும்போது செய்யப்படும் எந்த காரியங்களும் ஜாதகருக்கு நன்மை தருவதில்லை அல்லது ஜாதகருடன் நிலைத்து இருப்பதில்லை,உதாரணமாக வாகனம் வாங்கினால் உங்கள் வாகனத்தை உங்களைத் தவிர உங்கள் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் தான் அதிகமாக பயன்படுத்துவார்கள்

___________________

யோகி அவயோகி பகுதி 3  
  யோகி நட்சத்திரத்திற்கு ஆறாவது நட்சத்திர அதிபதியே அவயோகி. 
1. சனி யோகியென்றால் சந்திரன் அவயோகி.
2.சூரியன் யோகியென்றால் சனி அவயோகி.
3. சந்திரன் யோகியென்றால் புதன் அவயோகி.
4. புதன் யோகியென்றால் செவ்வாய் அவயோகி.
5. குரு யோகியென்றால் சூரியன் அவயோகி.
6. சுக்கிரன் யோகியென்றால் குரு அவயோகி.
7. ராகு யோகியென்றால் சுக்கிரன் அவயோகி.
8. கேது யோகியென்றால் ராகு அவயோகி.
9. செவ்வாய் யோகியென்றால் கேது அவயோகி.
இப்போது நீங்கள் உங்களது ஜாதகத்தை கணித்து என்ன யோகம் மற்றும் திதி மற்றும் கரணத்தில் பிறந்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடிக்க முயல்வீர்கள். அந்த யோகத்திற்கு யார் யோகி யார் அவயோகி என்று நான் கீழே இணைத்துள்ள அட்டவணை மூலம் சுலபமாக கண்டுபிடித்துவிடுவீர்கள்.
இனி யோகி அவயோகியின் முக்கியத்துவத்தை பார்ப்போம் .
எந்த நிலையிலும் யோகியும், யோகி நட்சத்திரத்திலும் அமர்ந்த கிரகங்களும் தனது தசா புத்தி காலங்களில் யோகத்தையே வழங்குவார்கள்.
எந்த நிலையிலும் அவயோகியும் ,அவயோகி நட்சத்திர சாரங்களில் அமர்ந்த கிரகங்களும் தனது தசாபுத்தி காலங்களில் கெடுதலையும், வீழ்ச்சியையும், தீங்கையும்தான் தருவார்கள்.
உங்கள் ஜாதகங்களில் இதுவரை நடந்த தசாபுத்தி காலங்களில் இவர்களது காலங்களில் என்ன நடந்த்து என்று ஆராய்ந்து பாருங்கள். தசா வராவிட்டாலும் இவர்களது தொடர்புடைய புத்தி காலங்களை ஆராய்ந்து பாருங்கள்.
_______________

விசிறி சாமியாரும் புன்னை மரமும் 
=============================

திருவண்ணாமலை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சித்தர்கள் தான், நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர் "சித்தர் யோகிராம் சுரத்குமார்" எனும் விசிறி சாமியார். இவரது ஜென்ம நட்சத்திரம் ஸ்வாதி. 

விசிறி சாமியார் அவர்கள் திருவண்ணாமலை வந்த சமயத்தில் அதிகம் புன்னைமரத்தடியில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். 

ஜோதிடத்தில் புன்னைமரம் என்பது ஆயில்யம் நட்சத்திரத்திற்கு உரிய மரம் ஆகும். இது மருத்துவ தன்மை நிறைந்தது என்றும். ஆயில்யம் என்ற வார்த்தையின் அர்த்தம் தழுவிக்கொள்ளுதல் என்றே அதார்த்தப்படும். ஆயில்யத்தின் வடிவம் நாகம். 

விசிறி சாமியாரின் ஜென்ம நட்சத்திரம் ஸ்வாதியில் இருந்து எண்ணிவர கிடைக்கும் 22 வது நட்சத்திரம் (யா,ராவது வைநாசிக நட்சத்திரம் சொன்னிங்கன்னா செம்ம கோவம் வரும்) ஆயில்யம் ஆகும். இதற்கு சேம தாரை அல்லது காரிய சித்தி தரும் நட்சத்திரம் என்று பெயர். ஆகவே ஸ்வாதியில் பிறந்த யோகி ராம் சுரத்குமார் அவர்கள் புன்னைமரத்தடியில் மகிழ்வுடன் இறைவன் அமர பணிந்தார். அந்த புன்னைமரமே யோகிராம் சுரத்குமார் அவர்களின் அடையாளம் ஆனது. அந்த மரத்தின் அடியில் அமர்ந்து ஆசி பெற்ற பக்தர் அனைவரும் உடல் உபாதைகள் மற்றும் மனசோர்வு நீங்கி, யோகிராம் சுரத்குமார் அவர்களை இறைவனாக கண்டனர். 

உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணிவரும் 4 13 & 22 நட்சத்திர விருச்சம் நீர் ஊற்றி வளர்க்க, உங்கள் வாழ்க்கையில் எடுத்த காரியம் சித்தி தரும்.
_________________

கல்விகாரகன் புதன் எனும் படிப்பு (என்ன படிக்க வைக்கலாம்) :-
********************************* 

ஜோதிடத்தில் எந்த ஒரு விசயத்தையும் ஆராய வேண்டுமெனில் கிரகம், பாவம், பாவாதிபத்யம் மிகவும் முக்கியம். 

கல்விக்கு காரக கிரகம் புதன் ஆகும். காரணம் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதனாகும். இதனால் அதிக ஒளி பெறுகிறது. வெளிச்சத்தால் தான் எதையும் தெளிவாக பார்க்க முடியும். அதேபோல் ஒரு விசயத்தை பற்றி தெரிந்து கொள்ளும் போது நமக்கு தெளிவு பிறக்கும். இதன் அடிபடையில் தான் புதனை கல்விகாரகன் என்கிறோம். 

1). 2, 4,9,11 பாவங்கள் கல்வி பாவகம் ஆகும். அடிபடை கல்வி 2 ஆம் பாவகம் குறிக்கும். முதல் டிகிரி 4 ஆம் பாவகம் ஆகும். Mphil, doctorate 11 பாவகம் ஆகும். 

இதில் 5,9 சம்பந்த பட்டால் ஜாதகர் கல்வியால் புகழ் பெறுவார் தற்போது +2 வில் 600 க்கு 600 மதிபெண் பெற்ற மாணவியை போல 

2). பொதுவாக புதனுடன், 4 மிடம், நான்காம் அதிபதி, மற்றும் நடந்து கொண்டிருக்கும் தசா புத்தியையும் இணைத்து பார்த்தால் ஒருவர் என்ன கல்வி படித்தால் நன்றாக படிப்பார் என்பதையும் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். 

3). புதன் ஆட்சி, உச்சம் போன்ற ஸ்தான பலம் பெற்று 4 மிடம் அதன் அதிபதிக்கு குரு போன்ற சுப கிரகங்களின் தொடர்பு பெறும் போது சமுகத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ள டாக்டர், ஏரோ நாட்டிகல் இன்ஜினியர் போன்ற கல்வியை கற்பார். ஜாதகத்தை பார்த்தாலே பளிச்சின்னு ஒளி பொருந்தி இருக்கும். 

ஒருவர் என்ன கல்வி கற்பார் என்பதற்கு ஏரளமான ஜோதிட விதிகள் இருக்கிறது அவற்றுள் அனுபவத்தில் ஒத்துவரக்கூடிய சில முக்கிய ஜோதிட விதிகளை பார்போம்..,

4). (*)ஒரு ஜாதகத்தில் எந்த கிரகம் பளிச்சின்னு அதிக ஒளி பொருந்தி சுப கிரகங்களின் தொடர்புடன் இருக்கிறதோ அதற்கு முதல் உரிமையை கொடுக்கலாம். 

(*) 2,11 ஆம் அதிபதிகளின் நல்ல நிலையில் இருந்தால் அவர்களது படிப்பை தேர்ந்தெடுக்கலாம். 

(*) ஆட்சி, உச்சம் பெற்று லக்கினத்திற்கு இராசிக்கு ராஜ யோகாதிபதிகள் 2, 10 மிடத்தில் இருக்கும் கிரகங்களின் படிப்பை தேர்தெடுக்கலாம். 

(*). புதனுடன் இணைந்த பார்த்த கிரகத்தின் மூலம் ஒருவருக்கு என்ன கல்வி எளிதாக வரும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

(*) சில ஜாதங்களில் மேற் கூறிய மூன்று விதிகளும் பொருந்தாமல் நட்பு நிலையில் நல்ல பாவகத்தில் இருந்து 4 ஆம் வீட்டோடு தொடர்பு கொண்டிருக்கும் படிப்பை தேர்தெடுக்கலாம். 

