ஆண்களுக்கான ஜாதகத்தில்...குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதற்கான பலன்கள்:-

.
 
 1. ஜாதகர் ஆடம்பரத்தை விரும்புவார்
 2. இவரது கலைத் திறமைகள் இருக்கும்.
 3. ஜாதகர் எப்போதும் தன்னைச் சுற்றி பெண்கள் இருக்கவே விரும்புவார்.
 4. எந்த விதமான நோயிலிருந்தும் ஜாதகர் எளிதில் குணமாக கூடியவர்.
 5. இவருக்கு உடல் உழைப்பு பிடிக்காது.
 6. ஜாதகர் அதிக பாலுறவு எண்ணங்களைக் கொண்டிருப்பார்.
 7. சொந்த முயற்சியால் ஜாதகர் செல்வம் அடைவார்.( வீடு, வாகனம் போன்றவை)
 8. ஜாதகர் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் விருப்பம் கொண்டவர். 
 9. ஜாதகர் தனது மனைவியுடன் மிகவும் அன்பான உறவைக் கொண்டிருப்பார்.
 10. இந்த சேர்க்கை நல்ல திருமண வாழ்க்கையை உறுதி செய்கிறது.
 11. ஜாதகர் அடிக்கடி ஜாலி ட்ரிப் செய்ய விரும்புவார்.
 12. ஜாதகர் கவர்ச்சிகரமான வெளிப்புற தோற்றத்தைக் கொண்டிருப்பார். 
 13. ஜாதகர் அழகான சூழலில் வாழ்வார்.
 14. நறுமணப் பொருட்கள் மீது இவரது விருப்பம் இருக்கும்.
 15. ஜாதகர் ஆபரணங்களை விரும்புவார்.
 16. இவரது மூக்கு மற்றும் தொடை அழகானது.
 17. இவருக்கு சதைப்பற்றான குண்டான கன்னங்கள் உண்டு.
 18. இவருக்கு பூக்கள் மீது பிரியம்.
 19. இவரது இனிப்பு மற்றும் பழங்கள் மிகவும் பிடிக்கும்.
 20. இவருக்கு வீட்டின் உள் அலங்காரத்தில் நல்ல திறமை இருக்கும்.
 21. ஜாதகர் மனைவி பக்தி உள்ளவளாகவும், ஆன்மீக நாட்டமுள்ளவளாகவும், கண்ணியமானவளாகவும், முதிர்ச்சியுள்ளவளாகவும், பொறுப்புள்ளவளாகவும் இருப்பாள்.
 22. இவரது மனைவி குடும்ப பாரம்பரியத்தை கண்டிப்பாக பின்பற்றுவார்.
 23. வழிபாட்டுத் தலம் இவரது வீட்டின் சமையலறைக்குள் அமையும்.
 24. இவரது மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார் மற்றும் அரிதாகவே நோய்வாய்ப்படுவார்.
 25. ஜாதகர் சகோதரி அல்லது மனைவி அல்லது மகள் மூலம் நல்ல பெயரைப் பெறுவார். 
 26. ஆரோக்கியமான பெண் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு மிக அதிகம்.
 27. இவரது மனைவி உடல் பருமனால் அவதிப்படுவாள்.
 28. இவரது மனைவிக்கு நாணயங்கள் சேகரிப்பதில் விருப்பம். 
 29. இவரது மனைவி நல்ல வழிகாட்டி. மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் பழக்கம் உடையவர்.நல்ல ஆசிரியர்.
 30. இவரது மகள்களுடன் அதிக பற்றுதல் இருக்கும். 
 31. இவரது திருமணமான அதே வருடத்தில் குழந்தை பெற வாய்ப்பு உள்ளது.
 32. ஜாதகர் உடலுறவின் போது நல்ல அளவு விந்துவை வெளியேற்றுபவர்.. விந்துவின் தோற்றம் தயிர் போல் கெட்டியாக இருக்கும்.
 33. இவரது இயற்கையான உடல் வாசனை உள்ளது. 
 34. இவர்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவார்கள்.
 35. ஜாதகரின் மனைவி தனது ஆன்மீக வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும்.
 36. ஜாதகரின் வீடு கோவில் போல் இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு மன அமைதியை தரும். வீட்டிற்குள் நிறைய நேர்மறை அதிர்வு இருக்கும். 
 37. ஸ்தல வழிபாட்டின் உள்ளே பணம் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை வைத்திருக்கும் பழக்கம் பூர்வீகமாக இருக்கும்.
 38. இவரது மனைவி தனது கன்னங்களை இவரது மடியில் வைக்க விரும்புவார்.
 39. ஜாதகர் தன் மனைவியின் கன்னங்களில் மூக்கைத் தேய்க்க விரும்புவார்.
 40. இவரது மனைவி, இவரது காலடியில் அமர்ந்து பணிந்திருக்க விரும்புவார்.

