ஜோதிட தகவல்

ஜோதிட தகவல்
- - - - - - - - - - - - - - - - - - -
ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது ஜாதகரின் உயிரைக் குறிக்கும் உயிர் புள்ளி ஆகும் . இங்கிருந்து ஒரு ஜாதகரின் இந்த பிறப்பு தொடங்குகிறது . அந்த லக்னமே ஒரு ஜாதகத்தின் முதல் பாவகமாக இயங்குகிறது.
லக்னத்தை கொண்டு ஜாதகரின் உயிர் தன்மை தோற்றம் குணாதிசயம் உடல்பலம் அவர் எந்தவிதமான கர்மாவை சுமந்து கொண்டிருக்கிறார் போன்ற தகவல்களை அறியலாம். அந்த லக்னம் நிற்கும் புள்ளியானது எந்த கிரகத்தின் சாரம் வாங்கியுள்ள கே அதற்கு தகுந்தவாறு அவரது தோற்றமும் குணாதிசயமும் பழக்கவழக்கங்களும் உண்டாகும். லக்னம் வாங்கியுள்ள சாரத்தின்படி என்ன பலன் என்று பார்ப்போம். இது பொதுபலன்கள் தான். லக்னாதிபதி நின்ற வீடு அதன் தன்மைகள் பஞ்சபூத தத்துவம் சரம் ஸ்திரம் உபயம் போன்ற காரணிகளின் அடிப்படையில் சற்று மாற்றங்கள் இருக்கும்.

லக்னம் சூரியன் சாரம் வாங்கியிருந்தால்:

உஷ்ணமான தேகமும் உடையவர் கோப குணம் உடையவர் தைரியமானவர் துணிச்சலான முடிவுகள் எடுக்கக்கூடியவர் ராஜ வாழ்க்கை வாழ எண்ணம் உடையவர் தண்டிப்பார்கள் நெஞ்சு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் கம்பீர நடை நடப்பார்கள் மனம் உடையவர்கள் தலைமை தாங்கும் பண்பு உடையவர்கள் வலது கண்ணில் நோய் உடையவர்கள் காடுகளை சுற்றிவர எழுப்பப்படுவார்கள் கரடுமுரடான பயணங்கள் செல்ல விருப்பப்படுவார்கள் சென்று வருவார்கள் சிறந்த சிவபக்தர்களாக இருப்பார்கள் பஞ்சாட்சர மந்திரம் ஜெபிப்பார்கள் கௌரவத்தை விரும்புவார்கள் வெள்ளை நிற ஆடைகளை விரும்பி அணிவார்கள் குங்குமப் பொட்டு வைத்துக்கொள்ள விருப்பப்படுவார்கள் தயாள குணமும் மணமும் இருக்கும் திட்டமிட்டு வாழத் தெரியாமல் பணத்தை எண்ணிப் பாராமல் செலவு செய்துவிட்டு கஷ்டங்களை ஏற்றுக் கொள்வார்கள் புண்ணியமான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள் தாத்தா பிரபலமான நபராக இருப்பார் ஆளுமை அதிகாரம் அன்பு மிக்கவர்கள் படபடவென்று பேசுவார்கள் வயிறு சார்ந்த உபாதைகள் இருக்கும் பகல் நேரப் பணி புரிவார்கள் இவர்கள் வெளிச்சமான இடத்தில் இருப்பார்கள் நுரையீரல் இருதயம் சார்ந்த பாதிப்புகள் இருக்கும் இயற்கை வழிபாடு செய்வார்கள் தீப வழிபாடு செய்வார்கள் கயிற்றுக் கட்டிலில் படுக்க விருப்பப்படுவார்கள் ஆற்றங்கரை காடு மலைகளை சுற்றி வர எழுப்பப்படுவார்கள் தந்தையை நேசிப்பார்கள் தலை சம்பந்தப்பட்ட வலி அடிக்கடி வரும் இவர்கள் இருக்கும் வீடு சதுரமாக இருக்கும்.

