செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்

லக்னத்திற்கு 2ம் இடம் குடும்பம்
லக்னத்திற்கு 4ம் இடம் தாய்
லக்னத்திற்கு 7ம் இடம் கணவர் (அ) மனைவி
லக்னத்திற்கு 8ம் இடம் மாங்கல்யம்
லக்னத்திற்கு 12ம் இடம் அயன்சயன யோகம் (தூக்கம் சாப்பாடும்)

2ல் செவ்வாய்: குடும்ப பற்று இல்லாமல் இருப்பர். இவரின் பேச்சும் எடுபடாது

4ல் செவ்வாய்: தாய்க்கு பலன் குறைவு. தாய்க்கு தோஷம் காட்டும்.

7ல் செவ்வாய்: மனைவிக்கு தோஷம்.

8ல் செவ்வாய்: ஆயுள் தோஷம் காட்டும். எதிர்பாராத விபத்து ஏற்படும்.

12ல் செவ்வாய்: தூக்கமின்மை, கணவன் மனைவி இல்லற பாதிப்பு

செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்

1. செவ்வாய் மேஷம் அல்லது விருச்சிகத்தில் ஆட்சி பெற்றிருந்தால் தோஷமில்லை.
2. செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருந்தால் தோஷமில்லை.
3. செவ்வாய் கடகத்தில் நீசமாக இருந்தால் கூட தோஷமில்லை.
4. சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷமில்லை.
5. ரிஷிப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
6. மிதுனம் அல்லது கன்னி ஆகிய வீடுகள் லக்னத்திற்கு 2ம் இடமாக வந்து, அங்கு செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.
7. செவ்வாய் இருக்கும் 4ம் வீடு மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தால் தோஷமில்லை.
8. செவ்வாய் இருக்கும் 7ம் வீடு கடகம் அல்லது விருச்சிகமாக இருந்தால் தோஷமில்லை.
9. செவ்வாய் இருக்கும் 8ம் இடம் தனுசு அல்லது மீனமாகில் தோஷமில்லை.
10. செவ்வாய் இருக்கும் 12ம் இடம் ரிஷபம் அல்லது துலாமாகில் தோஷமில்லை.
11. செவ்வாய் இருக்கும் 2ம் இடம் புதன் வீடாக அமைந்தால் தோஷமில்லை.
12. செவ்வாய் இருக்கும் 4ம் வீடு செவ்வாய் வீடாக அமைந்தால் தோஷமில்லை.
13. செவ்வாய் இருக்கும் 7ம் வீடு சந்திரன் வீடாக அமைந்தால் தோஷமில்லை. அல்லது செவ்வாய் உச்சம் பெறும் வீடாக இருந்தாலும் தோஷமில்லை.
14. செவ்வாய் இருக்கும் 8ம் வீடு குரு வீடாக அமைந்தாலும் தோஷமில்லை.
15. செவ்வாய் இருக்கும் 12ம் வீடு சுக்கிரனின் வீடாக அமைந்தாலும் தோஷமில்லை.
16. செவ்வாய் குருவுடன் சேர்ந்தால் தோஷமில்லை. அல்லது குருவால் பார்க்கப்பட்டாலும் தோஷமில்லை.
17. செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்தாலும் தோஷமில்லை. பார்க்கப்பட்டாலும் தோஷமில்லை.
18. செவ்வாய் புதனுடன் சேர்ந்தாலும் அல்லது புதனால் பார்க்கப்பட்டாலும் தோஷமில்லை.
19. செவ்வாய் சூரியனுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது சூரியனால் பார்க்கப்பட்டாலும் தோஷமில்லை.
20. செவ்வாய் சனியுடன் கூடினாலும் அல்லது பார்க்கப்பட்டாலும் தோஷமில்லை.
21. செவ்வாய் ராகு கேதுவோடு கூடினாலும் அல்லது பார்க்கப்பட்டாலும் தோஷமில்லை.
22. செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டின் அதிபதி லக்னத்திற்கு 1,4,5,7,9,10 ஆகிய இடங்களில் இருந்தாலும் தோஷமில்லை.
23. செவ்வாய் தன் நட்பு கிரகங்களான சூரியன், சந்திரன், குரு ஆகியோரின் வீடுகளான சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகியவற்றில் இருந்தாலும் தோஷமில்லை.
கும்பத்தில் செவ்வாய் இருந்தால் மட்டும் செவ்வாய் தோஷம்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-