Astro Purusoth என்பவரின் பதிவு இது..

நாமளும் கருத்து சொல்லோணுமில்லே..

ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் சேர்ந்து ஒரு வீட்டில் இருப்பது.

குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்ப்பது.

குரு தனது பார்வைகளால் சுக்கிரனை பார்ப்பது.

குரு சுக்கிர சேர்க்கை குருவின் வீடுகளான தனுசு- மீனம்..சுக்கிரனின் வீடுகளான ரிஷபம்- துலாத்தில் ஏற்படுவது.

குருவுக்கும் சுக்கிரனுக்கும் சுப ஆதிபத்யங்கள் இருப்பது

குருவின் நட்சத்திரங்களில் சுக்கிரனோ, சுக்கிரனின் நட்சத்திரங்களில் கருவி இருப்பது.

ஜாதகருக்கு நல்ல ஆதிபத்யங்களுடன் சுக்கிர திசை வாலிபத்திலும், குரு திசை மத்திய வயதிலும் வருவது.

இவையெல்லம் குரு சுக்கிர சேர்க்கை..சம்பந்தம்..யோகம் ஆகும்.

குரு: உடல் உழைப்பு பிடிக்காது, அதிக பாலுறவு எண்ணம், ஆசிரியர், தன்னை சுற்றி பெண்கள், மூக்கு,சொந்த முயற்சி,மகள் மேல் பாசம், விந்து பலம், தொடை பலம், ஆன்மீகம், கோவில், பூஜை அறை, விலையுயர்ந்த பொன் ஆபரணங்கள்

சுக்கிரன்: ஆடம்பரம், கலைத் திறமை, அலங்காரம், வெளிப்புற தோற்றக் கவர்ச்சி, ஜாலி டிரிப், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பெண் குழந்தை, சுக்கில பலம், கன்னங்கள், உடல் வாசனை

இது எப்படி இருக்கு
உங்க கருத்தை சொல்லுங்க.
@highlight Rajasekaran

""""""""""""""""""""""""""""""""""""”

 மாந்தி:- அதிக தோஷத்தையும் பாதிப்பையும் தரும் இடங்களான 
1, 2, 4, 5, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் #மாந்தி (அல்லது) #குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகர்கள், 

#குளிகை நேரத்தில் ஏதேனும் ராமர் கோவிலுக்கு சென்று #லட்சுமணன் வழிபாடு செய்ய பாதிப்பு கடுமை குறையும்,

3, 6, 10 ஆகிய இடத்தில் #மாந்தி (அல்லது) #குளிகன் இருக்கப் பிறந்த ஜாதகர்கள் சனிக்கிழமை அன்று (அல்லது) நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரம் நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காட்டு #வடாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட நன்மை ஏற்படும்.

11ஆம் இடத்தில் #மாந்தி (அல்லது) #குளிகன் நிற்க பிறந்த ஜாதகர்கள் திருநரையூர் சனிபகவான் குடும்ப சமேதராய் #மாந்தியுடன் இருக்கும் ஆலயம் சென்று வழிபட பல நல்ல பலன்கள் பொங்கும் பெருகும்.

ஜாதகர்
(பகலில் பிறந்தால் #குளிகன்)
(இரவில் பிறந்தால் #மாந்தி)

பள்கார் ஜோதிடர்

"""""""""""""""""""""""""""""""""""""

ஜோதிடப்பதிவு ....பணம் :-

நட்சத்திரம் பணம் என பதிவிட்டதும் பல நூறு மெசேஜ் inbox இல் தன் நட்சத்திரத்துக்கு எது பணம் தரும் என ... 

