முதலில் எழுதும் சுலோகமாவது ,”ஜெனனி”
ஒவ்வொரு ஜோதிடம்த் ஜாதகம் கணிக்கும் போத அதில் முதலில் எழுதும் சுலோகமாவது ,”ஜெனனி”என்று எழுதுவதே விதியாகும் .அதன் அர்த்தமாவது,நாம் எடுத்த பகுத்தறிவு உடைய மானிட ஜென்மமாவது – பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தினால் அடைய பெற்றதாகும்.குழந்தை ஜெனனமானது அந்த குலத்தை விருத்தி செய்வதற்கு வந்ததாகும்.குலவிருத்தி செய்ய வந்த மானிடனுக்கு ஜெனனகால ஆயுள் முதலியவைகளை கவனிக்கிறேன் என்பதாகும்.
ஜென்மலக்கினத்தை நிர்ணயம் செய்து திசாஅறிந்து ,கிரக சஞ்சாரம் பேதம் கண்டு,ஆதிபத்தியங்களை தெரிந்து,அதோடு கோச்சாரத்தையும் அறிந்து
பாவக தேந்தெடுக்கும் போது முதலில் 1. ஆயுள் பாகத்தையும்
2.தாய் –தந்தை 3.சாகோதரம் சுகதுக்க திசாபுத்தி முறையே தேர்ந்தேடுத்து கூறவேண்டும்.
மாரகம் வரும் போது ஜாதனுக்கு அதிக லாபமும் ,வெகுவைபோகங்களும் நடக்கும.
இதற்கு காரணம் 3-க்கு விரையமாகிய 2-ம்மிடம் 8-க்கு விரையமாகிய 7 ம் மிடமும் மாரகஸ்தானம் என்று பெயர்..இதில் கெட்ட கிரகங்கள் வருமேயானால் ,அந்த கிரகத்தின் திசை அல்லது புத்தியில் மாரகத்தை கொடுக்கும்.ஆனால் வருபவர் இரு வீட்டை உடையவாராகில்,மாரகத்தை துணிந்து செய்யாமல் அநேக கஷ்டங்களையும் மாரகத்திற்குச் சமானமாகிய கஷ்டங்களையும் கொடுப்பார்கள்.மேற்சொன்ன மாரக ஸ்தானத்தை சுபர் பார்த்தால் அவ்வளவு வலிவு இராது.ஆனால் பாபர் பார்த்தால் அதிக வலுவாகும்.
ஆனால் இவர்கள் 1-3-7-8-12-ஆம் இடங்களில் நீச்சம் முதலியட் துர்ஸ்தானங்களில் இருத்தல் மாரகத்திற்கு சமனாகிய கண்டத்தை கொடுப்பார்கள்.மேலும் 2,7 க்கு அதிபர்கள் உச்சம் கேந்திரம் திரிகோணமாகிலும் நல்ல சினேகிதர்களுடன் சம்மந்தம் ஏற்ப்பட்டால் வலிவு இராது.
இதுவுமன்றி 4ம் திசை சனியானாலும்,6ம் திசை குருவானலும்,7ம் திசை ராகுவானாலும்,கண்டிப்பாய் மாரக மித்திசையில் 2-7 க்குடயவர் புத்தியில் வரும் .மேலும் திசைகளிடமாகவு பாவிக்கலாம்.ஆயுள் ஸ்தானமாகிய 3-8க்குடையவர்கள் கெட்ட ஆதினமாகிய 2-3-7-8-12 லிருந்தால்,கண்டிப்பாய் மாரகத்தை செய்வார்கள்.ஆனால் சுபர் சம்பந்தப்பட்டாலும்,அல்லதுப் பார்வை மாரகமில்லாமல் கஷ்டம் கொடுப்பர்.மாரக ஸ்தானாதிபதி மாரக ஸ்தானமாகிய 2-7-ல் உள்ளவர்களுடன் சேர்தல்,பார்த்தாலும் மாரகத்தை கொடுக்க மாட்டார்கள்.ஆனால் அவர்களுடன் சேர்ந்த பாபர்-அந்த ஸ்தானத்தில் இருக்கிற பாபர் மாரகம் கண்டிப்பாக செய்வார்.குருவும் சுக்கிரனும் கேந்திராதிபத்தியத்தில் வெகு கொடியவர்கள்.இவர்கள் 2-7 இடங்களில் இருந்தால் மாரகம் தடையின்றி செய்வார்கள்.