(*) ஜாதகத்தில் நொந்து நுடுல்ஸ் ஆகி பாவ கிரகங்களின் பிடியில் இருக்கும் கிரகத்தின் படிப்பை தேர்தெடுக்காமல் இருப்பது நல்லது. 

கிரகங்களின் படிப்புகள்:-
****************************** 

(1). சூரியன் :-
*************
சூரியனும் அவருடைய வீடான சிம்மமும் வலுவாக இருந்தால் அரசு, அரசியல், பூர்வீக தொழில் , சொந்த தொழில் , மின்சாரம், தனியார் துறையாயின் Manager போன்றவை அமைகிறது. 

(2). சந்திரன்:-
***************
சைக்காலஜி, நீர் மேலாண்மை, மரைன் இன்ஜியரிங், மீன் வளத்துறை, உணவு பதபடுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி 

(3)புதன் :-
**********
கணிணி, கணிதம், அக்கவுண்ட்ஸ், பிஷிக்ஸ், பி காம், CA, மொழியியல், ஐடி துறை, சேர் மார்க்கெட், டிரான்ஸ்லேட்டர் 

(4). சுக்கிரன் :-
*****************
கலை துறை, இசை , பாட்டு, டெக்ஸ்டைல்ஸ், ஹோட்டல் மேனேஜ்மண்ட், செக்ஸாலஜி, நகை தயாரித்தல்

(5). செவ்வாய் :-
*******************
பயாலஜி,டாக்டர்,சிவில் இன்ஜினியரிங், ஆர்மி, போலிஸ், நர்ஸ், பி பார்ம், மெகானிக்கல் இன்ஜினியரிங், சமையல் சார்ந்த படிப்புகள் 

6) சனி:-
*********
ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், 
லேப் டெஸ்டிங், Blood test சார்ந்த படிப்பு, கெமிக்கல் இன்ஜினியரிங், லாயர், கெமிஸ்டிரி, டிசைனர், வெட்னரி சயின்ஸ்

(7). குரு :-
***********
டிச்சர், பேங்கில் வேலை செய்தல், புரோகிதம், நீதி துறை, அறநிலைய துறை 





______________

சித்திரை
பூரம்
திருவோணம்
மூலம்
திருவாதிரை
கார்த்திகை
ரேவதி

மேற்கண்ட நட்சத்திர நபர்கள் 

மேசம், மீனம், துலாம், கன்னி, விருச்சகம் லக்னத்தில் பிறந்திருந்தால், திருமண பொருத்ததில் ஜாதக பொருத்தம் பொறுமையாக பார்த்து அவசரப்படாமல் திருமணம் செய்யவும். இவர்கள் பெரும்பாலும் திருமணம் தாமதமோ அல்லது திருமண வாழக்கை சிக்கலோ சந்திப்பார்கள்.
_____________________

கரணங்களும் விலங்குகளும்..

1.பவ கரணம்- சிம்ம கரணம்
2.பாலவ கரணம்- புலி கரணம்
3.கௌலவ கரணம்- பன்றிக் கரணம்.
4.தைதுலை கரணம்- கழுதைக் கரணம்
5.கரசை கரணம்- யானைக் கரணம்.
6.வணிஜ்யை கரணம்- காளை கரணம்
7.பத்திரை/ விஷ்டி கரணம்- கோழி/ பாம்பு கரணம்
8.சகுனி கரணம்- ஆந்தை/ கூகை /காக்கை கரணம்.
9.சதுஷ்பாத கரணம்- நாய் கரணம்
10.நாகவ கரணம் - சர்ப்ப கரணம்...
11.கிம்ஸ்துக்கனம்- புழு கரணம்.

வளர் பிறை பிரதமை முதல் மறு அமாவாசை முடிய் 30 திதிகள் அமையும்.

இதில் முதல் ஏழு கரணங்களும் சர கரணங்கள் எனப்படும்...கடைசி நான்கு கரணங்களும் சதுர்தசி-அமாவாசை-பிரதமையை ஒட்டி மட்டுமே வரும்....இதனால் இவற்றை ஸ்திர கரணங்கள் என்பர்...

ஒவ்வொரு கரணத்திலும் பிறந்தவர்கள் அந்தந்த விலங்குகளின் தன்மைகள்..புத்தி..குணம் செயல்பாடுகளை ஏதேனும்ஒரு வகையில் பெற்று இருப்பர்..

"கரணம் காரியாத் ஸித்தி" என பஞ்சாங்க ச்ரவண பாடல் கூறுகிறது
இதன் பொருள்... கரணத்தை அனுசரித்தால் காரியம் சித்தியாகும்...என்பதே...

ஒவ்வொரு நாளிலும் எந்தெந்த கரணங்கள் செயல்பாட்டில் உள்ளதோ அந்த நேரத்தில் அந்த கரணத்துக்கான விலங்கின் தன்மையில் குணங்களில் புத்தி உணர்ச்சி பாவங்களில் காரியங்களை செய்ய வெற்றி தரும்...

ஒரு கரணம் நடக்கும் நேரத்தில்அந்த கரணத்தில் பிறந்தவரிடம் அந்த கரணத்தின்விலங்குக்கான தன்மை மேலோங்கி இருக்கும்..
அவர் அஅந்த காரியத்தை அதே தன்மையில் செய்யும் போது அவருக்கு வெற்றி கிடைக்கும்..

உதாரணமாக ..
பவ/சிம்ம கரணத்தில் பிறந்தவர்கள்...பவ கரண நேரத்தில்...உட்கார்ந்த இடத்திலிருந்து அதிகாரமாக வேலை வாங்கினால்..மேற்பார்வையிட்டால்அது வெற்றியாகும்.

பாலவ/புலி கரணத்தில் பிறந்தவர்கள்...தங்களுக்கான கரண நேரத்தில்ஒரு செயலை திட்டம் தீட்டி செய்தால் வெற்றி பெறுவார்கள்.

கௌலவ/பன்றி கரணத்தில் பிறந்தவர்கள்....ஆகாயத்தை நோக்காமல்....பூமியை தோண்டி வேலை செய்வது சிறப்பு..எந்த வேலையை செய்தாலும்..அதை மேலோட்டமாக செய்யாமல்..அதன்உட்கரு என்னவென தோண்டித் துருவி வேலை செய்தால் வெற்றி காணலாம்.

தைதுலை/கழுதை கரணத்தில் பிறந்தவர்கள்....அந்த நேரத்தில் தங்கள் உடல் உழைப்பை நன்றாக செய்தால் வெற்றி பெறுவார்கள்.

கரசை/யானை கரணத்தில் பிறந்தவர்கள் எப்போதும்அதிகாரத்தில் இருப்பவர்களின் உதவியுடன்..அனுசரணையுடன் ..வேலை செய்தால் வெற்றி பெறுவார்கள்.

வணிஜ்யை/காளை கரணத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த வசதியான இடங்களில் ..தமது உழைப்புக்கேற்ற ஊதியம் தருபவர்களிடம் வேலை செய்தால் வெற்றி கிட்டும்..

பத்திரை/விஷடி/கோழி/ பாம்பு கரணத்தில் பிறந்தவர்கள்...தங்களுக்கு கிடைக்கும்அதிகப்படியான விஷயங்களில் தங்களுக்குத் தேவையான விஷயங்களை பொறுக்கி எடுத்து செய்தால் வெற்றி பெறுவார்கள்.

சகுனி/காகம் கரணத்தில் பிறந்தவர்கள்...தங்கள் சுற்றுப்புறத்தில் கவனம் வைத்து வேலை செய்தால் வெற்றி பெறுவார்கள்.

சதுஷ்பாதம்/நாய் கரணத்தில் பிறந்தவர்கள் இந்தக் காரியத்தை செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை ஊகித்து விட்டு செயல்பட்டால் வெற்றி பெறுவார்கள்..

நாகவம்/சர்ப்ப கரணத்தில் பிறந்தவர்கள் ஒரு செயலின் பலாபலன் முழுமையும் நமக்கே உரியது என்ற சிந்தனையுடன் ஈடுபட்டு செய்தால் வெற்றி அடைவார்கள்...

வணிஜ்யை கரணத்தில் பிறந்தவர்கள் தைதுலை கரண வேலைகளை செய்யக்கூடாது
நாகவ கரணத்தில் பிறந்தவர்கள் பத்திரை கரணக்கார்கள் போல வேலை செய்யக்கூடாது
பவ கரணத்தில் பிறந்தவர்கள் பாலவ கரணம் போல வேலை செய்யக் கூடாது

இப்படி கரணங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்…
___________________________

சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-

சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்
செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால
விதானம் எனும் நூல் கூறுகிறது.