முதலில் ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்தால் தான் நட்சத்திர பலம் அதிகம் இருக்கும் .

இப்போது பொது பட்டியல் தருகிறேன். முயற்சி செய்து பாருங்க .

உங்கள் நட்சத்திரத்துக்கு அடுத்த நட்சத்திர காரகத்தை, அது தொடர்பான பாடல் நினைக்க பணம் வர வாய்ப்பு உண்டாகும் .அதாவது நீங்கள் அசுவினி என்றால் பரணி நட்சத்திர காரகத்துவத்தை நினைக்க வேண்டும் .
......
1) அசுவினி காரகம் : குதிரை , கிரீடம் , அனந்த பதுமனாப சுவாமி , அன்னாசிபழம் , கொள்ளு ..

2) பரணி காரகம் : கண் கட்டிக்கொண்டு தேவதை தராசில் பல கோடி பணம் வைத்த்து இருக்கும் சிலை, நெல்லிக்காய் ,இலையில் சாப்பாடு , எரியும் அடுப்பு. 

3)கிருத்திகை காரகம் : சிவன் + முருகன் சுவாமி மலை , மிளகு , ரோஜாப்பூ, அத்தி மரம். விபூதி, பழக்கூடை, கழுகு 

4) ரோகிணி : சக்கரம் , துளசி, ஒயின் ஷாப் , மூக்குத்தி .

5)மிருகசீரிடம்
மான் தலை, இரட்டையர் , துவரம்பருப்பு , ஊறுகாய் , செங்கல் , காதோரம் லோலாக்கு , பர்பி மிட்டாய்.

6) திருவாதிரை 
நடராஜர் , இலங்கை , வாழைப்பழம் , கோMantradhiருக்கும் மணி , வெறி கொண்ட நாய் , ஓநாய் , remote wireless access 

7) புனர்பூசம் 
ராமர் , கேப்டன் , wallet , மஞ்சள் , வளையல் , புடலங்காய். 

8)பூசம் 
தட்சிணாமூர்த்தி , அம்மி, மிக்சி, கருப்பும் பச்சையும் சேர்ந்த நிறம் , முழுக்கை சட்டை , பிள்ளையார் பட்டி 
படகு.

9) ஆயில்யம் 
உள்ளங்கை , மோதிரம் , ஆதிசேஷன் , நங்கூரம் , பம்பரம் , குழாய் , தண்ணீர் ஹோஸ் 

10) மகம் 
கலப்பை , கத்திரிக்கோல் , குகை, விநாயகர் பக்தி, கடப்பாரை கம்பி , மயில் 

11) பூரம் 
பெருச்சாலி , வெள்ளை சிங்கம் , வெள்ளை மனிதர்கள், perfume , பூ மாலை ( பூ மாலையே தோள் சேரவா பாடல்) ஆண்டாள் 

12) உத்திரம் 

தண்ணீர் தொட்டி , கண்மாய் , சீரகம் , கோதுமை, கேரளா , சங்கரர் , ஆம்புலன்சு

13 ) ஹஸ்தம் 
ஆஸ்பத்திரி, அரிவாள் , ஜீப் , மர வேலை ஆசாரி , கை , கைவிரல் , புறம்போக்கு நிலம் .

14) சித்திரை
தீபம் , வெற்றிலைப் பாக்கு , சந்தை, இசைக்கருவி நாதசுவரம் , திருமண தம்பதி.

15)சுவாதி எருமை, எருமைப்பால் , தையல் மெஷின் , பருத்தி செடி , முத்து சிப்பி, தண்ணீர் மோட்டார் , விஷ்ணு பாதம். 

16) விசாகம் 
விமானம் , கரண்டி , spoon , காவடி , வீரன் , வாசல் .வீர வேல் , புலி 

17)அனுசம் 
புல் , கூம்பு , சுழல் , விஷ்ணு சக்கரம் , தாமரை 

18) கேட்டை 
பூந்தோட்டம் , ஈட்டி , யானை , புதைக்காடு , தீவுகள், ஊக்கம் 

19) மூலம் 
நன்றி உணர்வு, பூனை, சூட்கேஸ் , லாக்கர், நீராவி எஞ்சின் , அரக்கர் .

