உச்சம், நீசம் மற்றும் நீச்ச பங்கம் பற்றிய பதிவ


உச்சம், நீசம் மற்றும் நீச்ச பங்கம் பற்றிய பதிவு
==========================================

குரு ஸ்ரீ ராகவேந்திராய நமஹ.

குருவே சரணம்

வணக்கம். நீசம் என்பது கிரகம் பலமின்றி இருக்கும் நிலை என்றே அறியப்படுகிறது.

ஆனால், அதன் அர்த்தம் வேறு. ராசி மண்டலத்தில், கிரகங்கள் சூரிய ஒளியை உள்வாங்கி மற்றும் மற்ற கிரகங்களின் காதிர்வீச்சினையும் உள்வாங்கி, நாம் வாழும் பூமிக்கு பிரதிபலிக்கும் தன்மையை இழக்கும் நிலை என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுவே சூட்சுமம்.

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசி மண்டலமும் ஒவ்வொரு தமிழ் மாதத்தை குறிக்கிறது. இந்த மாதங்கள் பூமி சூரியனை சூழலும் நிலை அறிந்து முனிவர்களால் வகுக்கப்பட்டது. பூமி போலவே மற்ற கிரகங்களும் சூரியனை நீள் வட்ட பாதையில் சுழல்கிறது என்பதை நாம் அறிவோம். பூமியை போலவே, மற்ற கிரகங்களின் ஓட்டத்தை அறிந்து, இந்த மாதத்தில், இந்த கிரகம் நீசம் என்று முன்னோர்களால் வகுக்கப்பட்டது.

உதாரணமாக, மேஸ ராசி மண்டலத்தில், அதாவது சித்திரை மாதத்தில், சனி தனித்து அமரும் போது, சூரிய ஒளியை பிரதிப்பலிக்காத நிலையை அடையும், ஆனால், அதே ராசி மண்டலத்தில் பூமி வரும் போது, சூரிய கதிர் வீச்சு அதிகம் ஏற்படும். அதுவே சூரியன் உச்சம் என்ற நிலையாக நாம் முன்னோர்கள் கூறுகின்றனர், அங்கே இருக்கும் சனி, சூரியனின் கதிர்வீச்சை அதிகம் பெற்று, நீச பங்கம் அதாவது சூரிய கதிர் வீசினை உள்வாங்கும் திறனை பெறும் என்பதே !!!.

இது போலவே செவ்வாய் என்பது சொந்த வீடு என்பதன் பொருள், செவ்வாய் கதிர் வீசினை பூமி அதிகம் உள்வாகும் இடம் என்று பொருள். அதனால், மேசத்தில் ஆட்சி பெறும் செவ்வாய், அங்கே இருக்கும், சனிக்கு கதிர் வீசினை உள்வாங்கும் நிலையை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதே சூட்சுமம் !!!.

இதே சூட்சுமம் தான், துலாமில் நீசம் பெறும் சூரியனுக்கும். பூமி தன் பயணத்தை சூரியனிடமிருந்து விலகி, வெகு தூரம் சென்று சனியின் கதிர் வீச்சுகளை அதிகம் பெறுகிறது, அதனால், சூரிய உச்ச கதிர்களை பெறும் திறனை இழக்கிறது என்பதே சூட்சுமம். எனவே துலாமில் சூரியன் நீசம், சனி உச்சம். இதை practical example கொண்டு பார்கலாம், துலாம் ராசியில் சூரியன் வரும் மாதமான ஐப்பசியில், சூரியன் வெகு நேரம் கழித்தே உதயம் ஆகிறது என்பதே சிறந்த உதாரணம். சனியின் காரகத்துவமான மந்த தன்மை வெளிப்படுவதை உணரலாம்.

முடிவு (Conclusion)
===============

உச்சம் மற்றும் நீசம் என்பது கிரக நிலைகள் அல்ல, அவை பூமியின் சுற்று வட்ட பாதையில் கிரகங்கள் கதிர் வீச்சுகளை செலுத்தும் மற்றும் சூரிய கதிர் வீசினை பிரதிபலிக்கும் நிலைகள் என்றே கொள்க.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-