மண்சோறும் குழந்தைப் பேறும் :-

மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் )
இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது .
இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. முறையில்லாத நடவடிக்கையும் கூட .பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள். இந்த முறையற்ற குமுகம் ஆணாதிக்க குமுகம் பெண்ணை பிள்ளை பேறும் பொறியாக (இயந்திரமாக )பார்க்கிறது . குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை.
கருப்பை சார்ந்த குறைபாடுகள் .
வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது . பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . இந்த பெண்மைக்
குறைபாடுகளை முறையாக ஆய்ந்த நாம் அறிவு சார்ந்த முன்னவர்களான சித்தர்கள் பருண்மையாக ஆய்வு செய்து மக்களுக்கு கொடையாக வழங்கி இருக்கிறார்கள் .
1 .பெண்களுக்கு கருக்குழி விளக்கமற்று பாசு படிந்து இருந்தாலும்.
2 .கருக்குழி வளி மிகுந்து இருந்தாலும் .
3 .கருக்குழாயில் சதை வளர்ந்து இருந்தாலும்.
4 .கருக்குழையில் பூச்சிகள் இருந்தாலும்.
5 .கருக்குழாயில் இரத்தம் கட்டி இருந்தாலும்.
6 .கருக்குழாயில் தசை திரண்டு மதத்திருந்தலும்
கருக்குழாய் உள்ளே விந்தணுக்கள் செல்லாது . என பருண்மையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள் . இவை களுக்கு முறையே தனியே ஒவ் ஒன்றக்கும். தனியான குறி குணங்களும் தனியான மருத்துவமும் கூறப்பட்டு உள்ளது .முறையான மருத்துவர் எந்த நோய் பற்றி இருக்கிறது என கண்டறிந்து நோயில் இருந்து விடுவிப்பார் .
மண்சோறு
இந்த சிக்கலுக்கு மண் சோறு எங்ஙனம் தீர்வாக இருக்க முடியும் ? இதுவும் அறிவியல் பார்வை கொண்டது தான் அதாவது முறையாக எரியோம்பல் (ஆசனப்பயிற்சி ) செய்ய கூறினால் எனக்கு வேலை இருக்கிறது செய்ய இயலாது என வாய் கூசாமல் கூறும் தாய் குளங்கள் இப்படி கண்மூடித்தனமான செய்கை களை கூறினால் ஏற்பார்கள் என்பதால் இப்படி செய்யப்பட்டதாகும்.
இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் இந்த ஆசனம் செய்வதால் பெண்களின் கருப்பை குற்றங்கள் பெரும்பான்மை தீரும் . எனவே இன்றைய இளம் பெண்கள் இந்த மகாமுத்தர ஆசனத்தை நாளும் பழகி வந்தால் கருப்பை குறைபாடுகள் தீரும் . அவற்றோடு ஜானு காசியாசனம் என்ற ஆசனங்களை முறைப்படி செய்து வரலாம் . இவற்றோடு கருப்பையை வெப்பம் அடைய செய்யும் காரம் ,புளி, தள்ளி எள் நெய் குளியல் செய்து கருப்பை பலமடையும் குமரி சேர்ந்த மருந்து களை எடுத்துவர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் குழந்தைபேறு எளிதில் கிட்டும் அதேவேளை காபின், கோக் போன்றவை சேர்ந்த மயக்கப் பொருட்களை நீக்க வேண்டியது தேவையாகும். 
நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் .
[29/01, 9:31 PM] ‪+91 81247 00567‬: முடி வளர
*வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
*கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது உடனடியாக நின்று விடும்.
*வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வது நிற்கும்.