20) பூராடம் 
ராக்கெட், சிறிய நீரோடை ,கடலுக்கடியில் செல்லும் நீர்மூழ்கி கப்பல் , பனி மூட்டம் .swimming pool .

21 )உத்திராடம் 
சண்டிகேசுவரர் , பலாப்பழம் , பசு , அரச மர இலை , கொழுக்கட்டை .

22) திருவோணம் 
விஷ்ணு , ஸ்ரீரங்கம் , சமையல்கட்டு , தாம்பூலம் , 

23) அவிட்டம் 
மூத்த சகோதரம் , இசைக்கருவி, ரேடியோ, வண்டி ஹாரன் 

24) சதயம் 
பூங்கொத்து , galaxy , செக்கு , பூகம்பம் , ஏவுகணை ,நல்லெண்ணை,

25) பூரட்டாதி 
வாசல் , நடு ரோடு, குபேரன் , குரு , ஹைவே,தங்கம் 

26 ) உத்திரட்டதி : 
நகை , வைரம் , குடை , லட்டு , வேப்ப மரம் , கருவேப்பிலை மரம். 

27) ரேவதி
தோணி , படகு , அஸ்திவாரம் , பாதம் , கொலுசு ,சாக்கடை , குதிரை லாடம் ,ஆசி வேர் .. 

மிக சில காரகம் கொடுத்து இருக்கிறேன் பயன் படுத்தவும் .
""""""""""""""""""""""""""""""""""""""""""""""”""”ஏழாம் பாவம்.!!!
           
ஏழாம் பாவம் ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமாகிறது.

மேஷ ராசி ஏழாம் இடமானால் அவனது மனைவி சபல புதியுள்ளவளாகவும் பணத்திலேயே நாட்டமுடையவளாகவும் கெட்டவர்களின் நட்பை நாடுபாவளாகவும், கொடுமையாய் நடந்து கொள்ள கூடியவளாகவும் அமைவாள்.

ரிஷப ராசி ஏழாமிடமானால் அவனது மனைவி அடங்கி பேசுபவளாகவும், வணக்கமுள்ளவளாகவும், பதி விரதையாகவும் தெய்வ வழிபாடு உள்ளவளாகவும் விளங்குவான்.

மிதுன ராசி ஏழாமிடம் ஆனால் மனைவி செல்வமும் அழகும் நன்னடத்தையும் உள்ளவளாகவும் இருப்பாள்.

கடகம் ஏழாமிடமாக அமைந்தால் மனைவி கணவனது மனதிற்குப் பிடிதவளாகவும் அவனுடைய சொல்லை தட்டாதவளாகவும் அழகுள்ளவளாகவும் அமைவாள்.

சிம்மம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் தீவிரமானவளாகவும், தைரியமுள்ளவளாகவும் கடுங்குரல் படைத்தவளாகவும் ஓயாமல் பிறரின் வீடு சுற்றுபவளாகவும் இருப்பாள். இளைத்த சரீரமும் ஒரு சில குழந்தைகளும் உடையவள்.

கன்னி ஏழாமிடம் ஆனால் மனைவி அழகுள்ளவள்; அனால் புத்திரன் அற்றவள்; சௌபாக்கியம் நிறைந்தவள்; இன்சொல் பேசுபவள்; சாமர்த்தியசாலி; சத்தியமே லட்சியமாக கொண்டவள்.

துலாம் ஏழாமிடம் ஆனால் மனைவி தோற்றப் பொலிவில்லாதவள்; தர்மம் செய்வதில் நாட்டம் உடையவள்; பெருத்த சரீரம் உள்ளவள்; குழந்தை செல்வம் மிக்கவள்.

விருச்சிகம் ஏழாமிடம் ஆனால் மனைவி தயையும் அன்பும் கொண்டவள்; எதிலுமே தீவிர முயற்சி கொண்டு ஒரே தடவையில் காரியம் சாதிக்க வல்லவள்; கணவனிடத்தில் பிரியம் வைக்காதவள்; துர்பாக்கியமும், தோஷமும் நிறைந்தவள்.