1.உல்கா:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா
எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.

2.பூகம்பம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்
எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.

3.உபாகம்:
சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று
நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.

4.குளிகன்(அ)மாந்தி:
ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய
லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.

5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:
முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்
முகூர்த்தத்திற்கு ஆகாது.

6.அசத் திருஷ்டம்:
முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான
சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு
பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.

7.அசத் ஆரூடம்:
பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.

8.அசத் விமுக்தம்:
பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்
அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்
வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த
தோஷம் பரிகாரமடைகிறது.

9.சித த்ருக்:
சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்
சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.

10.சந்தியா காலம்:
சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்
அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.இதில் சுப
முகூர்த்தம் வைக்கக்கூடாது.

11.கண்டாந்தம்:
அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்
ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்
கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.

12.உஷ்ணம்:
பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள
நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.
தொடரும்,,,,,,,

_____________________

சுப முகூர்த்தம் பகுதி 3 
     1.அம்ஹஸ்பதி:
ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி
எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்
செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
2.மலமாதம்:
ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த
மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.
ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.
3.சமசர்ப்பம்:
அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப
முகூர்த்தம் கூடாது.
4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:
சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்
குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.
5.குரு,சுக்கிர மௌட்யம்:

குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்
வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்
பெற்றிருந்தால் அது தோஷமில்லை)

6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:
குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்
முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்
கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்
அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.

A.ஞாயிறு-பரணி
திங்கள்-சித்திரை
செவ்வாய்-உத்திராடம்
புதன்-அவிட்டம்
வியாழன்-கேட்டை
வெள்ளி-பூராடம்
சனி-ரேவதி
B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை
திங்கள்-த்விதீயை&சித்திரை
செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி
புதன்-சப்தமி&பரணி
வியாழன்-த்ரயோதசி&அனுஷம்
வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்
சனி-அஷ்டமி&ரேவதி
C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்
திங்கள்-ஷஷ்டி&திருவோணம்
செவ்வாய்-சப்தமி&அஸ்வினி
புதன்-அஷ்டமி&அனுஷம்
வியாழன்-திருதீயை&பூசம்
வெள்ளி-நவமி&ரேவதி
சனி-ஏகாதசி&ரோகினி
D.ஞாயிறு-சதுர்த்தி
திங்கள்-சஷ்டி
செவ்வாய்-சப்தமி
புதன்-த்விதீயை
வியாழன்-அஷ்டமி
வெள்ளி-நவமி
சனி-சப்தமி .. .
_____________________

சுப முகூர்த்தம் பகுதி 2

A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)
B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)
C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)
D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)
E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)
F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)

13.விஷம்:
தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.

14.ஸ்திர கரணம்:
சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர
கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.

15.ரிக்தை:
சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே
 
16.அஷ்டமி:
அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.

17.லாடம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த
தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட
நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
18.ஏகார்க்களம்:
அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு
உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்
ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
19.வைதிருதம்:
சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்
ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
20.அஹிசிரசு:
வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
21.விஷ்டி:
வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்
18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,
தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்
18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்
முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.
தொடரும்,,,,,,
—---------------------------
4. நெருப்பு ராசிகள்

நவகிரகங்களுக்குரிய உலோகங்களை தானம் செய்யலாம்.

உதாரணம் - 
சூரியன் ..தாமிர பாத்திரம் 
சந்திரன்..ஈய பாத்திரம்
செவ்வாய்..செம்பு பாத்திரம்
புதன்..பித்தளை பாத்திரம்
குரு..தங்க ஆபரணம்
சுக்கிரன்..வெள்ளி பாத்திரம்
சனி..இரும்பு பாத்திரம்
இராகு..இரும்பு பாத்திரம்
கேது...வெண்கல பாத்திரம்

சில உதாரணங்களை பார்ப்போம்..

1. தசாநாதன் சூரியன் மேஷத்தில் நின்று தசை நடத்துகிறார்..

இது தாது ராசி..எனவே சூரியனுக்கு உரிய உலோக தாதுவை தானமாக தர வேண்டும்..அதாவது தாமிர பாத்திரம்..

2. குரு, துலாத்தில் நின்று தசை நடத்துகிறார்..

