நீரிழிவு:-
*நீரிழிவு நோயாளிகளின் கால் பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள்*
முதலில் நீரிழிவு நோயாளி தனது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் (நார்மல் லெவல்) கொண்டுவர வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட கால்களுக்கு உபசிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
1. காலில் மதமதப்பு, எரிச்சல் அதிகமிருந்தால் மஞ்சள் 10 கிராம், படிகாரம் 10 கிராம், கடுக்காய் 2 எண்ணிக்கை மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதனைக் கொண்டு கால்களையும், பாதங்களையும் தினதோறும் கழுவிவர, பாத எரிச்சல், மதமதப்பு குறையும். கால்களில் ஏதேனும் புண் இருந்தாலும் ஆறிவிடும்.
2. கடைகளில் கிடைக்கும் குங்கிலிய வெண்ணையை வாங்கி, 5 கிராம் அளவில் காலை, இரவு இருவேளை ஏலக்காய்த் தூளுடன் சாப்பிட்டு வர மேற்கண்ட குறைபாடுகள் தீரும்.
3. இதேபோல் குங்கிலிய பற்பம், படிகார பற்பம் போன்றவற்றை மருத்துவரின் அலோசனையின் பேரில் சாப்பிடலாம்.
Comments
Post a Comment