திருமணத்திற்கு பிறகு பிரிவு ஏன்?
திருமணத்திற்கு பிறகு பிரிவு ஏன்?
****************** ******** ***********
நிறைய தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு கொண்டு மணமுறிவை சத்திப்பதை சமீபகாலமாக அதிகமாகப் பார்க்கிறேன், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் பலவாக இருக்கலாம்,
ஆனால் அந்த காரணங்களுக்கு மூலம் சில கிரக அமைப்புகள் இருவர் ஜாதகங்களிலும் கண்டிப்பாக இருக்கும்,அதை நமது ஜோதிட அறிஞர்கள் விதிகளாக எழுதி வைத்துள்ளனர்,அவ்வாறான கிரக அமைப்பு கொண்டவர்கள் இணைந்து வாழ்வதில்லை,
மீறி வாழநேர்ந்தாலும் வேண்டா வெறுப்பாகவே காலத்தை ஓட்டுகிறார்கள்,
ஆகவே திருமணம் செய்வதற்கு முன் இந்த விதிகளை கவனித்து, ஆலோசித்து இணைக்கலாம்,
சுக்கிரன் 12ல் இருந்தால்,
சுக்கிரன் சந்திரன் இணைந்திருந்தால்,
சுக்கிரன் சந்திரன் நீச்சமானால்,
லக்னம் ஆறுக்கு எட்டாக இருப்பது,
இரண்டாம் பாவத்தில் நீச்ச கிரகம் இருப்பது,
5ம் பாவம் மலட்டு ராசியாக அமைவது,
லக்னம் சூரிய சந்திரனுக்கு மத்தியில் அமைவது,
சனி,புதன்,கேது 5 ல் அமைவது,
இருவரும் வியதிபாத,வைதிரிபாத யோகத்தில் பிறப்பது,
2,4,5,7,8,12,ம் பாவங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவர்கள் அமர்வது,
7ம் அதிபதி 12ல்,லக்ன ராகு,
12ம் அதிபதி 7ல்+பாவருடன்,
7,12,ம் அதிபதிகள் 10ல்,ராகு தொடர்பு.
7,12ம் அதிபதிகள் 5ல், 7ல் ராகு,
இந்த அமைப்புகள் எல்லாமே தம்பதிகளை பிரித்து விவாரத்துவரை கொண்டு செல்லும்,
எனவே ஆண்பெண் ஜாதகங்களில் இந்த கிரகநிலை உள்ளதா,அதற்காண திசா புத்தி நடைமுறையில் உள்ளதா என்பதை கவனமாக ஆராய்ந்து இணைத்தால் பிரிவினையைத் தவிர்க்கலாம்,
ஆக, ஆவணிமாதம் திருமணமாகப்போகும் தம்பதிகள் ஜாதகப் பொருத்தத்தோடு இவ்விதிகள் சரிபார்த்து மணம் முடிக்க,
Comments
Post a Comment