லக்னம் சந்திரன் சாரம் வாங்கி இருந்தால்:

தாயின் மீது பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள் குழப்பவாதிகள் ஆக இருப்பார்கள் தெளிவான மனம் இருக்காது முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் எதிலும் திருப்தி அடையமாட்டார்கள் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்கள் செய்வார்கள் அல்லது அந்த தொழிலை விரும்புவார்கள் கலை ரசனை உடையவர்கள் சிலருக்கு காதல் திருமணம் உண்டாகும் சந்திரன் நன்றாக இருந்தால் மனோபலம் உடையவர்களாக இருப்பார்கள் தான் சொத்துக்களை அனுபவிப்பார்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வார்கள் தியானம் யோகா போன்ற பயிற்சிகள் செய்வார்கள் இடது கண்ணில் குறைபாடு இருக்கும் மென்மையாக பேசுவார்கள் சிந்திக்கும் ஆற்றல் இருக்கும் கடன் தொல்லை இருக்கும் தாய்வழி உறவுகள் மீது பாசம் உடையவர்களாக இருப்பார்கள் நீர்நிலைகளை விரும்புவார்கள். குளிர்ச்சியான உணவுகள் பானங்கள் விரும்பி அருந்துவார்கள் தாய்மை குணம் இருக்கும் அதே சமயத்தில் தைரியம் பிடிவாதம் பொறாமை குணமும் இருக்கும் ஞாபக மறதி உண்டாகும் கடல் கடந்த பயணங்கள் செய்வார்கள் வெள்ளை நிற ஆடைகளை விரும்பி அணிவார்கள் வேகமான நடை நடப்பார்கள் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சினை சளி தொந்தரவு சைனஸ் காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் உண்டாகும் இவர்கள் இரவில் பணி செய்வதை விரும்புவார்கள் விலாசத்தை விரும்புவார்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள் பால் பொருட்களை விரும்பி அருந்துவார்கள் மாரியம்மன் கோவில் வழிபாடுகள் செய்வார்கள்.

லக்னம் செவ்வாய் சாரம் வாங்கி இருந்தால் .

ஜாதகர் கட்டுடல் பெற்றவர் நிலம் பூமி மனை சேர்க்கை இருக்கும் சிவப்பு நிறம் விரும்புவார்கள் காவி நிறம் விரும்புவார்கள் சகோதரர்கள் மீது பாசமாக இருப்பார்கள் உயரமுடையவர் வெற்றி வாகை சூடியவர் ஆத்திரம் மூர்க்க குணம் ஆணவம் அகங்காரம் இருக்கும் அவசர புத்தி பொறுமையின்மை சண்டையிடும் குணம் இருக்கும் இவர்கள் சீருடை பணிபுரிவார்கள் ஆசை படபடப்பு மூச்சு குணம் கிடைக்கும் அற்ப புத்தி முரட்டு குணம் இருக்கும் ஆயுதங்களை எளிதாக கையாள்வார்கள் வீரமிக்கவர்கள் பெரிய குணமிருக்கும் முருக பக்தர்கள் ஆக இருப்பார்கள் வீரமுடைய தீப வழிபாடு செய்வார்கள் குதிரையைப் போல வேகமாக நடப்பார்கள் தொழில் நுட்ப படிப்பு உண்டாகும் உடல் சார்ந்த தொழில் செய்வார்கள் படபடப்பாக பேசுவார்கள் உப்பு உவர்ப்பு சுவைகளை விரும்புவார்கள் உடற்பயிற்சிகள் செய்வார்கள் வீர சாகசங்கள் செய்வார்கள் அடிக்கடி மருத்துவமனை சென்று பார்ப்பார்கள் மாமிசம் விரும்பி உண்பார்கள் இவர்கள் ரத்த தானம் செய்வது மிக நன்று விபத்துக்களை பார்ப்பார்கள் கார சாரமான உணவுப் பொருட்களை உண்பர்கள்.