8�^�?��] லக்கினம் –
மேஷம்-கடகம்-துலாம்-மகரம் ராசியாயிருந்தால் 2-7 க்குடையோகளும்.,
ரிஷபம் – சிம்மம் – விருச்சிகம் – கும்பம் 3 – 8 க்குடையோர்களும்,
மிதுனம் – கன்னி – தனுசு – மினம் உபய ராசியாருந்தால் 7 – 11 க்குடையோர் மாரகாள்.
ஏனென்றால் இது சரியிராமல் இருப்பதும் தவிர கேட்டவர்களுக்கு அதிக திகிலை கொடுத்து சிலருக்கு 5 வருடத்தில் மாரகம் என்று சொன்னால் ,விரைவிலெயே மரணமாவதும் அல்லது அதிக நாள் தள்ளுவதாயும் இருக்கும்.ஆகையால் மரணமென்று தெரிந்தாலும் பலமாகிய கண்டம் என்று சொல்வது உத்தமம.
ஆயுள் விபரம்-லக்கினாதிபதி,அஷ்டமாதிபதி ,தசமாதிபதி இவ்மூவரும் பலம் பெற்றிருந்தால் நவகிரக திசா வருஷம் 120. உத்தமவயதும்
இருவர் பலம் பெற்றிருந்தால் அதில்பாதி 60 மத்திப வயதும்.
ஒருவர் பலம் பெற்றிருந்தால்ன் அதில் பாதி 32 அதம வயதும்.
மூவரும் பலகினம் அடைந்தால்,12க்குள்ளெ வயதுமாகும்.இல்க்கினாதிபதி அஷ்டாமாதிபதி சரராசியில் இருந்தால் தீர்க்காயுசு.,
லக்னாதிபதி சரமேறி அஷ்டமாதிபதி ஸ்திரமேறினால் –மத்திமம்.,
லக்னாதிபதி சரமேறி அஷ்டமாதிபதி உபயமேறினால்-அற்பாயுசு.,
லக்னாதிபதி ஸ்திரமேறி அஷ்டமாதிபதி உபயமேறினால்-தீர்க ஆயுள்.,
லக்னாதிபதி ஸ்திரமேறி அஷ்டமாதிபதி சரமேறினால்-மத்திம ஆயுள்.,
லக்னாதிபதி ஸ்திரமேறி அஷ்டமாதிபதி ஸ்திரமேறினால்-அற்பாயுசு.,
லக்னாதிபதி உபயமேறி அஷ்டமாதிபதி ஸ்திரமேறினால்-தீரக்கம்.,
லக்னாதிபதி உபயமேறி அஷ்டமாதிபதி உபயமேறினால்-மத்திமம்.,
லக்னாதிபதி உபயமேறி அஷ்டமாதிபதி சரமேறினால்-அற்பாயுசு.,
இலக்கினாதிபதி பலவானாகயிருக்க, 6-8-12 ல் சுபர் இருக்க –தீர்க்கம்.,
இலக்கினாதிபதி திரிகோண கேந்திரங்களிலிருக்க மித்துரு கிரகங்கள்-பார்க்க ,ஆயுசுகாரனாகிய சனி பலம் பெற்றால் ஆயுள் விருத்தி.
அனைவருக்கும் தெரிந்த அரிஷ்டபாகம்-விவரம் :
1 வரையில் வயது முதல் 12 வயது பாலாரிஷ்டம்.,
13 வரையில் வயது முதல் 20 வயது யெளவன அரிஷ்டம்.,
21 வரையில் வயது முதல் 32 வயது கெளமார அரிஷ்டம்.,
33 வயது முதல் 70 வயது வரையில் விருத்தாரிஷ்டம்.,
71 வயது முதல் 12 வயது வரையில் பூர்ண ஆயுசு .
Comments
Post a Comment