சக்கரங்களும் பிராணனும்:-

சக்கரங்களும் பிராணனும்
சக்கரங்கள் இருவழிகளில் பிராணனை உருவாக்குகின்றன.

1. உணவு, காற்று ஆகியவற்றிலிருந்து…
நாம் உண்ணும் உணவு உடலில் செரிமானமாகி, பல வேதியியல் மாற்றங் களுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக குளுகோசாக மாற்றப்படுகிறது. இந்த குளுகோஸ் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது.
குளுகோஸ் உருவாகவும், பின்னர் அது செல்களின் உள்ளே சக்தியாக மாற்றப்படவும் ஆக்சிஜன் என்ற பிராணவாயு தேவைப்படுகிறது. இதை நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து பெற்றுக்கொள்கிறோம்.
ஆக, நாம் உண்ணும் உணவிலிருந்தும், சுவாசிக்கும் காற்றிலுள்ள பிராண வாயுவிலிருந்தும் உடலுக்குத் தேவையான சக்தி உருவாக்கப்படுகிறது. இந்த உண்மையை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்தது.
ஆனால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது தந்திர யோகிகளுக்கு இது தெரிந்திருந்தது. இந்த வகையில் நடைபெறும் உயிர்சக்தி உருவாக்கம் சரிவர நடைபெற, நாம் உண்ணும் உணவு சத்தானதாக இருக்கவேண்டும். சுவாசம் சீராக நடைபெற வேண்டும்.
இவற்றை சரிசெய்யவே நமது தந்திர யோகிகள் பல உணவு முறைகளை, கட்டுப்பாடுகளை வகுத்தனர். எந்த வேளையில் எதை உண்பது என்பதை வரையறுத்து வைத்துள்ளனர்.
சுவாசத்தின் மூலம் கிடைக்கும் பிராண வாயுவின் அளவை அதிகரிக்கவே பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சிகளைக் கண்டுபிடித்தனர்.
இந்த முதல்வகை சக்தி உருவாக்கத்தில் நுரையீரல்கள், வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற பல உறுப்புகள் இணைந்து செயல்படுகின்றன. இதுவரையில் நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.
ஆனால், இந்த சக்தியை ஒவ்வொரு உறுப்புக்கும் தேவையான உயிர்சக்தியாக மாற்றும் பணி சக்கரங்களில் நடைபெறுகிறது.
இது, இதுவரையில் நவீன மருத்துவத்தால் கண்டறியப்படாத ஒன்றாகும். எனவேதான் நவீன மருத்துவத்தால் நோயின் மூல காரணத்தைக் கண்டறிந்து முழுமையான குணத்தைத் தரமுடிவதில்லை!

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-