மண்சோறும் குழந்தைப் பேறும் :-
மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் ) இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது . இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. முறையில்லாத நடவடிக்கையும் கூட .பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள். இந்த முறையற்ற குமுகம் ஆணாதிக்க குமுகம் பெண்ணை பிள்ளை பேறும் பொறியாக (இயந்திரமாக )பார்க்கிறது . குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை. கருப்பை சார்ந்த குறைபாடுகள் . வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது . பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . ...