மாந்தியும் ஜாதகமும்.

மாந்தியும் ஜாதகமும்.
ஜாதகத்தில் மாந்தி எனும் கிரஹம் இருக்கும் இடத்தை வைத்து நம் பிறப்பின் காரணத்தை நாம் அறிய முடியும் .
அதாவது
ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 1 4 7 10 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் இந்த பிறவியில் பல தவறுகளை தெரிந்தே செய்வார் . அதற்குரிய தண்டனையையும் உடனுக்குடனோ அல்லது அவரது ஜாதகத்தில் உள்ள மறைவு கிரஹ திசையிலோ அல்லது அவரது ஜாதகத்தில் உள்ள அஸ்தங்க கிரஹ திசையிலோ பெறுவார். அதனை இந்த பிறவியிலேயே பெறுவார்.
இந்த ஜாதகருக்கு மறுபிறப்பற்ற நிலை என கொள்ளலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 2 5 8 11 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் இப்பிறப்பில் நிறைய தவறுகளை செய்வார் ஆனால் அதற்குரிய தண்டனையை அடுத்த பிறப்பில் அனுபவிப்பார் . ஆனால் அவர் மறுபிறப்பில் நல்லவராக இருப்பார்.
இந்த ஜாதகருக்கு மறுபிறப்பு உண்டு என கொள்ளவேண்டும் .
ஒருவரின் ஜாதகத்தில் இராசி அல்லது நவாம்சத்தில் 3 6 9 12 எனும் ஸ்தானங்களில் மாந்தி இருக்குமானால்
அந்த ஜாதகர் சென்ற பிறப்பில் செய்த தவறுகளுக்கான தண்டனையை இந்த பிறப்பில் அனுபவிதுக்கொண்டிருப்பார். அவர் இந்த பிறப்பில் நல்லவராகவும் வசதியோடும் இருப்பார்.
ஜாதகரை மறுபிறப்பற்ற நிலைக்கு கொண்டு செல்லும் , கர்மாவை தீர்த்துக் கொள்ளும் பிறப்பு என கொள்ளவேண்டும் .
மாந்தியை கணிக்காமல் ஒரு ஜாதகத்தை கேரளத்தில் பலன் சொல்வதில்லை .
பொதுவாக மாந்தியை தீய கிரகமாகவே பார்க்க முடிகின்றது .
ஆனால் அந்த மாந்தியைக் கொண்டுதான் பிறப்பின் ரகசியத்தினை அறிந்து கொள்ள முடியும்.
இதற்கு பரிகாரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை ,
நாம் எப்படி என தெரிந்து கொண்டு நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக முதல் வீடு ,நான்காம் வீடு ,ஏழாம் வீடு மற்றும் பத்தாம் வீட்டில் மாந்தி அமரப் பெற்றவர்கள் மீண்டும் பிறப்பற்றவர்கள் என தெரிகிறது .
ஆகவே அவர்கள் தனது தவறுகளை திருத்திக்கொள்ள முயலவேண்டும்.
மேலும் தவறுகளை செய்யாமல் இருக்கப் பழக வேண்டும்.
இதுவே சிறந்த பரிகாரம்.
ஆனால் நமக்குதான் பிறப்பில்லையே என தன்னை தவறுகளின் கூடாரமாக்கிக் கொள்ள கூடாது.
காரணம் அதுவே பிறப்பற்று பேயுறு கொண்டு அலையும் நிலையை தந்து விடலாம்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-