லக்னம் புதன் சாரம் பெற்று இருந்தால்:

பண்டித தன்மை பெற்றவர்கள் கல்விமான்களாக இருப்பார்கள் சகலத்தையும் எளிதாக கற்பார்கள் பேச்சாற்றல் எழுத்தாற்றல் கணிதப் புலமை நிபுணத்துவம் வியாபாரத்தில் நன்றாக இருக்கும் நண்பர்கள் இந்த உடையவர்கள் காதல் இருக்கும் இதிகாசங்கள் இருக்கும் ஜோதிட சாஸ்திரம் விரும்புவார்கள் பயந்த சுபாவம் கொண்டவர்கள் ஓவியம் வரையும் தன்மை இருக்கும் தாய்மாமன் உறவு சிறப்பாக இருக்கும் கவிதைகள் கட்டுரைகள் பாடல்கள் எழுதுவார்கள் விஷ்ணு பக்தர்கள் ஆக இருப்பார்கள் வேகமான நடை உடையவர்கள் நூலகம் சென்று படிக்க விரும்புவர்கள் புத்தகப் பிரியர்கள் சட்ட புலமை பெற்றவர்கள் தரகுத் தொழில் எளிதில் கைகூடும் சிறந்த பேச்சாளர்கள் மென்மையான குணம் உடையவர்கள் சந்திக்கும்போது கைகுலுக்கி பேச விரும்புவார்கள் தோளோடுதோள் அனைத்து பேசுவார்கள் நடன நாட்டிய விரும்புவார்கள் இசை பிரியர்கள் இசைக்கருவிகள் இசைப்பார்கள் மக்கள் கூடும் இடங்களில் விரும்புவார்கள் தேரோட்டம் நடக்கும் இடத்திற்கு செல்வார்கள் பச்சை காய்கறிகளை விரும்பி உண்பார்கள் நகைச்சுவை பேச்சு பேசுவார்கள் தொலை தொடர்பு துறையில் தொடர்புகொள்வார்கள் பத்திரிக்கை துறை ஊடகம் போன்ற துறைகளில் ஈடுபடுவார்கள் ராஜதந்திரம் மிக்கவர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இருப்பார்கள்.

லக்னம் குருவின் சாரம் பெற்றிருந்தால்:

சாந்தம் பொறுமை குணம் உடையவர்கள் சிறந்த பக்திமான்கள் ஆன்மீக சிந்தனை தர்ம சிந்தனை உடையவர்கள் தர்மகாரியங்கள் விரும்பி செய்வார்கள் தர்மகர்த்தா பணி ஏற்பார்கள் சமூக சேவைகளை விரும்பி செய்வார்கள் நன்னடத்தை உடையவர்கள் புத்திரபாக்கியம் உடையவர்கள் ஆன்மிக குருமார்களை ஆசிர்வாதம் வாங்குவார்கள் இவர்கள் நீண்டகால புகழ் பெறுவார்கள் பெரிய மனிதன் தோரணையில் இருப்பார்கள் பருத்த தேகம் உடையவர்கள் தொப்பை வயிறு உடையவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள் தீர்த்த யாத்திரை ஆன்மீக யாத்திரை சென்று வருவார்கள் நல்ல ஞானம் உடையவர்கள் தவம் செய்ய விரும்புவார்கள் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள் சுய கட்டுப்பாடு உடையவர்கள் சுலோகங்களை சொல்லுவார்கள் குருமார்களிடம் உபதேசம் பெறுவார்கள் உபன்யாசம் இதிகாசங்களை விரும்பி கேட்பார்கள் நாங்கள் விரும்பி செய்வார்கள் திருப்பணிகள் மேற்கொள்வார்கள் சாஸ்திர ஞானம் உடையவர்கள் மதக் கோட்பாடுகள் வாழ்வார்கள் உயர் குல தொடர்பு உடையவர்கள் புனித நீராடுவார்கள் பசுக்களை விரும்பி பராமரிப்பார்கள் தங்க ஆபரணங்களை விரும்பி அணிவார்கள் நீதிபதி நீதித்துறையில் பணிபுரிவார்கள் ஆசிரியர் பணி அமையும் அல்லது பிறருக்கு உபதேசம் செய்வார்கள் தேன் இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள்.