தனுசு ஏழாமிடம் ஆனால் மனைவி பெண்மை தோற்றம் அற்றவள்; அதாவது கடும் குரலும் மிடுக்கான நடையும் கொண்டவள். நளினமும் நாணமும் இல்லாதவள்; ஆணின் குணாதிசியங்கள் அனைத்தும் கொண்டவள். பக்தியோ புத்தியோ இல்லாதவள்.

மகரம் ஏழாமிடம் ஆனால் மனைவி வெளியாருக்கு காருண்யம் மிகுந்தவள் போலக் காட்சியளிப்பவள். உள்ளத்தில் கஞ்சத்தனம் மிக்கவள். இவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தை நல்ல பெயரெடுக்கும். தன்னைப் பொறுத்த மட்டில் தனக்கும் கணவனுக்கும் தன் குழந்தைகளுக்கும் இனியவளாய் நடந்து கொள்பவள்; பதிவிரதை.

கும்பம் ஏழாமிடம் ஆனால் மனைவி எதிலும் உறுதியான உள்ளம் கொண்டவள்; கணவனுக்கு எப்போதும் தொண்டு செய்பவள்; தெய்வங்களிடத்திலும், பிராம்மணரிடத்திலும் முறையே பக்தியும் மரியாதையும் உள்ளவள். எல்லாவித சுகங்களும் அமையப் பெற்றவள்.

மீனம் ஏழாமிடம் ஆனால் மனைவி விகாரமான தோற்றமுடையவள். இவளுக்கு பிறக்கும் குழந்தைகள் கெட்ட புத்தியுடையன; நல்லொழுக்கம் அற்றன; எப்போதும் யாருடனாவது சண்டைக்குப் போய் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு வருவன.

ஏழுக்குடையவன் லக்னம் முதல் 12 ராசிகளிலும் இருப்பதை பொறுத்து ஏற்படும் பலன்கள்.

ஏழுக்குடையவன் லக்னத்தில் இருந்தால் ஜாதகன் துக்கம் அற்றவன்; சுகபோகி; ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உடையவன்; சத்ருக்களை நாசம் செய்பவன்.

ஏழுக்குடையவன் 2 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனின் மனைவி துஷ்டத்தனம் மிக்கவள்; சுகமற்றவள்; பித்த சம்பந்தபட்ட வியாதிகளால் பீடிக்கப்படுபவள்; எதற்கெடுத்தாலும் கணவனோடு எதிர்வாதமிடுபவள்; கணவனின் சொல்லை மீறி நடப்பவள்; தனக்கென குழந்தை பேறு இல்லாதவள்;

ஏழுக்குடையவன் 3 ஆம் இடத்தில் அமர்ந்தால் ஜாதகன் தன் சொந்த முயற்ச்சியை நம்பி வாழ்பவன்; பந்துகளிடத்தில் அன்பு உள்ளவன்.

 4 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனை பலமற்றவனாகச் செய்து விடுகின்றான். தகப்பனாருக்கு இவன் விரோதமாகின்றான். எனவே துஷ்டன் என்று சொல்லத் தேவை இல்லை. ஆனால் இவனுக்கு வாய்க்கும் மனைவி நல்ல குணவதியாய், கணவனின் சொல்லுக்கு மறுவார்த்தை பேசாதவளாய் அழகு பொருந்தியவளாய் அமைகிறாள்.

ஏழுக்குடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அழகு அந்தஸ்து, தலைமகன், சுகம் ஆகியவற்றை தருகின்றான். துஷ்டர்களை இந்த ஜாதகன் நாசம் செய்துவிடுவான். தன் பத்தினியை எந்த ஆபத்தில் இருந்தும் காப்பாற்ற கூடியவன்.

ஏழுக்குடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு அற்ப ஆயுள்; அபமிருத்யு பீடைகள்; பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்; அழகிய கட்டுடல் கொண்டவன்; பெண்களிடத்தில் பிரியமுள்ளவன்; பாபக்கிரகங்கள் அந்தஇடத்தில சேர்ந்திருந்தால் க்ஷயரோகி.

ஏழுக்குடையவன் 7 ஆம் இடத்தில் இருந்தால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிட்டுகிறது. நீண்ட ஆயுள்; இன் சொல்லன்; சாந்த சோரூபி; கீர்த்திமான்; ஆனாலும் இவனிடத்தில் ஒரு கெட்டகுனம்-பிற பெண்டிரை மொஹித்தல்.

