சூட்சும பரிகாரங்கள்

#சில சூட்சும பரிகாரங்களை அனைவரும் பயன் பெற கீழே கொடுத்துள்ளேன்.

(1) எதிரிகள் தொல்லை மற்றும் சோதனைகள் அதிகமானால் வெள்ளிக்கிழமைகளில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வர, எதிரிகள் நிலை செயல் இழந்து போகும்.
(2) மாமனார் மச்சினர் மச்சினி மாமியார் போன்ற உறவுகளிடம்இருந்து எதுவும் உதவி வரவில்லை எனில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் இலவச குடிநீர் வசதி செய்து வர, உதவிகள் வர ஆரம்பிக்கும்.
(3) அண்டை அயலார் மூலம் தொடர்ந்து தொல்லைகள் ஏற்பட்டால் தினசரி வீட்டு முன் 3 மெழுகுவர்திகளை ஏற்றி வேண்டி வர அவர்களின் கொட்டம் நிற்கும்
(4) கொடுத்த கடன் திரும்ப வரவில்லை எனில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு தினசரி 43 நாட்கள் நீல நிற பூவை வைத்து வேண்டி வர கடன் வசூலாக ஆரம்பிக்கும்
(5) விலை உயர்ந்த பொருட்களை இழந்து கொண்டே இருந்தால் சனிக்கிழமைகளில்வெளிர் நீல துணியில் எள் உருண்டைகள் வைத்து இரவு நேரத்தில் (8-9) தானம் செய்ய, விரயம் நிற்கும்.
(6) சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பண கஷ்டம் மற்றும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்-அப்படிப்பட்டவர்கள் யாரிடமும் இனாமாகவோ அல்லது நன்கொடையாகவோ எதுவும் பெறக் கூடாது. அதே போல் செய்யாத வேலைக்கு பணம் பெறுவது கூடாது. ஒவ்வொரு திங்களும் ஏதேனும் கோவிலில் 5 பாதாம் பருப்புகள் தானமாக வழங்கி வர நிலையில் நிச்சயமான மாற்றம் ஏற்படும்.
(7)உடல் நிலை மற்றும் நீண்ட ஆயுளுக்கு தினசரி 'ஓம் சாவித்ரியாயை நமஹ' மந்திரம் கூறி வர உடலில் முன்னேற்றம் உண்டாகும் .

என்னிடம் வரும் நபர்கள் எவ்வளவு எதிர் மறை சக்திகளோடு வந்தாலும் ஆலோசனை பெற்று செல்லும் போது நல்ல நேர் மறை சக்திகளோடு செல்வதாகவும் ஆனால் அது தொடர்ந்து இருக்க என்ன செய்வது என கேட்கின்றனர். தினசரி அரச மர வழிபாடு செய்து வர நேர் மறை சக்திகள் நம்முடனே இருக்கும். நல்லவை சித்திக்கும்.

#சாம்பிராணி தூபம்!!!

வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்குமத்தியில் வாக்குவாதங்கள்,திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும்உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது கீழ்க்கண்ட சாம்பிராணி தூபம். பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அனைத்தையும் பொடித்து சிறுது சம்பிராணியுடன் தூபம் தினசரி தொடர்ந்து 45 நாட்கள் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும். மேற்கண்ட பொடியோ பொருட்களோ கால்களில் பட கூடாது.ல் இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம்.
வெண்கடுகு மற்றும்
நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது.
மருதாணி விதை
திருமகளுக்குரியது.
அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும்.
வில்வம் மற்றும்
வேம்பு முறையே
சிவன் மற்றும் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள்தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள்.

1. வெண்கடுகு 250 கிராம
்2. நாய்க்கடுகு 250 கிராம
்3. மருதாணி விதை 250 கிராம்
4. சாம்பிராணி 250 கிராம்
5. அருகம்புல் பொடி 50 கிராம்
6. வில்வ இலை பொடி 50 கிராம்
7. வேப்ப இலை பொடி 50
கிராம்===================================

#நம்மை சூழ்ந்துள்ள எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட"உப்பு நீர்" பரிகாரம் !!!

சோம்பேறித்தனம்என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலைநேரம் தவறுதல்- வேகமின்மைதொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட உணர்ச்சிகள்மன அழுத்தம்திடீர் உடல் நிலை கோளாறுகள்திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்செய்வினை கோளாறுகள்மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்பேய் அல்லது ஆவிகள் அல்லது துர்ஆத்மாவினால்பயம்மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும் பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்" பரிகார முறையை பின்பற்றஅனைத்துகஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும் செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம் இது.

#தேவையானவை :

1. ஒரு பெரிய அளவு

2.தண்ணீர்

3.ராக் சால்ட்(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100% பயனும், இந்துப்பு மற்றும் கல் உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும் தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)

பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட் ராக் சால்ட் போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள இரண்டு கால்களையும் தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும் பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள் வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால், சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும்,சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும், சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர் இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும் உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த எதிர்மறைகரும் சக்திகள் விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும். இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க, நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.

#வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள் !!!

#வீட்டின் முன் இரண்டு மீன்கள் இருக்கும்படியானபடத்தை ஒட்டி வைத்து தினசரி பார்த்து வர நன்மைகள் உண்டாகும். ஒற்றை மீன் படம் பார்ப்பதை தவிர்க்கவும்.

#தினசரி வீட்டை விட்டு கிளம்புமுன் நீர் நிரம்பிய பாத்திரமோ அல்லது நீர் நிரம்பிய பக்கெட் பார்த்து செல்ல, போகிற விஷயம் சுபமாய் முடியும்.

#வழியில் செல்லும் பொழுது எதிரில் பிணம் தென்பட்டாலோ அல்லது பிணம் எரிவதை தற்செயலாக பார்க்க நேரிட்டாலோ சில நாணயங்களை பூமியில் போட்டு விட்டு அவ்விடத்தை விட்டு செல்ல, அந்த ஆத்மவினால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் ஏற்படாமல் இருக்கும்.

#முதல் ஆண் குழந்தையின் அரைஞாண் கயிற்றை பணப்பெட்டியில் வைக்க செல்வ வளம் சேரும்.

#தனியாகவும்,மன சோர்வுடனும்,தனக்கு யாருமே இல்லை என்ற மன நிலை காணப்பட்டாள் மழை நீரில் நனைய, மாற்றம் ஏற்படும்.

Comments

Popular posts from this blog

நுரையீரல் பலம் பெற:-

ஞாபக சக்திக்கு சூர்ணம்:-

இயற்கை ro water :-