இது காற்று ராசி..எனவே குருவின் காரக கல்வி, ( tuition ) , உபதேசம் போன்றவை ஏழை குழந்தைகளுக்கு ( குழந்தைகள் .
குருவின் காரகத்துவம் ) தருகின்ற போது கிரக நிவர்த்தி என்பது நிச்சயம்..

3. சந்திரன் மீனத்தில் இருந்து தசை நடத்துகிறார்..

இது நீர் ராசி..சந்திரன் வெண்மை, சந்திரன் நீர், சந்திரன் அரிசி ..இவற்றை இணைத்து மீன்களுக்கு அரிசி சாதம் உணவாக போடலாம்...

மீனத்தில் செவ்வாய் என்றால் , மீனம்... நீர், மீனகளுக்கு துவரம் பருப்பு சாதம் போடலாம்..கட்டாயம் தோஷ நிவர்த்தி உண்டு..
_____________________
ஜோதிடத்தில் பரிகாரமுறைகளின் basic சூத்திரம்..

காலச்சக்கர தத்துவத்தின் அடிப்படையில் தோஷம் பெற்ற ஒரு கிரகத்தின் தசை or புக்தி நடைபெறும் போது அதிலிருந்து மீண்டு வருவதற்காக சில பரிகாரங்களை சொல்கிறோம்...

ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை கொண்டது..அதனால் தான் ஒவ்வொரு பரிகாரமும் சில வேறுபாடுகளை தம்முள் கொண்டே இருக்கின்றன.

Basic formula எனும் அடிப்படை சூத்திரம் தெரிந்து கொண்டால், நீங்களே நடக்கும் தசா புக்திக்கு ஏற்ற பரிகார முறைகளை தேர்வு செய்து கொள்ளலாம்..

எதோ ஒரு கிரகம் உங்கள் ஜாதகத்தில் தசை நடத்துகிறது..தசாநாதன் எந்த ராசி யில் நிற்கின்றார் என்பதை பொறுத்து அந்த ராசிக்கு ஏற்ற பொருட்களை தானம் செய்வதை தேர்வு செய்யுங்கள்.

1. தாது ராசிகள்

மேஷம், கடகம், துலாம்,மகரம்.

பூமியில் இயற்கையாக கிடைக்கின்ற தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள், மற்றும் இதர தாது பொருட்களை தானம் செய்ய , தோஷம் பெற்ற கிரகத்தின் தசை, சற்று விடுதலை தருகிறது..

உதாரணம்..

சூரியன்..மாணிக்க கல்
சந்திரன்.. முத்து
செவ்வாய்..பவளம்
புதன்..மரகதம்
குரு..புஷ்பராகம்
சுக்கிரன்..வைரம்
சனி..நீலக்கல்
இராகு..கோமேதகம்
கேது..வைடூரியம்

2. மூல ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்.

நாம் உயிர் வாழ இயற்கை தருகின்ற காய், கனி, மலர்கள், நவதானியங்கள் போன்றவற்றை தானம் செய்ய, தோஷம் பெற்ற கிரகத்தின் தசை ,சற்று விடுதலை தருகிறது.

உதாரணம்..

சூரியன்..கோதுமை
சந்திரன்..அரிசி
செவ்வாய்..துவரை
புதன்..பச்சை பயிறு
குரு..கொண்டை கடலை
சுக்கிரன்..வெண் மொச்சை
சனி.. எள்ளு
இராகு..கருப்பு உளுந்து
கேது..கொள்ளு

3. ஜீவ ராசிகள்

மிதுனம், கன்னி, தனுசு, மீனம்

பூமியில் உள்ள உயிரினங்களை தானம் செய்யும் யுக்தி. உதாரணமாக கோதானம் எருமை , காளை, சேவல், கோழி, குதிரை, ஆடு போன்ற ஜீவராசிகளை தானம் செய்ய, தோஷம் பெற்ற கிரகத்தின் தசை சற்று விடுதலை தருகிறது.

உதாரணம்..

சூரியன்.. காளை மாடு
சந்திரன்..வாத்து.
செவ்வாய்..வெள்ளாடு, குதிரை, சேவல்
புதன்..காடை, பசு
குரு..யானை, பசு
சுக்கிரன்..love birds, வெண் குதிரை
சனி..எருமை
இராகு... கருங்கோழி, எருமை
கேது..புறா , செம்மறி ஆடு

___________________
14. சதுர்தசி திதி

அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை
– வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
-தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!

-வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!

பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.
________________
5. பஞ்சமி திதி

அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-