சல்லியம் :-



வாஸ்து ஆசான் கட்டப் போகும் இடத்தை முதன் முதலில் பார்வையிடும் சமயம், அந்ந நேரத்திற்கு பிரசன்னம் ஜாதகம் கணிக்க வேண்டும்.

பிரசன்ன இலக்னத்திற்கு நாலாமிடம்:-

சூரியன், சனி நான்கில் ஒரே பாகையில் பயணிக்கிற போது, கண்டிப்பாக அங்கு சல்லியம் உண்டென ஊகிக்கலாம்.

நாலாம் அதிபதி எங்கேனும் ஓர் இராஸியில் அமர்ந்து, சூரியன் மற்றும் சனியுடன் சம்பந்தம் பெறின் சல்லியம் இருக்க வாய்ப்பு உண்டு.

சூரியன், சனியுடன் மாந்தி இணைந்து நான்காம் அதிபதியுடன் சம்பந்தம் பெறின், அங்கு (மனித எலும்புகள்..) சல்லியம் உறுதியாய்ப் புதையுண்டு கிடக்கும்.

சூரியனுடன் கேது இணைந்து, நான்காம் அதிபதி பலம் இழக்க, ஓர் ஆண் அந்நிலத்தில் சூனியம் செய்து வைத்து இருப்பான்.(பூனை மயிர், எலும்பு, மந்திரப் பாவைக் கலசம், தாயத்து--போன்ற..) பல வகை சல்லியம் இருக்கும்.

சந்திரனுடன் இராகு இணைந்து, நாலாம் அதிபதி கெட..மாந்தி சம்பந்தம் பெற்றிட, அந்நிலத்தில் தற்கொலை செய்யப் பட்டப் பெண்ணின் எலும்புகள்..சூனிய தோஷ சல்லியம் புதையுண்டு கிடக்கும்.

ஆருடம் பார்க்கும் சமயம்,செவ்வாய் நிலையை உற்று நோக்க வேண்டும்.
பிரசன்ன இலக்கினத்திற்கு செய்வாம் மறைவு, அஸ்தங்கம், கிரக யுத்தம், நீஸம்,
பகை சாரம் --போன்ற அவஸ்தைகள் பெறாமல் இருந்தாலே சல்லியம் வலிமை அற்றுப் போகும்.

பிரசன்ன இலக்கினத்திற்கு நாலாம் அதிபதி, செவ்வாய், நன்கு அமைந்து, வியாழனின் கருணைப் பார்வை கிடைக்கிற போது, சல்லியம் வீரியம் பலங்குறையும்.

அந்த இடம் கட்டடம் கட்ட ஏற்ற இடம் எனலாம். பின் வாஸ்து விதிகள் படி பலன் அறிந்து தீர்மானிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-