ஜோதிடத்தில் விதி மதி கதி

ஜோதிடத்தில் விதி மதி கதி

ஜோதிடம் என்பது "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில்" என்பதை வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் நாம் வாழ்வில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது . அந்தத் தாக்கம் உடல், மன ரீதியா இருக்கும்.

விதி என்பது ஜாதகர் இப்பூவுலகில் அனுபவிக்க இருக்கும் இன்ப,துன்பங்களையும் அதன் அளவீடுகளையும் குறிக்கிறது , மதி என்பது நம் மனம் மாறி கொண்டே இருப்பது போல் தச புத்தி (சந்திரன் ) வழியாக இன்ப ,துன்பங்கள் மாறி மாறி வருவதை குறிக்கிறது , கதி என்பது கோச்சார கோள்களின் நிலையையும் அவை திசை புக்தியோடு கலந்து ஏற்படுத்தும் மாற்றத்தையும் குறிக்கிறது , விதி, மதி ,கதியை பார்ப்போம். கதி (ர்) என்பது சூரியன் என்ற கூற்றும் உண்டு )

விதி என்பது இலக்கினம். (ஜெனன ஜாதகம்) ஒருவர் பிறந்த நேரத்தில் வான் மண்டலத்தில் சூரியன் (ஆன்மாவை குறிக்கும் ) உதிக்கும் ராசியே அவரின் இலக்கினம். அந்த சனப் பொழுதில் வான் மன்டலத்தில் உள்ள கோள்களின் நிலையை காட்டுவதே அவரின் ஜாதகம். ஒவ்வொரு கோளிலிருந்தும் அதன் காந்த சக்தி புவியை வந்தடைகிறது. அந்த காந்த சக்தியை ஒருவர் தன்னுடைய ஜனன நேரத்தில் இருந்து உணர தொடங்கிறார். நவகோள்களில் இருந்து வரும் இந்த காந்த சக்தி நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்தும் பாதிப்பு தான் நம்முடைய வாழ்க்கை முறை. இந்த முறையில் நமக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் தன்மையை காட்டக்கூடிய கால கண்ணாடி தான் ஜாதகம். அதன் தொடக்கம் இலக்கினம். இதனை விதி என்கிறோம்.

மதி என்பது நட்சத்திரங்கள் (திசா புத்தி அந்தரங்கள்). தன்னை தானே சுற்றி கொண்டு நாம் வசிக்கும் இப்புவியை சுற்றி வரும் துணைக்கோள் சந்திரன். மிக மிக அருகில் இருக்கும் இந்தக் கோள் தான் நம்முடைய மனதை ஆள்கிறது. எண்ணம், சிந்தனையின் நாயகனாக சந்திரன் உள்ளது, " மனம் போல் வாழ்வு என்பர் " மனம் என்பது நிலையில்லாதது காரணம் சந்திரனிலிருந்து வரும் காந்த அலைகள் தினம் தினம் கூடுவதும் குறைவதுமாக இருப்பது தான். ஒருவர் பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திர சாரத்தில் பயணிக்கிறதோ அது தான் அவருடைய ஜனன நட்சத்திரம். இதன் மூலம் தான் திசா புத்தி அடுத்தடுத்து செயல்பட துவங்குகிறது.

கதி என்பது கோச்சாரம்(கோள்களின் நகர்வு ). இன்றைய கோள்களின் நிலைகள். இன்றைய பொழுதில் கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம்மிடம் பிறக்கும் போது வந்து சேர்ந்த காந்த அலைகளிடம் உடல், மன ரீதியாக எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கோச்சார பலன்கள். இப்படி
பிறந்த பொழுது உள்ள கோள்களின் நிலையோடு, அப்போது உள்ள கோள்களின் நிலை மாற்றத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக ஜோதிடத்தில் விதி என்பது இலக்கினம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இலக்கினம் சந்திரன் சூரியன் இம்மூன்றில் எது வலுவாக இருக்கிறதோ அதை அடிப்படையை கொண்டு பலன்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜனன ஜாதகம், திசாபுத்தி அந்தரம், கோச்சாரம் இந்த நிலைதான் விதி மதி கதி என்பதாக எடுத்துக்கொண்டோமானால், ஜனன ஜாதகம் நடக்க இருக்கும் வினை என்ன என்று காட்டும். திசா புத்தி அந்தரங்கள் அந்த வினை எப்பொழுது என்று காட்டும். கோச்சாரம் அவ்வினையால் நாம் அடையும் நிலையை காட்டும்.


Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-