ராகு-கேது தோஷம்மா ???
ராகு-கேது தோஷம்மா ??? கவலை வேண்டவே வேண்டாம்.
------------------------------------------------------------------------------------------------
ராகு - கேது தோஷமானது, ஒருவரின் வாழ்வில் பல திருப்பங்களை ஏற்படுத்தும். சில மிக முக்கியமான காரியங்கள் நடவாமல் போவதும் இந்த தோஷதினாலும் இருக்கலாம். ராது - கேது சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு, திருமணம் நடவாமல் போகலாம், தொழில் அல்லது சுயதொழியில் லாபம் இல்லாமல் போகலாம், ஆரோக்கியம் குன்றலாம், எப்போதும் மனக்குழப்பம் இருக்கலாம், எதிலும் தடை ஏற்படலாம்...
இவர்கள் கீழ் கண்ட முத்தான முறையை செய்ய வேண்டும்.
ஒரு சப்போட்டா பழத்தை எடுத்து அதன் விதையை நீக்கி விட வேண்டும். பின்பு அதில் சுத்தமான பசுவின்நெய்யை ஊற்றி புத்தருகின் மீது வைக்கவும். சுத்தமான திரியை எடுத்து அதை சிவப்பு குங்குமத்தில் புரட்டி எடுத்து கொள்ளவும். இந்த திரியை சப்போட்டா பழ விளக்கில் வைத்து விடவும். பின்பு கைகளை நன்றாக அலம்பி விட்டு விளக்கு ஏற்ற வேண்டும். பின்பு அப்பாம்பு புற்றை இடது புறமாக 21 முறை ப்ப்ராதித்து சுற்றி வர வேண்டும். இதை ஞாயிறு தோறும் 13 வாரத்திற்கு செய்ய வேண்டும். பெண்கள் 'அந்த' நாட்களில் அல்லது வாரத்தில் அதை தவிர்க்க வேண்டும். ஆனால் ஆண்கள் இதை தவறாமல் செய்து வர வேண்டும். இதனால் ராகு கேது தோஷம் நீங்கி நன்மை பெறலாம்.
ஒரு முறை காலஹஸ்திக்கு சென்று ராகு கேது தோஷம் நிர்வர்த்தி பூஜை செய்தும் வரவும்
Comments
Post a Comment