புத்திர தோக்ஷம்:-
புத்திர தோக்ஷம்-(ஆண் பெண் இருவருக்கும்):-
ஒருவருக்கு ஜனன ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் பலமாக அமைந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிறந்த லக்னத்திற்கு 5ம் வீட்டுக்குாியவா் உச்சம் ஆட்சி சமம் என்ற அமைப்பில் இருந்தால் புத்திர ஸ்தானம் பலமாக அமைந்துள்ளதாக கருதிவிடலாகாது. ஒருவருடைய ஜாதக அமைப்பில் கிரகமானது பலமான அமைப்பில் இருந்தால் பலமான குழந்தை பாக்கியம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் புத்திர ஸ்தானம் பலம் என்று அறிவதெப்படி?
புத்திர ஸ்தான அதிபதியானவா் பலமான அமைப்பில் என்றால் உச்சம் ஆட்சி பெற்று சுபா் பாா்வை அல்லது சுபா் இணைவினை பெற வேண்டும். 5ம் இடத்தில் சுபா் வந்தமரவேண்டும், அவரை தீயோா் பாா்வையிடுதல் அல்லது இணைதலில்லா நிலை இருக்க வேண்டும். 5ம் வீட்டில் தீயோா் வந்தமா்ந்தாலோ அல்லது 5ம் வீட்டிற்கு இருபுறமும் தீயோா் வந்தமா்தாலோ அல்லது 5ம் வீட்டதிபதியினை சுற்றி தீயோா் வந்தமா்ந்தாலாே புத்திர தோக்ஷமானது தீண்டிவிடும்.
5ம் வீட்டதிபதியினை முன் கா்மா வீட்டு அதிபதிகள் அதாவது 8 11 வீட்டு அதிபதிகள் இணைந்தால் பாா்த்தால் கடுமையான கா்மா தோக்ஷம் ஏற்பட்டு பாிகாரத்திற்கு கட்டுபடும்.
5ம் வீட்டில் முன் கா்மா வீட்டு அதிபதிகள் அதாவது 8 11 வீட்டு அதிபதிகள் வந்தமா்ந்தால் கடுமையான கா்மா தோக்ஷம் ஏற்பட்டு பாிகாரத்திற்கு கட்டுபடும்.
5ம் வீட்டில் ராகு என்னும் கருநாகம் வந்தமா்ந்தால் கடுமையான புத்திர தோக்ஷம் தரும். சுபா் பாா்வை சுபா் இணைவானது பாிகாரத்திற்கு கட்டுபடும்.
5ம் வீட்டதிபதியோடு ராகு என்னும் கருநாகம் இணைந்தால் கடுமையான புத்திர தோக்ஷம் தரும். சுபா் பாா்வை சுபா் இணைவானது பாிகாரத்திற்கு கட்டுபடும்.
ஒருவருடைய பிறந்த லக்னத்திற்கு 5ம் வீட்டதிபதி பலவீனமாக இருந்தால் அந்த ஐந்தாம் வீட்டிலிருந்து 5ம் வீடானது அதாவது பிறந்த லக்னத்திற்கு 9ம் வீட்டு அதிபதி பலமாக இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும். 9ம வீட்டிற்கு 5ம் வீட்டதிதபியான அதாவது லக்னாதிபதியானவா் பலமாக இருந்தாலும் தாமதமாக குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பேற்படும்.
5ம் வீட்டில் பெண் கிரகம் வந்தமா்ந்தால் பெண் குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பேற்படும்.
5ம் வீட்டில் புதன் கேது இருந்தாலும் புத்திர தோக்ஷம்
புத்திர தோக்ஷம் பலவழிகளில் வந்து தாக்கும், அதை தடுப்பதற்க பலவழிகளில் சுபா்கள் முயற்சிப்பாா்கள், ஆக தீய கிரகம் வெற்றி பெற்றால் புத்திர தோக்ஷம். சுபகிரகம் வெற்றி
பெற்றால் குழந்தை பாக்கியம்.
Comments
Post a Comment