பரணி நட்சத்திரம்..


பரணி நட்சத்திரம்...

இருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் பரணியாகும். பரணி நட்சத்திரத்தின் உருவம் ஆகாயத்தில் அடுப்பு போன்றும், பெண்ணின் மர்ம உறுப்பு போன்றும் காட்சியளிக்கிறது. பரணி நட்சத்திரம் மேஷ ராசியில் அமைந்துள்ளது. பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரனாகும். பரணி நட்சத்திரத்தில் நீச்சமடையும் கிரகம் சனியாகும். பரணி நட்சத்திரத்தின் அதிதேவதை எமனாகும்.

பரணி நட்சத்திரத்தின் உருவம் அடுப்பு என்பதாலும், இந்த நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் என்பதாலும், சுக்கிரன் வீட்டைக் குறிக்கும் கிரகம் என்பதாலும் , புதியதாக கட்டிய வீட்டில் முதன் முதலாக அடுப்பு வைத்து பால் காய்ச்சுவதற்கு உகந்த நட்சத்திரமாகும்.

பரணி நட்சத்திரம் அமைந்துள்ள மேஷ ராசியில் அதிபதி செவ்வாய் குறிக்கும் இடங்களான செங்கல் சூளை, மண் பானைகளைச் சுடும் சூளைகளில் நெருப்பிடுவதற்கு ஏற்ற நட்சத்திரமாகும்.

பரணி நட்சத்திரத்தின் உருவம் மாந்திரீகச் சக்கரங்களில் காணப்படும் முக்கோணம் போல் தோற்றமளிப்பதால், மாந்திரீகச் சக்கரம் வரைவதற்கும், மாந்திரீகத் தகடுகளை பிரதிஷ்டை செய்வதற்கும் ஏற்ற நட்சத்திரமாகும்.

பரணி நட்சத்திரத்தின் உருவம் முக்கோணம் எனப் பார்த்தோம். முக்கோணத்தின் மூன்று முனைகளும் கத்தி முனைபோல் கூர்மையாக காணப்படும். எனவே ஆயுதப் பிரயோகம் செய்வதற்கும், போர் புரிவதற்கும், ஏற்ற நட்சத்திரமாகும். மன்னர்கள் காலத்தில் பரணியில்தான் போர் தொடங்குவார்களாம்.

பரணி நட்சத்திரத்தில் தொழில் காரகனான சனி நீச்சமடைவதால் தொழிலாளர்களை வேலைக்கு அமரத்தும் போது பரணியில் அமர்த்தினால் குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள்.

தொழிலாளர்களானால் பிரச்சினைகள் வரும் போது தொழிலாள்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தொழிலாளர் போரட்டங்களை முறியடிக்க உகந்த நட்சத்திரமாகும். வேத காலத்தில் முதல் நட்சத்திரமாக பரணியும் கருதப்பட்டதால் கடை நட்சத்திரமான பரணியில் திருமணம் செய்யக்கூடாது என்னும் கருத்து உள்ளது.

திருமணத்திற்கு மட்டுமே ஆகாத நட்சத்திரம். ஆனால் திருமணத் தடைகள் நீங்க வழிபாடுகள் செய்ய உகந்த நட்சத்திமாகும்.

பரணி நட்சத்திரத்தன்று காஞ்சிக்கு சென்று காமாட்சியை வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கி விரைவில் நடைபெறும். தொடர்ந்து மூன்று மாதங்கள் பரணி நட்சத்திரம் வரும் நாளில் காஞ்சிக்குச் சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-