[29/01, 9:32 PM] ‪+91 81247 00567‬: பெருங்காய லேகியம் :- 
பொரித்த காயம், கிராம்பு, வால் மிளகு, சிற்றரத்தை, கோஷ்டம், அதுமதுரம், இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, ஏலம், செவ்வியம், கண்டுபாரங்கி, சடமாஞ்சில்,
வாய்விளங்கம், கடுஞ்சீரகம், சோம்பு, சதகுப்பை வகைக்குப் பலம்1/2, சுக்கு, மிளகு, திப்பிலி, திப்பிலிமூலம், தாளிசபத்திரி, கசகசா வகைக்குப் பலம்1/4, பரங்கிச்சக்கை பலம்-1, ஓமம் பலம்-21/2,ஜாதிக்காய் பலம்-1/8, இவைகளை இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து வைத்துகொள்க. பின்பு 20-பலம் பனைவெல்லத்தை ஜலம் விட்டுக் கரைத்து வடிக்கட்டி ஓர் கடாயிலிட்டு அடுப்பிலேற்றி எரித்துபாகுபத்தில் முன் தயார்செய்து வைத்துள்ள சூரணத்தைக் கொட்டிக் கிளறி, 5-பலம் நெய் சேர்த்துக் கிண்டி இறக்குக.
இதில் வேளைக்கு அரை தோலா வீதம் தினம் இருவேளையாக கொடுத்துவர பிரவித்த ஸ்திரீகளுக்கு காணும் உதிரச்சிக்கலை நீக்கி தகத் தடையினால் ஏற்படக்கூடிய நோய்கள் யாவும் வராதபடி தடுக்கும்.
[29/01, 9:32 PM] ‪+91 81247 00567‬: கணனி முன்பு அதிக நேரம் வேலை செய்பவரா? உங்களுக்கான சில டிப்ஸ்
இன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த வேலையாக இருப்பினும் கணனி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது.
இதனால் கணனியின் பயன்பாடுகள் அதிகம் கொண்டவர்கள், உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
1. முதலில் அதிக நேரம் கணனியை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கணனி திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது. இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.
2. தொடர்ந்து கணனி முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொரு முறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.
3. கணனியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும். இது போல் செய்வதால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.
4. பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
5. டைப் செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறப்பாக சப்போர்ட் கொடுக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக குறைக்க முடியும்.
6. கணனி திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம்.
[29/01, 9:32 PM] ‪+91 81247 00567‬: ஆரோக்கியம் தரும் உணவுகள்
பாதாம் பால்
 குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்ககூடிய சிறந்த உணவாகும். பாதாம் பால் தோல் நிறத்தை அதிகரிக்க செய்து முகத்திற்கு பொழிவை தருகிறது.. பாதாமை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் மேம்படுவது மட்டுமல்லாமல் தசைகளை வலுவடையச்செய்கிறது. மேலும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பாதாம் உதவுகிறது.
பேரீச்சம்பழம்:
பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து தினமும் இளம்பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும். இது சிறந்த மருத்துவ பலன்களை கொண்டது. இரும்புசத்து மற்றும் நார்சத்து அடங்கியுள்ள பேரீச்சம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள ஹார்மோன்களில் நிலையை சரிசெய்ய உதவுகின்றது.. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் கொண்ட பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து பாலுடன் தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்..
அக்ரூட் பருப்பு:
உடல் பருமனாக காணப்படுபவர்கள் உடலை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க விரும்பினால் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. இதை சாப்பிட்டால் உடல் எடையை குறைத்து கொள்ளலாம் மேலும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அக்ரூட் பருப்புகள் மிக நல்லது. அக்ரூட் பருப்புகள் ரத்த ஒட்டத்தை சீராக்கி மனஅழுத்தத்தை குறைக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.
உலர்திராட்சை:
இரும்புசத்து கொண்ட உலர்திராட்சை பழத்தை இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடலாம். உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு எடை குறைவாக இருந்தால் நாளும் 5 உலர் திராட்சைகளையாவது சாப்பிடகொடுங்கள். பின்னர் உங்கள் குழந்தையின் எடை அதிகரிப்பதை பார்க்கலாம். செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கபடுபவர்கள் உலர் திராட்சை பழங்களை சாப்பிடலாம்.
முந்திரி பருப்பு:
முந்திரி பருப்பு இயற்கையின் அதிசயம். இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார் புரதம், ஆகிய சத்துகளைகொண்டது. முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது முந்திரி பருப்பு.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-