மூன்றாம் பாவத்தில் சனி:-
மூன்றாம் பாவத்தில் சனி:-
விஜய வீரிய தைரிய ஸ்தானம்
என்று பெயர் கொண்ட உபஜய ஸ்தானம்
விஜய என்றால்
வெற்றியை நாடுபவன் என்று பொருள்
வீரீய என்றால்
ஆண்மைக்குண்டான வீரம் மற்றும்
பெண்மையை திருப்தி செய்யும்
ஆணின் சுக்கிலத்தையும் குறிக்கிறது
தைரிய என்றால்
எதையும் முன்நின்று முடிக்ககூடிய ஆற்றல்
பெற்ற திறனான முயற்ச்சியை குறிக்கிறது
3 _ ஆம் பாவம் என்பது அந்த
ஜாதகனுக்கு உபஜய ஸ்தானம் ஆகிறது
மேற்கண்ட அடிப்படையைக் கொண்டு
அந்த ஜாதகனின் லக்கின பாவத்தின்
வளர்ச்சிக்கு துணை நிற்கும் ஸ்தானம்
இங்கே அமரும் கிரகங்களின்
தன்மைக்கேற்றவாறே
இந்த பாவத்தின் வளர்ச்சி
அந்த ஜாதகருக்கு பெரும் பயன் தரும்
உதாரணமாக மூன்றாம் பாவம்
தைரிய ஸ்தானம் ஆகும்
எனில் இங்கு சுபர்கள்
அமர்ந்தால் தைரியம் குறையும்
அதேசமயம் உடல் நலம் மற்றும்
குழந்தைகளைப் பொறுத்தவரை
நல்ல பலன்கள் நடக்கும்
அசுபர்கள் அமர்ந்தால்
கிரக காரகத்திற்க்கேற்ற தைரியசாலி
இங்கே சனி அமர்ந்தால்
வேலைகளில் தைரியசாலி
முயற்ச்சி இருக்கும்
ஆனால் அது சற்று மந்தமாக இருக்கும்
அதே சமயம் இவர்
அலி கிரகமாக இருப்பதால் இங்கு
அவர் பாதிக்கப்பட்டு அமர்ந்தால்
குழந்தை இல்லாதிருக்கும் அல்லது
காலதாமதம் ஆகும் இருந்தாலும்
குழந்தைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும்
3 _ ஆம் வீடு
9 _ ஆம் வீட்டுக்கு
7 _ ஆம் வீடாக அமைவதால்
இந்த பாவத்தில் உள்ள சனி
3 _ 7 _ 10 _ ஆம் பார்வைகளில்
7 _ ஆம் பார்வையில் குறிப்பாக
9 _ ஆம் பாவத்தை பார்வையிடும் போது
அது அதிர்ஷ்டம் பாக்கியம் தர்மத்தை
குறிப்பதால்
அதில் அசுபர் பார்வை பாதிப்பு ஏற்படும்
பாவம் பாதிக்கப்பட்டால்
மேலும் தொல்லை அதாவது இந்த
3 _ ஆம் வீடு
7 _ ஆம் வீட்டுக்கு
9 _ ஆம் வீடாக அமைவதால்
மனைவி உறவுகள் தொடர்பான
தர்மங்களை குறிக்ககூடியது அதாவது
ஒருவரின் வீரிய ஆண்மையின்
ஒழுக்கத்தைக் காட்டக்கூடியது
இந்த வீடு பாதிக்கப்பட்டால்
ஜாதகரின் ஒழுக்கம் கேள்விக்குறியது...?
இந்த வீட்டின் காரகாதிபதி
செவ்வாய் ஆவார்
இவர் சகோதர காரக கிரகமும் ஆவார்
செவ்வாயின் பகை கிரகமான சனியிடம்
அந்த பாவக ஸ்தான பலன்களை
நேர்மறையாக எதிர்பார்க்க முடியாது
இருந்தாலும் சனி அமர்ந்துள்ள
3 _ ஆம் வீடு மகரம் _ கும்பம் _ துலாம் .
அதன் ஆட்சி உச்ச ராசிகளாக இருந்தால்
அறிவாளி
தைரியம்
வீரம்
மன உறுதி
பொறுமை
மகிழ்ச்சியான மனவாழ்வு
தாராள மனம்
பேச்சுத்திறன் ஆர்வம்
நிர்வாகத் திறமை
இயற்கையிலேயே தலைமை
தாங்கும் தன்மை
எதிரிகளைக்கூட நன்றாக நடத்துமளவுக்கு
பெருந்தன்மையானவர்
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்
திருமணவாழ்வின் தாம்பத்ய
இன்பங்களை அனுபவிப்பவர்
மனைவியிடம் அன்பு உடையவர்
சொந்த நிலபுலன்கள் அமையும்
சுபர் பார்வை சேர்க்கை பெற்றிருந்தால்
பூர்வீக சொத்தும் நிலமும் அமையும்
உத்தியோகத்தில் நீண்ட நாள்
பணிசெய்து ஒய்வு பெரும் பாக்கியம்
நீண்ட ஆயுள் உண்டு
நிறைய சகோதரர்கள் உண்டு
மேற்கண்டவாறு இல்லாமல்
சனி பாதிக்கப்பட்டு
3 _ ஆம் வீட்டில் அமர்ந்தால்
சகோதரர் களை இழக்கச் செய்யும்
அல்லது இளைய சகோதரம் இருக்காது
சனிக்கு அசுபர் தொடர்பு ஏற்பட்டால்
சகோதர நன்மை இல்லாமல்
விரோதம் ஏற்படலாம்
சந்தேகத்திற்குறிய வழிகளில் சம்பாத்தியம்
சோம்பேறி
மகிழ்ச்சி அற்றவர்
அற்பகுணமுள்ளவர்
நன்றி மறப்பவர்
வாழ்வில் பலதடைகளை சந்திப்பவர்
உறவினர்கள் அதிகமாக நெருங்கமாட்டார்கள்
(இந்த இடத்தில் உள்ள சனியை
செவ்வாய் பார்வையிட்டால்
பாபர் சேர்க்கையும் இருந்தால்
இளையசகோதரர்களுக்கு ஆகாது
மரணகண்டம் உண்டு)
பல வேலைகளை செய்து பிழைப்பவர்
பால்ய வயதில் அற்ப சுகம் தேடுபவர்
விவாக தடை உள்ளவர்
பின் வயதில் விசேஷ சுகம் உண்டு
மூத்த வயது பெண்களைப் புணர்பவர்
2 _ இல் வேறு எந்த கிரகம் இருப்பினும்
3 _ இல் உள்ள சனி சுப பலன் தரார்
பொதுபலனாக
3 _ இல் சனி நன்மை தருவார் என்பது
அது லக்கினத்திற்க்கு
மறைவு ஸ்தானமாக அமைவதால்
தீயவர் மறைவு ஸ்தானத்தில்
உள்ளதை குறிப்பிடுவதாகும்.
Comments
Post a Comment