லக்னம் சுக்கிரன் சாரம் பெற்றால் :

நல்ல அழகு உடையவர்கள் தன்னை அழகு படுத்திக் கொள்ள பயப்படுவார்கள் ஆடம்பர நாட்டமுடையவர் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிகலன்கள் அணிவார்கள் அடிக்கடி அழகு நிலையம் சென்று வருவார்கள் வாசனை திரவியங்களை விரும்பி பூசுவார்கள் அலங்கார பிரியர்களாக இருப்பார்கள் கலைகளில் ஆர்வம் உண்டாகும் காமம் விருப்பம் இருக்கும் அழகை ரசிப்பார்கள் சப்தங்களை இசைப்பார்கள் மதுபான வகைகளின் மீது பிரியம் உள்ளவர்கள் தாம்பத்திய உறவை விரும்புவார்கள் திருமண பந்தம் நன்றாக இருக்கும் கன்னத்தில் குழி விழும் இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள் கற்பனை எண்ணமுடையவர்கள் பின் வாழ்க்கை சிறக்கும் போஜனப் பிரியர்கள் கூட்டாளிகள் அதிகம் இருப்பார்கள் சிற்றின்ப நாட்டம் இருக்கும் பெண்களின் நட்பு அதிகமாக இருக்கும் தாய் அத்தை மகள் சகோதரி மீது பாசமாக இருப்பார்கள் முகம் தெளிவாக அழகாக இருக்கும் இரவு பணி விரும்புவார்கள் அழகு பொருள் விற்பனை செய்யும் இடம் சென்று வருவார்கள் அல்லது அழகு நிலையம் அழைப்பார்கள் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபடுவார்கள் துணிமணிகள் வியாபாரம் செய்யலாம் விரும்புவார்கள் நன்றாக ஓவியம் வரைய வீடு வாகனம் அமையும் வட்டி மூலம் வருமானம் பெறுவார்கள் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள் அடிக்கடி கேளிக்கை விடுதி சென்று வருவார்கள்.

லக்னம் சனி சாரம் பெற்றால் :

ஆயுள் பலம் உள்ளவர்கள் அனுபவசாலிகள் முதிர்ச்சியான தோற்றம் உடையவர்கள் கம்பளி ஆடைகளை விரும்புவார்கள் கால் மூட்டுகளில் வலி உடையவர்கள் உடலில் ஏதாவது சிறு ஊனம் இருக்கும் என்னை பண்டங்களை விரும்புவார்கள் உதவிகளை செய்வார்கள் தேச சஞ்சாரம் செய்வார் வாய்வு தொல்லை உடையவர்கள் மந்த குணம் உடையவர்கள் மெதுவாக நடப்பார்கள் இரும்பு பொருட்களை அதிகம் பயன்படுத்துவார்கள் வாத நோய் உடையவர்கள் விரும்புவார்கள் யோகம் உடையவர்கள் வெளிநாட்டில் வேலை அமையும் ஆகாய விமானங்களை விரும்புவார்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காது வெளிநாட்டு வேலை கிடைக்கும் பஞ்ச குணம் இருக்கும் எருமை வளர்ப்பார்கள் குளிர்ச்சியை விரும்புவார்கள் இந்த தேகம் உடையவர்கள் அடிக்கடி செருப்பு மாற்றுவார்கள் தன்மை உடையவர்கள் போதைப்பொருள் பழக்கம் இருக்கும் ஒவ்வாமை தன்மை உடையவர்கள் கஷ்ட ஜீவனம் இருக்கும் பயம் நடுக்கம் உடையவர்கள் விவசாயம் செய்வார்கள் திருட்டு குணம் இருக்கும் நெஞ்சம் உடையவர்கள் இரும்பு எண்ணெய் வியாபாரம் கருமை நிற பொருட்கள் வியாபாரம் நன்மை தரும் துப்புரவு பணி முடி வெட்டும் பணி கழிவு பொருட்களை நீக்கும் பணி கனரக வாகனங்களை ஓட்டும் பணி குவாரிகளில் பணிபுரிதல் போன்றவை உண்டாகும் நீதிபதிகளாகவும் இருப்பார்கள் கடைநிலை ஊழியராக இருப்பார்கள் இருட்டை விரும்புவார்கள் காடு மலைகளை சுற்றி வருவார்கள்.