ஏழுக்குடையவன் 8 ஆம் இடத்தில் இருப்பின் தன் மனைவியோடு ஓயாமல் சண்டை வளர்பவன்; ஆதலால் மனைவிச் சுகமற்றவன்; மனைவியோடு தப்பித்தவறி மகிழ்ச்சியோடு இருக்க முற்பட்டாலும், பாவம் அவளூக்கு விரைவில் மரணம் வந்து சேர்கிறது.

ஏழுக்குடையவன் 9 ஆம் இடத்தில இருந்தால் ஜாதகன் நல்லொழுக்கம் உடையவன். பாபக்கிரகங்கள் அந்த இடத்தில் செர்கையானால் நபும்சகன்; மனைவியை பகையாளியாக கருதுபவன்; தவத்தில் நாட்டமுடையவானாகி சந்நியாசியாகி போவதும் உண்டு.

ஏழுக்குடையவன் 10 ஆம் இடத்தில் அமரும் போது ஜாதகன் ராஜ சம்பந்தமான குற்றத்தை செய்பவன் ஆகின்றான். கெட்ட வார்த்தைகளை பேசுபவனாகவும், கபடியாகவும், சபல புத்தி உடையவனாகவும் ஆகின்றான் மாமனாரை வேலை வாங்குபவன்; வஞ்சகன்; சொந்த ஜனங்களுக்கு உதவி செய்யாதவன். பெண்களுக்கு சந்தோசத்தை தராதவன்.

ஏழுக்குடையவன் 11 ஆம் இடத்தில் இருந்தால் மனைவி எப்பொழுதும் பதிக்குப் பணிவிடை செய்பவனாகவும் பதிவிரதையாகவும் அடக்கமுள்ளவளாகவும் அமைகின்றாள். வித்தையினால் இவளது தந்தை மேம்பட்டு விளங்குவான். ஆதலால் தந்தையிடம் இவள் அளவற்ற வாஞ்சை உடையவன்.

ஏழுக்குடையவன் 12 ஆம் இடத்தில் இருந்தால் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு வீடு வாசல் இல்லை. உறவு மற்றொருவர் இல்லை; மனைவி சுகம் அற்றவன். இவனின் மனைவி சஞ்சலபுத்தி கொண்டவள். நல்ல செலவாளி. அடாத வார்த்தை பேசுபவள். தன் வீட்டு பொருள்களையே திருடி விற்பவள்.

ஏழாம் இடத்தை சூரியன் முதலிய கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்

சூரியன் ஏழாம் இடத்தை முழுப் பார்வை பார்க்கும் பொழுது மனைவியோடு இன்ப சுகம் அற்றுப் போகின்றது. ஜாதகன் சோகை பிடித்தவன் ஆகின்றான். அவனது தேகம் வெளுத்து விடுகின்றது. சத்ருக்களின் தொல்லை வேறு சேர்ந்து கொள்கிறது.

சந்திரன் பார்வைப் பட்டால் இவனது மனைவி நல்ல அழகும் குணமும் வாய்ந்தவளாக அமைகிறாள்; யானையைப் போல் கம்பீரமாக நடப்பவள். ஆயினும் பிறரிடத்தில் கொள் சொல்பவளாகின்றாள்; கெட்ட நடத்தையும் உண்டு.

செவ்வாயினால் ஏழாம் இடம் பார்கப்பட்டால் ஜாதகன் மனைவியை விட்டுபிரிந்திருக்க நேரிடும்; அல்லது விரைவில் அவளது மரணம் ஏற்படக்கூடும். ஜாதகனை நீரிழிவு நோய் தாக்கக்கூடும். ஸ்திரிகளால் சண்டையும் பயணத்தில் நஷ்டமும் ஏற்படுகின்றது.

புதனால் பார்க்கப்பட்டால் மனைவியினால் சுகம் உண்டு. ஜாதகன் நல்ல கட்டழகனாய் விளங்குவான். கல்வி வளமும் தனதான்ய சம்பத்தும் மிக்கவன்.