லக்னம் ராகு சாரம் பெற்றிருந்தால்:

தந்தை வழி தாத்தா பாட்டி போன்ற தோற்றம் குணாதிசயம் உடையவர்கள் வயதான முதுமையான தோற்றம் உடையவர்கள் ஏவல் பணி அமையும் வாய் உதடு போன்றவற்றில் பிரச்சினைகள் இருக்கும் மோசடிகள் செய்வார்கள் சற்று பெண் தன்மை உடையவர்கள் கறுப்பு கருநீல நிறம் விரும்புவார்கள் யோகாசனம் செய்வார்கள் உளுந்தினால் ஆன பண்டங்களை விரும்புவார்கள் சூதாட்ட எண்ணம் இருக்கும் நிழல் தொழில்கள் அமையும் பதுக்கல் வியாபாரம் அமையும் அந்நிய பாஷைகளைப் பேசுவார்கள் மது அருந்தும் தன்மை இருக்கும் காடு மலைகளை சுற்றுவார்கள் இவர்கள் இருக்கும் இடம் அகலமான வீதியாக இருக்கும் சுற்றுலா பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருவார்கள் இவர்கள் இருக்கும் இடம் அகலமான வீதியாக இருக்கும் விஷக்கடி ரோகம் இருக்கும் விஷம் அருந்துவார்கள் இவர்கள் சிந்தனை பிரமாண்டமானதாக இருக்கும் சூழ்ந்திருக்கும் மருந்து ரசாயன பொருட்கள் தொழில் செய்யலாம் மந்திர தந்திரங்களில் ஈடுபாடு உடையவர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவார்கள் குடை பிடிக்கும் குணம் இருக்கும்.

லக்னம் கேது சாரம் பெற்றால் :

விநாயகர் வழிபாடு விரும்பி செய்வார்கள் இவர்கள் செயல்கள் மோட்சத்தை நோக்கியதாக வேதாந்தம் பேசுவார்கள் சித்த வைத்தியம் செய்வார்கள் அல்லது சித்த வைத்தியம் எடுத்துக் கொள்வார்கள் கங்கா ஸ்நானம் செய்வார்கள் தவம் ஏற்றுவார்கள் நிலையற்ற மனம் உடையவர் மந்திர சாஸ்திரம் கற்பார்கள் பிரம்ம ஞானம் உடையவர்கள் வயிறு மற்றும் கண் வியாதி உடையவர்கள் சுருட்டை முடி உடையவர்கள் வைராக்கியம் உடையவர்கள் எதிரிகளால் தொல்லை உண்டாகும் தாய்வழிப் பாட்டன் பாட்டி குணாதிசயங்கள் உண்டாகும் சிவபக்தர்களாக கொண்டவர்களாக இருப்பார்கள் தெய்வங்களை விரும்பி வழிபடுவார்கள் காலணி இல்லாமல் நடக்க விரும்புவார்கள் ஆன்மிகத் தொண்டு செய்வார்கள் உறவுகளால் வஞ்சிக்கப்படுவார்கள் உண்டாகும் தற்கொலை எண்ணங்கள் உடையவர்கள் மர்ம உறுப்புகளில் நோய் உடையவர்கள் அருள்வாக்கு தன்மை இருக்கும் கைகளில் மந்திரித்த கயிறு கட்டிக் கொள்வார்கள் தர்ப்பாசனத்தில்அமர்ந்து தியானம் செய்வார்கள் .

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-