குருவினால் பார்க்கப்படும் பொழுது களத்திர சுகம், வியாபார லாபம், பெரும் புகழ் அனைத்தும் கிட்டுகிறது. தனவான் மட்டுமின்றி தர்மவானாகவும் திகழ்கின்றான்.

சுக்கிரனால் ஏழாம் பாவம் பார்க்கப்பட்டால், மனைவியால் பல சௌகர்யங்களை ஜாதகன் அடைகின்றான். மக்களும் நல்லவர்களாகவே அமைகின்றனர். குழந்தைகள் சற்றுக் கூடுதலாகவே பிறக்கின்றனர். வியாபார லாபத்தை ஜாதகன் வெகுவாகப் பெறுகின்றான். தெளிவான புத்தி ஜாதகனுக்கு அமைகிறது.

சனியினால் களத்திர ஸ்தானம் பார்க்கப்படும் போது மனைவிக்கு ஆகாது. அவளுடைய அழிவுக்கு காரணமான செயல்கள் நடக்கின்றன. அவளுக்கு கண்டங்கள் தொடர்கின்றன. ஜாதகனை பாண்டு ரோகம் பீடிக்கிறது. காய்ச்சல், வயிற்றுக்கடுப்பு நோய்கள் இடைவிடாது தொடர்கின்றன.
ஏழுக்குடையவன் சுபகிரகதுடன் கூடினாலும், பார்க்கப்பட்டாலும், ஜாதகன் சகல சௌபாக்கியங்களையும் அடைவதோடு குணவானாகவும், தனவானாகவும் விளங்குகின்றான். தன் பத்தினியின் மூலம் பாக்கியத்தையும் செல்வத்தையும் பெறுகின்றான்.

ஏழுக்குடையவன் ஜாதகத்தில் உச்சமானால், நல்ல குணம் மிக்கவனாய் பலரும் பாராட்டும் பெரு பெறுகின்றான். தனம், தானியம் நிறைந்த குடும்ப தலைவனாக விளங்குகின்றான்.

ஏழுக்குடையவன் சத்ருவாகவோ, நீசனாகவோ ஒரு ஜாதகத்தில் அமைந்து விட்டால் பலன் நேர் மாறாக அமைகின்றன.

7 ஆம் இடம் களத்திர பாவமாதலால் மேலே கூறப்பட்ட புருஷ ஜாதகத்திற்க்கு உண்டான பலன்கள் பெண்ணின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போதும் பொருந்துவதேயாகும்.

கணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன் என்ற நிலையில் இதுவரை கூறப்பட்ட கருத்துக்களில் ஆண் பெண் ஜாதகதிற்கேற்ப பொருத்திப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்ணின் ஜாதகத்தை வைத்து அவளுக்கு வாழ்க்கை துணைவியாகப் போகும் கணவனின் நிலை பற்றி சில சிறப்பியல்புகள் இங்கே குறிக்கப் பெறுகின்றன.

சனியின் வீடோ சனியின் நவாம்சமோ பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் வயதானவனாகவும், மூர்க்கனாகவும் இருப்பான்.

செவ்வாயின் வீடோ, செவ்வாயின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் கோபம் கொண்டவனாகவும் ஸ்திரி லோலனாகவும் இருப்பான்.

சுக்ரனின் வீடோ, சுக்ரனின் நவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் கணவன் அழகும் அந்தஸ்தும் கொண்டவனாக அமைவான்.

புதனின் வீடோ, புதனின் நாவம்சமோ 7 ஆம் இடமாக இருந்தால் தொழிலைப் பற்றிய அறிவும் சாமர்த்தியமும் உடையவனாக விளங்குகின்றான்.

சந்திரனின் வீடோ அல்லது நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் கோழையாகவும், காமவசப்படவனாகவும் ஆகின்றான்.

குரு சுக்கிரன் இவர்களின் நவாம்சத்தில் 7 ஆம் இடம் அமைந்திருந்தால் இவளுக்கு வாய்க்கும் கணவன் வீரம் உள்ளவனாகவும் குணவானாகவும் திகழ்வான்.

சூரியன் வீடோ, சூரியனின் நவம்சமோ 7 ஆம் இடமானால் கணவன் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேளையில் ஈடுபட்டவனாகவும் , கடுமையான சுபாவம் உள்ளவனாகவும் இருப்பான்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-